Q:
சுவர் மேற்பூச்சு வேலைக்கு உகந்தது பி. சான்ட்டா ? எம்.சாண்டா எது? ஏன்? அய்யா என் போன்ற பொறியாளர்களுக்கு மட்டுமின்றி, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், விளக்கவும்..
பொறி. சாருப்ரா சுந்தர் , மயிலாடுதுறை.
Answer:
சுவர் மேற்பூச்சு வேலைக்கு உகந்தது பி. சான்ட்டா ? எம்.சாண்டா எது? ஏன்? அய்யா என் போன்ற பொறியாளர்களுக்கு மட்டுமின்றி, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், விளக்கவும்..
பொறி. சாருப்ரா சுந்தர் , மயிலாடுதுறை.
சுவர் மேல் பூச்சு வேலைக்கு P-Sand மிகச் சிறந்தது. ஏனென்றால் P-Sand - ன் பருமன் அளவு 2மி.மீக்குள் இருக்கும். எனவே சிமெண்ட்டோடு ஒட்டுவதிலும் பூசும் போது சொர, சொரப்பாக இருக்கும். வேலையும் விரைவாக நடக்கும். எனவே சுவர் பூச்சு வேலைகளுக்கு P-Sand பயன்படுத்துவது நல்லது.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
--------------------------------------------------------------------------------------
2020, நவம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
Q: நாங்கள் 800 சதுர அடியில் ஜி + 1 வீடு கட்டி வருகிறோம். பாரம் தாங்கும் சுவராக அல்லாமல் ஃபிரேம்ட் ஆர்சிசி கட்டமைப்பு கட்டடமாக கட்ட இருக்கிறோம். வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்த ஏராளமான மண்ணைக் கொண்டு நான்கு அடி பேஸ்மட்டம் நிரப்பலாம் என் யோசனை சொல்கிறேன்.
என் கணவரும் அதைத்தான் வற்புறுத் துகிறார். ஆனால், எங்கள் பொறியாளர் அஸ்திவார மண் நொய் மண்/ மென் களிமண்ணைப் பயன்படுத்தாதீர்கள் எனச் சொல்கிறார். புதிய மணல் வாங்கினால் அதிக செலவு பிடிக்கும். மேலும் இலவசமாக கிடைத்த இந்த மண்ணை என்ன செய்வது? சகீலா மோகன், பள்ளி ஆசிரியை, செய்யாறு,
Answer:
வீட்டிற்கு அடித்தளம் தோண்டும் போது கிடைத்த ஏராளமான மண் - களிமண் வகையாக அல்லது வண்டல் மண்ணாக இருந்தால் அந்த மண்ணைக் கொண்டு பேஸ்மட்டம் உயர்த்தக் கூடாது. அதற்குப் பதிலாக அந்த மண்ணோடு கருங்கல் உடைதூள் செஞ்சரளை மண் மற்றும் மென் களிமண் 2:2:1 என்ற விகிதத்தில் நன்றாக ஒன்றாக கலந்து பயன்படுத்தலாம் . இலவசமாகக் கிடைத்த மண்ணை மண்ணின் தன்மையைப் பொறுத்து வேறு வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். புதிய ஆற்றுமணலோ அல்லது செயற்கை மணலோ நிரப்புவதற்காகப் பயன்படுத்தத் தேவையில்லை. மாற்றாக கருங்கல் உடைதூள் : செஞ்சரளை மண்ணை பேஸ் மட்டத்தை உயர்த்தப் பயன்படுத்தலாம். வீடு கட்டும்போது பொறியாளர் சொல்வதைக் கேட்டுச் செய்யுங்கள்.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
-------------------------------------------------------------------------------------
2021, ஜனவரி மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
Q: சார். நான் ஜி பிளஸ் 1 கட்டுமானம் கட்டி வருகிறேன். மொட்டைமாடி தளம் 800 ச.அடி பரப்புடையது. தளத்தில் மேற்புறம் நவீனமாக வெதரிங் கோர்ஸ் போட நினைத்திருந்தேன். பழங்கால சுருக்கி முறை, நவீனகால வெதரிங் கோர்ஸ் இவற்றுள் நான் எதை தேர்வு செய்யவேண்டும்? ஏன்? கருப்புசாமி, இளநீர் வியாபாரம், முசிறி
Answer:
திரு. கருப்பசாமி அவர்களே, மொட்டை மாடித் தளத்தின் மேல்புறத்தில் நவீனமாக Weathering Course என்று நீங்கள் சொல்வது எங்கட்குத் தெளிவாக தெரியவில்லை. எனவே விளக்கமாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. இருப்பினும் உங்களுடைய மொட்டைமாடித் தளம் நீர் ஒழுக்கு, விரிசல்கள் இல்லாமல் இருக்க கீழே தந்துள்ளவாறு ஏதாவது ஒன்றை மொட்டைமாடித் தளங்களை அமையுங்கள்.
கட்டுமானத்தின்போது சாரத்தாங்க மைப்புகள், பலகம்/ விட்டம் இவற்றைத் தாங்கும் முட்டுகள் முதலியவற்றைச் சவுக்குக் கொம்புகள்/ மூங்கில் கழிகள் பயன்படுத்துவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன என்று பலரும் தெரிவிக்கின்றனர். இக்காலத்தில் எவை? For safe & effective centering props and for scaffolding). இதைப்பற்றிய Site Manual இருந்தால் அதையும் தெரிவியுங்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் பெரிய கட்டு மானங்களில் காங்கிரீட் போடும் போதும் அல்லது போட்ட்டவுடனேயும் (குறிப்பாக உயரம் கூடிய கோயில் மண்டபங்கள், மாதாகோயில்கள், வணிக நிறுவனங்கள் (High ceiling கொண்டவை ) தாங்குசாரம் வளைந்தும் முறிந்தும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதுவும் அப்போது பலத்த மழையும் வேகமான காற்றும் வீசினால் மூங்கில்/சவுக்குக் கொம்புகள் முறிந்தும் (அடி மண்ணில் வைத்த செங்கள் அடித்தட்டு நகர்ந்தும் நொறுங்கியும்) விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளன.
1. இத்துடன் அன்றி போடப்படும் காங்கிரீட் உயரத்திற்கேற்ப 2.10மீ முதல் 2.40மீ உயரத்திற்கொன்றாக இருதிசைகளிலும் பக்கவாட்டுக் கிடைக்கொம்புகள் கட்டாமையும் அத்துடன் நெடுக்குயரக் குறுக்குத் (Cross diagonals) தடுப்புகள் அமைக்காமையும் கூட முக்கியமான காரணம் என்பதை அறிந்துள்ளோம்.
இதுபற்றி மூன்று / நான்கு கட்டுரைகளும் கூட முக்கியமான காரணம் என்பதை அறிந்துள்ளோம்.
இதுபற்றி மூன்று / நான்கு கட்டுரைகளும் தள ஆய்விற்குப்பின் (கோவை ஈச்சநாரி கோயில், தாம்பரம் சர்ச், தஞ்சாவூர் மத்திய பல்கலைக்கழக விருந்தினர் விடுதி... முன்பே எழுதப்பட்டுள்ளன.)
எனவே மூங்கில் / சவுக்கு கம்புகளை முட்டுக்கொடுக்கப் பயன்படுத்தக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மாற்றாக... இப்போது பேரூர்களிலும் சிறு நகரங்களிலும் கூட எஃகுக் குழாய்களும் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றை வடிவமைக்கும் முறை, வைத்துக் கட்டும் முறை, முதலியன Dr.Kumar Neeraj jha என்பவர் எழுதிய Formwork for Concrete Structures என்ற நூலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
இதுவன்றியும் L&T ECC Construction Group மற்றும் Casa Grande இன் Construction Manual இலும் விளக்கப்பட்டுள்ளன.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
-------------------------------------------------------------------------------------
2021, ஜனவரி மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
Q: நாங்கள் புதிதாக கட்ட இருக்கும் வீட்டின் அஸ்திவாரப் பணியின் போது மண்னை சோதனை செய்த போது, கறையான் உள்ளிட்ட எந்த பூச்சிகளும் அங்கில்லை. சுத்தமாக இருக்கிறது. ஆனாலும் எங்கள் எஞ்சினியர் பெஸ்ட் கண்ட்ரோல் செய்த பின்தான் அஸ்திவார வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார். இது சரியா?
சகீலா மோகன், பள்ளி ஆசிரியை, செய்யாறு,
Answer:
அன்புள்ள சகோதரி சகிலா மோகன் அவர்களே, ஒரு பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு நீங்களே இப்படி அடம் பிடித்தால் எப்படி?.
உங்கள் அடிமனை மண்ணின் தன்மை கரையான் பிடிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தால் கண்டிப்பாகக் கரையான் மருந்து தெளிக்கத் தான் வேண்டும.; இதற்கு மாற்றாக செலவைக் குறைக்க வேண்டுமென்றால் அடித்தள மண்வெட்டுப் பகுதிகளை கருங்கல் உடை தூள் (Quarry Dust) கொண்டு நிரப்புங்கள். அப்பொழுது கரையான் வராது. கட்டுமான வேலையில் பொறியாளர் சொல்வதைக் கேட்டுச் செய்யுங்கள்.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
------------------------------------------------------------------------------------
2021, ஜனவரி மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
Q: காம்பவுண்ட் சுவர், பால்கனி சுவர் போலவே மொட்டை மாடி தளங்களில் பேராபட் சுவருக்கும், கைப்பிடி சுவருக்கும் தனியே வரையறுக்கப்பட்ட வடிவமைப்பு கட்டுமான முறைகள் உள்ளனவா., எனக்கு புரியும்படி குறிப்புகள் சொல்ல முடியுமா? நாங்கள் எங்களுக்கு தெரிந்த பழங்கால முறையில் தான் கட்டி வருகிறோம்.
சகாதேவன் , கட்டட காண்ட்ராக்டர், காஞ்சி
Answer:
சுற்றுச் சுவர், பால்கனி போலவே - மொட்டை மாடி தளங்களில் கைப்பிடிச் சுவர் கட்டவும் தனியே வரையறுக்கப்பட்ட கட்டுமான முறைகள் உள்ளன. இவற்றை SP 20 (S&T):1991 Hand Book on Masonry Design and Construction, IS 1905:1987 Code of Practice for Structural Use of Unreinforced Masonry ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். தெரிந்த திறமையான கட்டுமானப் பொறியாளரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
-------------------------------------------------------------------------------------
2021, ஜனவரி மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.