Q: சிவில் பொறியியல் படிப்பை பாதியில் விட்டு விட்டேன். ஆனாலும் கட்டுமானம் தொடர்பான பல வேலைகள் எனக்கு தெரியும். எனவே சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிய விருப்பம். கட்டுமான வேலைக்கு வெளிநாடு செல்லலாமா?
Answer:
வரலாம், தாராளமாக வரலாம். உங்களுக்கு மனத்திடம் அதிகம் இருந்து பணம் மட்டும் குறிக்கோளாக பார்ப்பீர்கள் என்றால்?தாராளமாக வரலாம்.
ஏனென்றால், உங்கள் மனக்கோட்டை மற்றும் எதிர்பார்ப்புகள் இங்கே பல இடங்களில் உடைபடும். உங்கள் இயல்பான மனநிலையும் உடைபடும். நீங்கள் கட்டிக்கொண்டு வந்த மனக்கோட்டை முதல் நாளிலே உடைபடும். ஆம், தங்கும் இடம். குறைந்தது 300 நபர்கள் தொடங்கி 30,000 நபர்கள் வரை ஒரு விடுதியில் தங்கும் நிலை ஏற்படும். சில விடுதியில் இதற்கும் மேல்.
இரண்டடுக்கு கட்டில் வரிசைகள். பெரும்பாலும், உங்களுக்கு மேல் கட்டில் தான் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். சற்று அசந்து உருண்டீர்கள் என்றால்? சுதாரிப்பதற்குள் நீங்கள் தரையில் கிடப்பீர்கள். அதனால் ஏற்படும் வலிகள் உங்களுக்கே. (என் வண்டி அதிக தடவை தடம் புரண்ட அனுபவம்) நீங்கள் உண்ணும் உணவு, சமைத்து சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் செய்த புண்ணியம். பொட்டலம் சாப்பாடு என்றால், வாழ்க வளமுடன்! என்னால் இதைத்தான் சொல்ல முடியும். அக்கொடுமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஏனென்றால் தரம் அப்படி.
முதல் நாள் இரவு பத்து மணிக்கு சமைத்த உணவை நாம் மறுநாள் மதியம் உண்ண வேண்டும். சூடாக பொட்டலத்தில் கட்டினால் அது இறுகி அவ்வாறு இருக்கும்.
முதல் நாள் வேலை, உங்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு சாதனங்கள்(தலைக்கவசம் (helmet) , காலணி (safety shoes) கையுறைகள் (gloves) மூக்கு கண்ணாடி:) (safety goggles)
மற்றும் உடல்வார் பட்டை (full body harness). ஏதோ போருக்கு தயாராவதை போன்ற உணர்வு ஏற்படும்.
ஆனால் உங்களுக்கு கொடுக்கப்படும் பணியோ “ஜங்குவா ஆப்ரேட்டர்” அதாங்க மண்வெட்டும் வேலை. இங்கு அனைத்து வேலைகளும் மறுப்பின்றி செய்தாக வேண்டும்.
அதிக வேலை நேரம். ஆமாம், நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் கொண்டு தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வரை ஞாயிறு தவிர்த்து (8 tஷீ 5)
மற்ற நாட்களில் காலை எட்டுமணியிலிருந்து இரவு பன்னிரெண்டு மணி வரையில் வேலை நேரம்.
காசு வேணும் என்றால்? கூடுதல் நேரம் வேலை பார்த்தாக வேண்டும். இல்லையென்றால் வாங்கிய கடன் கட்டி முடியாது. பின்னர், தங்கும் விடுதிக்கு திரும்பி குளித்து, சமைத்து உண்டு முடித்து விட்டு உறங்க வேண்டும். மீண்டும் காலையில் எழுந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் நிறுவன வாகனத்தில் ஏறிவிட வேண்டும். வண்டி உங்களுக்காக காத்திருக்காது. இங்கு நேரத்தினை சரியாக கடைபிடிக்க வேண்டும். அதிகபட்சம் நாலு மணிநேரம் தூங்கலாம். புதிதாக சேர்ந்தவர்கள் சில குறிப்பிட்ட காலங்கள் வரை உடல்நலம் குறைப்பாட்டை தவிர்த்து, மற்ற காரணங்களுக்கு விடுப்புகள் எடுக்க இயலாது.
அனைவருக்கும் வருடா வருடம் ஊதிய உயர்வு இருக்காது. சிலருக்கு நான்கு வருடங்கள் ஆனாலும் ஊதிய உயர்வு கிடைக்காது.
மேலே சொன்ன கடினங்கள், புதிதாக வருபவர் கட்டாயம் அனுபவித்துதான் ஆக வேண்டும்.
இங்கே, உங்கள் திறமை காட்ட பல வாய்ப்புகள் உண்டு. நீங்கள் கடின உழைப்பு, திறமை மற்றும் விசுவாசமாக இருந்தால் நிறுவனம் உங்களை அரவணைத்து கொள்ளும்.
அதிக சலுகைகள் கிடைக்கும், கொஞ்சம் படிப்பறிவு இருந்தால், நிறுவனம் உங்களை அந்த தொழில் சார்ந்த குறுகிய கால படிப்புகளை படிக்க வைத்து உங்களை உயர்த்தி விடும்.
உங்கள் திறமை இன்னும் மேம்பட்டால், அந்நாட்டு நிரந்தர குடியுரிமை கிடைக்க நிறுவனம் வழிச் செய்யும். இது போன்று பயனடைந்தவர்கள் மிகச் சொற்பமே.
சிந்தித்து செயல்படுங்கள்.
Q: ஏ.ஏ.சி பிரிக்ஸ் பயன்படுத்தி வீடு கட்டலாமா? அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடுமா?
பதில் அளிப்பவர் : பாலச்சந்திரன், தமிழ்நாடு அரசு-இல் நில அளவையர் 2022 முதல் –தற்போது வரை
Answer:
ஏ.ஏ.சி பிரிக்ஸ் பயன்படுத்தி வீடு கட்டலாமா? அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடுமா?
பதில் அளிப்பவர் : பாலச்சந்திரன், தமிழ்நாடு அரசு-இல் நில அளவையர் 2022 முதல் –தற்போது வரை
இந்த கேள்வி நீண்ட நாட்களாகவே பலர் நம்மிடம் கேட்ட கேள்விதான். முதலில் பொறியாளராகிய எனக்கே AAC கற்கள் மீது பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படவே இல்லை என்பது உண்மைதான்.ஆனால் உண்மையில் AAC கற்கள் தரத்தில் ..நாம் சாதாரணமாக பயன்படுத்தும் செங்கற்களை விட பலமடங்கு வலிமை உடையது.
சென்னை மற்றும் பல மெட்ரோ நகரங்களில் பெரும்பாலான அடுக்குமாடி கட்டிடங்கள் அனைத்துமே AAC கற்களை கொண்டே கட்டப்படுகின்றன .மேலும் அரபு நாடுகளில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவற்றிலும் இந்த வகை கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன ,அதனால் தரம் மற்றும் நம்பகதன்மையில் AAC கற்கள் மீது நாம் சந்தேகம்கொள்ள தேவையில்லை.
மேலும் இந்தவகை கற்கள் மிகவும் எடை குறைவாக இருப்பதால் கட்டிடத்தின் வரும் DEAD LOAD எனப்படும் LOAD மிகவும் குறைவாகவே இருக்கும் .
இதனால் கட்டிடத்தில் BEAM மற்றும் COLUMN போன்றவை டிசைன் செய்யும்போது, அளவுகளில் சற்று சின்னதாவே அமைக்கலாம். மற்றும் கட்டுமான கம்பிக்கும் தேவை குறைவாகவே இருப்பதால் கட்டிடத்தின் செலவு சற்றே குறையும் .
இந்த வகை கற்களை பயன்படுத்தி வீடுகட்டும் போது மணலும் சிமெண்டும் பெரும்பாலும் பயன் படுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக பிரத்யோகமாக இதற் கென்றே உள்ள பசையை பயன்படுத்துவதால் நேரமும் குறைவதுடன் கட்டிட செலவுகளும் குறைகின்றது.
மேலும் இந்தவகை கற்கள் பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைப்பதால் வாங்குவதில் எந்தவித சிரமமும் இருக்காது. மழைக்காலங்களில் செங்கல்லுக்கு ஏற்படும் தட்டுப் பாடு மற்றும் விலையேற்றம் போன்று இந்த வகை கற்களுக்கு ஏற்படுவதில்லை. அதனால் வருடம் முழுவதும் ஒரேசீரான விலை மற்றும் தட்டுப்பாடின்றி கிடைப்பதால் கட்டுமான பணிகளுக்கு இவை உகந்ததாக கருதப்படுகின்றது.
என்னதான் இந்த AAC கற்களுக்கு பல பிளஸ் பாய்ண்டுகள் இருந்தாலும்,
இதை பயன்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்களும் உள்ளது.Load Bearing Structure எனப்படும் கட்டுமான முறைக்கு இந்த வகை கற்களை பயன்படுத்த முடியாது. மேலும் coefficient of thermal expansion பற்றியோ மற்ற பிற Parameters பற்றியோ நம்பிக்கையான தகவல்களோ ,உறுதியான நேரடி சாட்சியங்களோ இல்லாதிருப்பது இந்த புதிய ரக கற்களை பயன்படுத்துவதில் சற்று தயக்கத்தை ஏற்படுத்துகிறது .
கட்டுமானத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு பல புதிய அப்டேட் வந்துகொண்டுதான் இருக்கின்றது. அவற்றில் நடைமுறைக்கு ஏற்ற சிறந்த தொழில்நுப்ட முன்னேற்றங்களை பயன் படுத்திக்கொள்வதே ஒரு நல்ல கட்டுமான பொறியாளரின் கடமையாகும் .
Q: பொறியாளர் வெங்கடாசலம் அவர்களுக்கு,
நாங்கள் குடியிருப்பு மற்றும் கமர்ஷியல் சேர்ந்தார் போல ஒரு கட்டடத்தை சென்னையின் சதுப்பு நிலமான பள்ளிக்கரணையில் மேற்கொள்ள இருக்கிறோம்.
இங்கே முழுக்க, முழுக்க ஏ சி சி பிளாக்குகளைத் தான் கட்டுமானத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால், அடித்தளம் மற்றும் பேஸ்மெண்ட் பணிகளில் மட்டும் வேறு வகை கற்களை பயன்படுத்த உள்ளோம். அடித்தளம் மற்றும் பேஸ்மெண்ட் பணிகளுக்கு செங்கற்கள் / எரிசாம்பல் கற்கள்/ கான்கிரீட் சாலிட் பிளாக்குகள் இந்த மூன்றில் எதை நாங்கள் தேர்வு செய்ய வேண்டும்?
ஆர். பழனிச்சாமி, மணவூர்.
Answer:
நீங்கள் பள்ளிக்கரணை பகுதியில் ஏசிசி பிளாக் கொண்டு கட்டுமானம் செய்வதாக குறிப்பிட்டு இருந்தீர்கள். உங்களது குடியிருப்பு கமர்சியல் மற்றும் ரெசிடென்சியல் சேர்ந்த ஒரு கட்டுமானமாக நீங்கள் வடிவமைத்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆர்.சி.சி கட்டுமானத்தின் தாய்ச் சுவர்களுக்கு, பார்ட்டிஷியன்களுக்கு தாராளமாக ஏசிசி பிளாக் பயன்படுத்தலாம். அதற்கு அஸ்திவாரம் அமைப்பதற்கு செங்கற்கள் உபயோகப்படுத்தும் போது செலவு அதிகம். அதேசமயம் உள்புற பூச்சு கட்டாயம் பூச வேண்டும். எரிசாம்பல் கற்கள் பொறுத்தவரை அவற்றின் தரம் குறிப்பிட்டு சொல்ல இயலாது. மேலும் அவற்றை விட காங்கிரீட் சாலிட் பிளாக் உங்களுக்கு தகுந்ததாக இருக்கும். தற்சமயம் சந்தையில் 9” அகலம் கொண்ட விட, கான்கிரீட் சாலிட் பிளாக்குகள் வந்துள்ளது.
எனவே, நாம் அஸ்திவாரம் அமைப்பதற்கு அதனை பயன்படுத்துவது சால சிறந்தது. தரைமட்டத்தில் அமைக்கப்படும் belt beam அல்லது grid beam கட்டிவிட்டு அதற்குமேல் அஸ்திவாரத்தினுடைய உயரத்திற்கு solid block அமைப்பது மிகவும் சிறந்தது.
Q: கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி கேள்வி
Answer:
பதில்கள் பதில்கள் பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்பதில்கள் பதில்கள்
Q: சார். நான் பொறியியல் படிப்பை 2018 இல் முடித்தேன். எனது தந்தை என்னை தனியாக ஒரு கட்டுமான நிறுவனம் தொடங்கி நடத்த சொல்கிறார். நிதி உதவி செய்யத் தயாராக இருக்கிறார். ஆனால் எனக்கு தயக்கமாக இருக்கிறது. பொதுவாக, ஒரு கட்டுமான நிறுவனத்தை தொடங்க வேண்டுமெனில்., சிவில் படிப்பை முடித்த பிறகு எத்தனை ஆண்டுகாலம் அனுபவம் இருப்பது சிறப்பானது?.
- எஸ். லிஷாந்த் ராஜ், கவரப்பேட்டை
Answer:
தங்களுடைய தந்தை சொல்வது ஆக்கபூர்வமான நல்ல கருத்துரை தான்.
ஆனால், பொறியியல் பட்டம் பெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் - ஒரு பெரிய தனியார் கட்டுமான வேலைகளில் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவது பணியாற்றிப் பலவகை அனுபவங்களைப் பெறவேண்டும். இந்த அனுபவ அறிவு, திறமை இல்லாமல் தனியாக கட்டுமானம் நிறுவனம் தொடங்கி நடத்துவது- வெற்றிகரமாகச் செயற்படுத்துவது எளிதல்ல: கடினமானது.
எனவே, இன்னும் ஒரு 3 அல்லது 4 ஆண்டுகள் பெரிய கட்டுமான நிறுவனத்தில் - குறிப்பாக வேலை மேலாளராக (Site Supervisor) வேலைபார்த்து அதன் பின் தனியாக ஒரு கட்டுமான நிறுவனம் தொடங்கி நடத்துவது நல்லது. தங்கட்கு என்அன்பார்ந்த வாழ்த்துகள் !.