Testimonial

25 - ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது பிலடர்ஸ்லைன் பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள் ?

  • சிறந்த முதுநிலைப் பொறியாளர்கள், தொழில் நுட்ப கோட்பாடு வரையாளர்கள், உயர்கல்வி தகுதி பெற்ற பேராசிரியர்கள் போன்ற பல்வேறு பிரிவினரிடமிருந்தும் பெருகின்ற செய்திகளையும் நல் ஆலோசனைகளையும் அவர்தம் அனுபவங்களையும் ஒருசேர நாட்டு மக்களுக்கு எளிதில் விளங்குகின்ற வகையில் 24 ஆண்டுகளாக அளித்து வருகின்ற பில்டர்ஸ்லைன் 25 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை எண்ணி மகிழ்கின்றேன். பில்டர்ஸ்லைன் பணி மேலும் மெருகுடனும் சிறப்புடனும் வாழ்த்துகிறேன்.
    -முனைவர் எம்.சேகர், டீன், அண்ணா பல்கலைக்கழகம்
  • பில்டர்ஸ்லைன் பத்திரிக்கையை நான் அதன் ஆரம்ப காலம் முதல் படித்து வருகிறேன். இதில் வரும் செய்திகள் கட்டுமானத் தொழிலில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் பயனுள்ளது. பில்டர்ஸ்லைன் பத்திரிக்கை பில்டர்களுக்கு பைபிள் போன்றது. கட்டுமானத்துறை சார்ந்த அனைவருக்கும் கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமாக எதிர்கால இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய நவீன கட்டுமான தொழிற்நுட்பங்களை அளிக்கிறது. கட்டுமானத்துறையை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதன் ஆசிரியர் திரு.உதயகுமார் துடிப்பான ஒரு இளைஞர். பில்டர்ஸ்லைனின் சேவை மென்மேலும் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
    - ரூபி மனோகரன், ரூபி பில்டர்ஸ்
  • இன்றைய தேவைக்கேற்ப பொறியாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும் நவீன தொழிற்நுட்பங்கள், இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளச் செய்வதில் தமிழில் முதன்மையான பங்கு வகிக்கிறது பில்டர்ஸ்லைன். கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் நிகழும் போதும், துறை சார்ந்த பிரச்சனைகளையும் அரசின் கவனத்திற்கு பொறியாளர்களுடன் இணைந்து எடுத்துச் செல்கிறது. பொருட்களின் விலைப்பட்டியல் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது. கட்டுமானத்துறையில் மிகச் சிறந்தவர்களின் பேட்டிகளை இடம்பெறச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. கட்டுமானப் பொறியாளர்களுக்கு தோழனான பில்டர்ஸ்லைன் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
    - R.மோகன்ராஜ்,சிவில் இஞ்சினியர்ஸ் அசோசியேஷன்ஸ் கூட்டமைப்பின் மாநில செயலாளர்
  • கட்டுநர்களுக்கும் பொறியாளர்களுக்கும் மட்டுமின்றி எல்லா தரப்பினரும் அறிய வேண்டிய தகவல்களை தாங்கி வரும் பில்டர்ஸ்லைன் கட்டுமானத்துறையின் நண்பனாகும். பில்டர்ஸ்லைனில் எழுதப்படும் தலையங்கங்கள் நடுநிலையுடன் எழுதப்பட்டு கட்டுமானத்துறையின் கோரிக்கைகளை அரசிற்கு வைப்பதோடு, அரசின் மந்த செயல்பாடுகளை விமர்சிக்கவும் தயங்குவதில்லை அவ்வகையில் பில்டர்ஸ்லைன் மன்னரை இடிப்பான் மந்திரி என்கிற கூற்றுக்கேற்ப செயல்படுகிறது.
    - அந்தோனி ரத்தினம்
  • பில்டர்ஸ்லைன் பத்திரிக்கை பில்டர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமிடையே உறவுப்பாலமாக செயல்படுகிறது. பில்டர்களுக்கு வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தெரியப்படுத்துகிறது. அதே சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பில்டர்களை அடையாளம் காட்டத் தவறுவதில்லை. நவீன தொழிற்நுட்பங்கள், கட்டுமானப் பொருட்கள், கட்டுமான இயந்திரங்கள் போன்ற சமகால கட்டுமானத்துறை பெருமக்கள் அறிய வேண்டிய அரிய தகவல்களையும் தருகிறது. ஆசிரியர் திரு.உதயகுமார் அவர்களின் இந்த சீரிய பணி தொடரட்டும் பல்லாண்டு.
    - எஸ்.குமார்
  • பொதுமக்கள், கட்டிடப் பொறியாளர்கள் மத்தியில் கட்டுமானத்துறை பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்பட்டது. பில்டர்ஸ்லைன் மாத இதழின் வருகைக்குப் பிறகுதான் எனலாம். உலகத்தரத்தில் கட்டுமானச் செய்திகளை தமிழில் வெளியிடும் ஒரே பத்;திரிக்கை பில்டர்ஸ்லைன் தான். இதில் இடம் பெறும் ஆர்டிகிள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை அதிசயங்கள். அட்டைப் படமாகட்டும். உள்ளே இடம்பெறும் படங்களாகட்டும், ஆங்கில பத்திரிக்கைகளை விட வெகு சிறப்பாக வெளிவருவது கூடுதல் விசேஷம்.
    - R.சிவலிங்கம், மாநில செயலாளர், FACEAT
  • பில்டர்ஸ்லைன் மாத இதழ் கட்டுமானத்துறையின் தகவல் களஞ்சியம் என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை குறிப்பாக. கட்டுமானத்துறையின் நவீன இயந்திரங்கள், தொழிற்நுட்பங்கள், சந்தை நிலவரம், கட்டுமானத்துறை செய்திகள், கட்டுமான மேலாண்மைத் தொடர், வாருங்கள் வீடு கட்டலாம், பிளான் ரெடி ஆகியவை கட்டிடவியல் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய அற்புதமான தொடர்களாகும், பிலடர்ஸ்லைன் மென்மேலும் மெருகுடன் மிளிர வாழ்த்துக்கள்.
    - முனைவர் M.தேவி, HOD/CIVIL. பாவை பொறியியற் கல்லூரி
  • கட்டுமானத்துறையில் பல்வேறு பத்திரிக்கைகள் வெளி வந்தாலும், பில்டர்ஸ்லைன்தான் முதன்மையான இடத்தை வகிக்கிறது. இதில் வெளி வரும் செய்திகள் மற்றும் கட்டுமானத்துறை சார்ந்த கட்டுரைகளைப் படித்துத்தான் பொறியாளர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்கிறார்கள். தகவல்களைப் படிக்க படிக்க அற்புதமாக இருக்கிறது. இதன் சேவை பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.
    - JV.ஜெயராஜ், தலைவர், அனைத்துக் கட்டிடப் பொறியாளர் சங்கம், கர்நாடகம்
  • என்னைப்போன்ற சிவில் பயிலும் மாணவர்களுக்கு பில்டர்ஸ்லைன் ஆற்றிவரும் சேவை அளப்பரியது. புதுப்புது தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப்பொருட்களையும், பில்டர்ஸ்லைன் வாயிலாகவே நாங்கள் தெரிந்து கொள்கிறோம். புதிய உத்திகளுடன் புராஜெக்ட் செய்வதற்கு பில்;;டர்ஸ்லைன் பேருதவி புரிகிறது. கேள்வி – பதில் பகுதியில் இடம் பெறும் பதில்கள் பில்டர்ஸ்லைனின் தரத்தை பறை சாற்றும். இதில் இடம் பெறும் தகவல்களைப் படித்தாலே சாதாரண மக்களும் ஒரு பொறியாளர் அளவிற்கு அறிந்து கொள்வார்கள். மாணவர்களுக்கென்று கட்டுரைப் போட்டிகளும் அவ்வப்போது நடத்தி அசத்தும் பில்டர்ஸ்லைன் தனது பணியை பல ஆண்டுகள் தொடர்ந்திட வேண்டுகிறேன்.
    - மு.பிரியங்கா, B.Tech (Civil)) காந்திகிராம் ரூரல் யூனிவர்சிட்டி
  • பில்டர்ஸ்லைன் இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படித்தும், எழுதியும் பயனடைந்து வருகிறேன். கட்டுமானத் துறையில் மிகச் சிறந்த தரத்தோடு கட்டுநர்களுக்கும், சொந்த வீடு கட்டுபவர்களுக்கும், மிகவும் பயனான செய்தி இதழ். கட்டுமானப் பொருட்கள். கட்டுமான உத்திகள் முதலியவற்றோடு, கட்டுமான இயந்திரங்கள், கருவிகளைப் பற்றிய விவரங்களையும் இயந்திரம் பேசுகிறேன் என்ற தலைப்பில் வெளியிடுவது அருமை. குறிப்பாக, அண்மைக் கால ஆசிரிய உரைகள் (தலையங்கம்) நச் சென தலையில் கொட்டி. சமுதாய அக்கரையினையும், சீற்றத்தினையும் வெளிப்படுத்துகின்றன.
    - அ.வீரப்பன், முன்னாள் தலைமைப் பொறியாளர்,தாநா.பொ.ப.து
  • அழகு தமிழில் அளவற்ற கட்டிடவியல் துறை கட்டுரைகளை அள்ளித்தரும் பொக்கிஷமாம் பில்டர்ஸ்லைன். தமிழ்வழியில் கட்டிடவியல் பயிலும் மாணவர்களின் தாகத்தை தீர்க்கும் கலைக்களஞ்சியமாம் பில்டர்ஸ்லைன். அது மட்டுமன்றி, எண்ணிலடங்கா கட்டுமான நவீன இயந்திரங்களின் அணிவகுப்பையும் ஈடு இணையற்ற புதுப்புது கட்டுமான விந்தைகளையும் தாங்கி வரும் பில்டர்ஸ்லைன் அனைத்து தரப்பினரும் படித்துப் பயனடைய வேண்டிய மாத இதழ். பில்டர்ஸ்லைனின் சேவை கட்டுமானத்துறை பெருமக்களுக்கு என்றென்றும் தேவை.
    - மு.மு.வேலன், முன்னாள் தலைவர், கட்டிடப்பொறியாளர் சங்கம், நாகர்கோயில்
  • வீடு கட்டுவோர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், கட்டுமானத் துறையில் அறிந்துகொள்ள வேண்டிய நுட்பமான நுணுக்கங்கள் மற்றும் சிக்கன முறையில் சிறப்பான வீடு கட்டுவது எப்படி ? என்பது போன்ற குறிப்புகள் மட்டுமல்லாமல், உலகளாவிய வியக்கவைக்கும் கட்டுமான தகவல்களையும், செய்திகளையும் உலகத் தரத்தில் வெளியிடுவது பிரம்மிக்கத்தக்க ஒன்றாகும். 25 ஆம் ஆண்டில் பில்டர்ஸ்லைன் அடியெடுத்து வைப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    - A.P.Sivakumar, மாவட்ட நூலக அலுவலர், திருச்சிராப்பள்ளி

மேலும் விசாரணைகளுக்கு  88255 77291 எண்ணை அழைக்கவும் 

பில்டர்ஸ்லைன் தமிழ்

நாளந்தா பதிப்பகம்

Buildersline English

முந்தைய இதழ்கள் 

புத்தகங்கள்

குறுந்தகடுகள்

Total No.of Visitors : 2066550