MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 40 வீரப்பன் அய்யா அவர்கட்கு. நாங்கள் 2400 ச.அடி பரப்பு கொண்ட வீட்டு மொட்டை மாடியில் ஒளி ஊடுருவும் கூரை அமைக்க இருக்கிறோம். (தளத்தில் சிறி ய அளவில் மூலிகை சோப் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது ) பிவிசி, பாலி கார்பனேட் என பல வகை கூரைகள் சொல்கிறார்கள். செலவு குறைந்த, உறுதியான, லேசான கூரைப்பொருட்கள் ஏதாவது இருந்தால், அதன் குணாதிசயங்களோடு விலையையும் ஒப்பிட்டு எனக்குச் சொல்லுங்கள்.. - திருமதி. எம்.அர்ச்சனா, இல்லத்தரசி, விருகம்பாக்கம்


Answer:

உங்கள் வீட்டு மொட்டைமாடித் தளத்தில் நிறைய வெளிச்சமும் காற்றோட்டமும் உடைய கூரை அமைப்பது வரவேற்கத்தக்கது, அதற்கு மேலும் புதிய கூரைக் கட்டுமானப் பொருளைப் பயன்படுத்திட வேண்டும் என்கிற உங்கள் ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது. ஆனாலும், இரண்டு நிபந்தனைகளை விதித்துள் ளீர்கள்.

1. செலவு குறைந்த லேசான கூரைப் பொருள்.
2.உறுதியாக நிடித்து ழைக்கும் கூரைப் பொருள் எங்களுடைய கருத்துரைகள் இவைதான்.

1..Tata Structura / Jindal RHS / SHS எனப்படும் எஃகு உறுப்புகளைக் கொண்டு கூரைக் கட்டமைப்பு ஏற்படுத்தல் ,

2. அதன் மீது FRP (Fibre Reinforced plastic) 
அல்லது polycarbonate Double walled sheet-corrugated & Grooved கொண்டு மூடுவது தேவைகளை நிறைவு செய்யும் (எனிலும் பிவிசி தகடோ/ FRP / Polycarbonate plain தகடோ நீடித்துழைக்காது, விலையும் கூடுதல். எனவே கூடாது)

3.பக்கவாட்டுச் சுவர்களை- போதுமான சன்னல்கள் வைத்த ஃபிளைஆஷ் செங்கல் சுவர்கள் கொண்டு அமைத்திடலாம்.

இதன் செலவு:- 
எஃகு கூரையமைப்பு : ரூ. 150/ச.அடி,
Polycarbonate plain : : தகட்டுப் போர்வை ரூ. 400/ச.அடி. பக்கவாட்டுச் சுவர்கள், சன்னல்கள்

பூச்சுவேலை :
ரூ. 40 / ச.அடி.

கூடுதலாக டர்போ வெண்டிலேட்டர்கள் - 6 :
ரூ 1000/ ஒன்று . மொத்தச் செலவு : 
ரூ 15 லட்சம் ஆகலாம்.

இதை 30/40 நாட்களில் கட்டி நிறைவு செய்யலாம், பராமரிப்புச் செலவு குறைவு, வசதியாக உழைக்கக் கூடியது. எஃகுக் கூரை அமைப்புக்கு ஒரு திறமை வாய்ந்த வடிவமைப்புப் பொறியாளரை அனுகுங்கள்.

 

பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து..
சந்தாவிற்கு : 8825479234
ஆன்லைனில் படிக்க.. : www.buildersline.in



Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 41 ஐயா, நான் 15 ஆண்டுகளுக்கு முன்புதிருச்சி வயலூர் ரோடு உய்ய கொண்டான் திருமலையில் (நன்செய் நிலப்பகுதியில்) வீட்டு மனை வாங்கி வீடு கட்டினேன். அடித்தளத்தில் பைல் ஃபவுன்டேrன் இட்டு, அதன் மேல் அரனைக் கற்களால் அடித்தளம் அமைத்தேன். மணல் நிரப்பி ,நீர் நிரப்பி, அடி தளம் 1.5 சல்லி கற்களால் மூடப்பட்டது. பின், அதன் மீது (10 சதுரங்கள்) சுவர் எழுப்பி கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது கட்டிடத்தின் (தளத்தில் அடிப்பகுதியில் மணல் இறக்கம் ஏற்பட்டு ) அதிர்வு ஏற்படுகிறது. நடந்தால் “டப், டப்’, என்ற சப்தம் ஏற்படுகிறது. ஹால் பகுதி மார்பிள் கல்லாகவும், மற்ற ரூம், பகுதிகள் மொசைக் தரையாகவும் இடப்பட்டன. மார்பிள் தரையில் ஒரிடத்தில், ஒர் 5 அடி நீளத்திற்கு சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. மார்பிள் தரையில் 60% தரை உறுதியாக இருக்கிறது. மொசைக் தரையின் பெரும்பகுதி அதிர்வு காணப்படுகிறது. ஒரிரு இடங்களில் வெடிப்பு உள்ளது. இங்குள்ள தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டபோது தரைத்தளம் முழுவதையும் தோண்டிவிட்டு, மீண்டும் மணல் நிரப்பி, நீர் கட்டி ,அடித்தளத்தை உறுதிசெய்து அதன்மேல் தரை அமைக்க வேண்டும் என்கிறார்கள். நான் தெரிந்த ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டபோது , “அவர் முழுவதும் பெயர்க்க தேவை இல்லை சிறிய ஒருபகுதியை வெட்டியயடுத்து மணல் ,நீர் கொண்டு. நவீன முறையில் சரிசெய்யும் தொழில் நுட்பம் இருக்கிறது அதன் படி செய்தால் எளிதாகவும், செலவுகுறைவாகவும் செய்யலாம்’ என்று ஆலோசனை கூறினார். ஐயா, தாங்கள் இது குறித்து உங்கள் ஆலோசனையை தெரிவிக்க வேண்டுமாய் வேண்டுகிறேன். -சார்லஸ் ராஜரத்தினம், திருச்சிரப்பள்ளி


Answer:

தங்கள் கேள்வியில் கீழ்க்கண்ட தகவல்கள் தரப்படவில்லை.

1. உங்கள் வீடு பாரம் தாங்கும் சுவர் கொண்ட கட்டிட அமைப்பா? இல்லை, காங்கிரிட் தூண்களும், விட்டங்களும் உள்ளனவா? காங்கிரிட்டின் பலகத்தின் கனம் என்ன? உங்கள் வீட்டு முன் போக்குவரத்து சாலை உள்ளதா? அதில் அடிக்கடி பேருந்துகள் / சரக்குந்துகள் செல்கின்றனவா? தரைமட்டத்தில் (Ground Floor) பிளிந்து பீம் (Plinth Beam) போட்டுள்ளீர்களா?

நீங்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் உங்கள் வீடு ஒரு பாரம் தாங்கும் கட்ட அமைப்பு (காங்கிரிட் தூண்களும், விட்டங்களும் இல்லை) என்று கருதி கீழ்க்கண்ட கருத்துரைகள் தரப்படுகின்றன.

உங்கள் கட்டட அடி மனை மண்ணுக்கும் பிளிந்து பீம், மட்டத்திற்கும் உள்e (ஏறக்குறைய இரண்டு அடி உயரத்தை) இடைவெளியில், களிமண் , போடு மண் கொண்டு நிரப்பி முறையாகக் கெட்டிபடுத்தாமல் தரைத்தளம் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

களிமண் போடப்பட்ட போடு மண் கீழ் இறக்குவதால் மார்பிளிலும் மொசைக்கிலும் கீழ் இறக்கம் படிவுகள் (Settlement) ) ஏற்பட்டு தeப்பரப்பில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள கீழ் உள்ள நிரப்பு மண் / போடு மண் கெட்டியாக இல்லாததால் நடக்கும் போது அதிர்வும் டப், டப் என்ற சத்தமும் கேட்கிறது.

எனவே கீழ்க்கண்ட பழுது நீக்கும் முறை தெரிவிக்கப்படுகிறது.

(1) தரை மண் மட்டத்திலிருந்து ஒரு அடி ஆழத்தில் மண்ணையும், தeத்தையும் பெயர்த்து எடுக்கவும்.

(2)தeப்பரப்பில், இரண்டடிக்கு இரண்டடி இடைவெளியில் 3 அடி உயரத்தில் 3” விட்டமுடைய தார் பூசப்பட்ட சவுக்குக் கொம்புகளை 5 கிலோ சம்மட்டியால் உள்ள அடித்து நன்றாக இறக்கவும். சுமார் 200 சவுக்குக் கொம்புகள் அடித்திறக்க வேண்டியிருக்கும்,

(3) அதன் மீது (1’8” உயரத்திற்கு எட்டு அங்குல உயரம் (8”) உள்ள மூன்று அடுக்குகளாக மலை மாவு : செஞ்சரளை மண் 1:3 என்ற கலவை விகிதத்தில் (quarry dust : gravel 1:3) கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து திமிசு அல்லது மண் அமுக்கி (Earth Rammer) கொண்டு கெட்டிப்படுத்தவும்

(4) அதன் மீது (4”) நான்கு அங்குலம் உயரம் உள்ள pcc 1:4:8 போட்டு 5 நாட்களுக்கு நீராற்றவும்.
(5) இதன் மேலே உங்களுக்கு வேண்டிய மொசைக் ஓடுகளை்யோ / மார்பிள் பலகங்க்ளையோ கொண்டு தரை அமைக்கலாம்.

அடிமண்ணைக் கெட்டிப்படுத்தாமல் செய்யப்படும் எந்த பழுது நீக்கும் முறையும் முழுப்பயன் அளிக்காது. உங்கள் உதவிக்கு அலைபேசி எண் 98431 48939 (திருச்சி) தொடர்பு கொள்க.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234



Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 39 நான் திருத்தனியில் 880 ச.அடியில் தனி வீடு ஒன்றை தெரிந்த மேஸ்திரி துணையுடன் கட்ட இருக்கிறேன்.எனக்கு சிமெண்ட் தொடர்பான கேள்வி இதுதான். 1.சந்தையில் ஏராளமான சிமெண்ட் நிறுவனங்கள் உள்ளன. அது ஒவ்வொன்றும் ஏராளமான பிராண்டுகளை தயாரிக்கின்றன. அவற்றில் எது No.1 Cement ? ? 2.கான்கிரீட் தயாரிப்பதற்கு ஒரு வகை சிமெண்ட், பூச்சுவேலைக்கு ஒரு சிமெண்ட் பயன்படுத்த வேண்டும் என எனது உறவினர் சொல்கிறார். அது உண்மையா ? உண்மையயனில் கான்கிரீட் தயாரிப்பதற்கும், பூச்சுவேலைக்கும் எந்தெந்த சிமெண்டை பயன்படுத்த வேண்டும். -பா.கணேசன் ,கொத்தூர், நகரி


Answer:

யார் (தகவல் தெரிந்த பெரிய புத்திசாலி) இப்படியயல்லாம் தெரிவிக்கிறார்களோ!. இது, முற்றிலும் தவறான தகவல் எனினும் உறுதியான வலிமையான கட்டடத்திற்குக் கீழ்க்கண்டவற்றைப் பரிந்துரை செய்கிறோம்.

ஆனால், எல்லா வற்றிற்கும் PPC (எரிசாம்பல் 35% வரை கலந்தது) சிமெண்ட் ஒன்றே ஏற்றது.

1. அடித்தளம், தூண், விட்டங்கள், பலகங்கள் - M25 தரம் (1:1:2)
2. கட்டுவேலை - PPC - சிமெண்ட் கலவை விகிதம் 1:5
3. பூச்சுவேலை - PPC சிமெண்ட் கலவை விகிதம் 1:6

முதல் பத்தியைப் படித்து மறந்து விட்டேன்.
எந்தக் காரணத்திற்காகவும் மேஸ்திரி மூலமாக
வேலையாள் ஒப்பந்தத்தில் (Labour Contract) வீடு கட்டவே கூடாது. அலைச்சலும் கூடுதல் செலவுமே (இறுதியில்) மிஞ்சும். தகுதியுடைய நல்ல நம்பிக்கையுடைய ஒரு கட்டுமானப் பொறி யாளரிடம் கொடுத்து (Plinth Area contract or total lump sun contract பதிவு பெற்ற ஒப்பந்தத்தினுடன் வேலையைச் செய்யுங்கள். கட்டடத்தின் உறுதிக்கும் வலிமைக்கும் (Structural Stability) ஒப்பந்தக் காரரைப் பொறுப்பாக்கி ஒப்பந்தத்தைப் போடுங்கள்.

 

'பதிலளித்தவர் : பொறி. அ. வீரப்பன்
From Builders line Monthly
www.buildersline.in
For subscription : 8825479234



Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 40 நாங்கள் இருக்கும் வீடு கடந்த 5 ஆண்டுகளாக எந்த வொறு பிரச்சனையும் இல்லை. (சுவர் தாங்கும் கட்டுமானம்) ஆனால், சுமார் 2 மாதகாலமாக மொட்டை மாடி தளத்தில் வெடிப்புகள் பாளாம் பாளமாக விடுகின்றன. அதே சமயம் சுவர்களில் ஏது விரிசல் இல்லை. இதற்கு காரணம் என்ன? எப்படி சரி செய்வது? - சு.மேனகா, இல்லத்தரசி, ராம் நகர், கோவை


Answer:

நீங்கள் உங்களின் வீட்டின் இன்றைய நிலையினை ஏற்பட்டுள்ள குறைபாடுகளை முழுமமையாகத் தெரிவிக்கவில்லை.

1. உங்கள் வீட்டின் வயது என்ன? மொட்டை
மாடித்தளத்தில் பாவியுள்ள பரப்புப் பொருள் : இணைப்புக் கலவை எவை மழைக் காலங்களில் சுவர்களில் ஈரம் தங்குகிறதா (விரிசல் இல்லா விட்டாலும்) மொட்டை மாடித்தளத்தில் பெய்யும் மழை நீர் தேங்காமல் - 5 நிமிடங்களுக்குள்ளே ஓடிவிடுகிறதா? எனினும் கீழ்கன்டவற்றைக் கருதி - பழுதுநீக்குமுறைகளைத் தெரிவிக்கிறோம்.

 

மொட்டை மாடித்தளத்தில் Hydraulic pressel tiles (clay lrust red tiles) with joints pointed with cement mortaral 1:3 என்றால் வெடிப்புகள் ஏற்பட்டுத் தண்ணீர் தேங்கி ஈரமிருக்கும்.

 

மழைநீர் வடிகுழாய்களுக்குப் போதிய வாட்டமில்லாமல் இருந்தாலும் நிலலைமை மோசமாகும். மாற்றாக Hydraulic pressel tiles - mortars joints முழுமமையாகப் பெயர்த்து எடுத்துவிட்டு - கீழ்க்குறிப்பிடுவனவற்றைப் போடுக.

 

1. பெயர்த்தெடுத்த மேற்பரப்பில் மீது 20 மிமீ கனத்திற்கு நீர்த்தடுப்பு திரவம் கலந்த கூட்டுக்கலவை(combination mortars) பூசவும்.

 

2. அதன் மீது சாதாரண மொசைக் ஒடுகளை - நீர்த்தடுப்பு திரவம் கலந்த சிமெண்ட் மணல் கலவை (1:5) -( 12 மிமீ கனத்தில் ) மீது அழுத்திப்பதிக்கவும்
( வறண்டக்கலவை / Dry mix mortar கூடாது)

 

3. இணைப்புகளை மூடTile Grout பயன் படுத்தவும்.

 

4. நான்கு நாட்கள் நீராற்றலுக்குப் பின் - மொசைக் ஒடுகளின் மீது சொரசொரப்பான ஒரு ஒட்டு (Rough polishing-one) ஒட்டவும்.

 

5. மழைநீர் வடிகுழாய்களை வாட்டத்துடன் சரியாக அமைக்கவும் உதவிக்கு பொறிஞர் T. கோவிந்தராஜன் 94433 80092 , K. நாகராசன் 98422 31046 கோவை அவர்களைத் தொடர்பு கொள்க.

 

'பதிலளித்தவர் : பொறி. அ. வீரப்பன்
From Builders line Monthly
www.buildersline.in
For subscription : 8825479234



Q: பில்டர்ஸ்லைன் கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 37 நாங்கள் 1200 ச.அடி மனை வாங்கி, 600 ச.அடி யில் வீடு கட்ட உள்ளோம். (மனை நீளம் 40 அடி, அகலம் 30 அடி) வீட்டுக்கு முன்புறம் இடம் காலியாக விடுவது நல்லதா? பின்புறம் இடம் காலியாக விடுவது நல்லதா? அல்லது இருபுறமும் சமமான அளவு இடம் விட வேண்டுமா? அப்படியயனில் என்ன அளவுகளில் இடம் விட வேண்டும்? வழி காட்டுங்களேன்... - கோசல் ராமன், மின் ஊழியர், திருவாலங்காடு


Answer:

இத்துடன் இணைத்துள்ள வரைபடத்தைப் பாருங்கள். முன்பக்கம் 5 அடி, பின்பக்கம் 10 அடி பக்கவாட்டில் முறையே 3 அடி இப்பொழுது கட்டப்படும் வீட்டின் பரப்பு (30-6) X (40-50-10) = 24X25 = 600 ச.அடி. வெளிச்சம் காற்றோட்டம் பெறுவதற்கும், பின்பக்கத்தில் துணி காயப்போட, நிலத்தடி நீர்த்தொட்டி அமைக்க. பெண்டிர் வீட்டு வேலைகளைப் பார்க்க வசதியாக இருக்கும்.

 

பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call :8825479234
www.buildersline.in



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000