Q: வாசகர் கேள்வி...... வெப்பக்காலத்திற்கு ஏற்றார்போல் வீடுகளை வடிவமைப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள எனக்கு ஆசை? வேலுரில் 1200 சதுர அடியில், மெற்சொன்னபடி வீடு கட்ட திட்டமிட எங்களுக்கு நீங்கள் சொல்லும் பொதுவான ஆலோசனை என்ன? ஆ.சிற்றரசு, அரசியல் பிரமுகர். வேலூர்
பொறி.அ.வீரப்பன் பதில்கள்
வேலூரில் விடுகட்டப்போகும் நீங்கள் அங்கு நிலவும் கூடுதலான வெப்பத்திற்கு ஏற்ப வீடு கட்டத்திட்டமிடுவது பாராட்டத்தக்கது. கீழ்க்கண்ட கருத்துரைகளை நீங்கள் கடைபிடிக்கலாம்.
(1) வீட்டினுள் போதுமான வெளிச்சமும், காற்றோட்டமும் நிலவ பெரிய அளவில் நிறைய சன்னல்கள் மற்றும் வென்டிலேட்டர்களைப் பொருத்த வேண்டும்.
(2) வரவேற்பு அறையில் உயரக் கூரை அமைத்து (Double Storey) - FRP (Fibre Reinforced Plastics) double wall Poly carbonate Sheet கொண்டு மூடினால் வெளிச்சம் கூடுதலாகவும் வெப்பம் குறைவாகவும் இருக்கும்.
(3) சுற்றுச்சுவரை ஒட்டி நிழல் தரும் மரங்களை வைத்து வளர்க்கலாம்.
(4) சாதாரண செங்கலுக்கு பதிலாக பிளை ஆஷ் செங்கற்களைப் பயன்படுத்தவும். செலவு கூடுதல் பற்றி கவலைப்படாமல் இருந்த்தால் UPVC சென்னல்களைப் பயன்படுத்தலாம். செலவு குறைய வேண்டும் என்றால், டெரகோட்டா (Terracotta) ஜாலிகளை அமைக்கலாம்.
மேலும் விவரம் அறிய பசுமைக்கட்டிட வடிவமைப் பாளரை அணுகுங்கள் .
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Q: காம்பவுண்ட் கேட் என்றால் இடமும், வலமும் தான் திறக்க வேண்டுமா? பூமிக்குள் போய் அழுந்துவது போல் காம்பவுண்ட் கேட்டை வடிவமைத்தால் என்ன?
இடத்தை சேமிக்கும் பிரமாதமான ஐடியா இது,
மின்சாரத்தால் இயங்கும் இந்த கேட்டினை மின் தடை சமயங்களில் இயக்க பவர் பேக் பேட்டரி வசதியும் உண்டு.
மழைக்காலங்களின் போதும் நீர் உள்ளே போகதவாறு இறுக்கமான கேஸ்கட்டும் (Gasgat) பொருத்திக் கொள்ளலாம்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Q: கேள்வி : எங்கள் வீட்டு குளியலறையின் மேற்கூரையில் எப்பொழுதும் நீர்க்கசிவு உண்டாகி பாசி படர்கிறது. மேல் வீட்டிலும் இதே இடத்தில் குளியலறை உள்ளதால் நீர்க்கசிவு அங்கிருந்துதான் உண்டாகிறது. இதை எப்படி நாங்கள் சரி செய்வது ( மேலே வீட்டு உரிமையாளர் குடியிருக்கிறார்) -கார்த்தி சுந்தர், சூபர் மார்கெட் மேலாளர், திருவரங்கம்
பதில்: உங்கள் வீட்டு நீர்க்கசிவைச் சரிசெய்வதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
1. உங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து நீர்க்கசிவு ஏற்படுகிறதா?
2. உங்கள் வீடு மேலிருப்பவர் வீட்டு நீர்க்குழாய்களில் நீர்க்கசிவு ஏற்படுகிறதா?
3. உங்கள் வீட்டுக்கு மேலிருப்பவர் குளியலறை கீழ் பதித்த ஓடுகளிலிருந்து நீர்க்கசிவு ஏற்படுகிறதா? இவை குறித்து நீங்கள் விளக்கவில்லை.
என்றாலும், நீர்க்குழாய்களிலிருந்தும் தளம்பதித்த ஓடுகளின் இடைவெளி களிலிருந்த்தும் நீர்க்கசிவு இருப்பதாகச் கருதி - அவற்றைச் சரிசெய்யும் பழுது நீக்கும் வழிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன.
மேல்வீட்டு/உங்கள் வீட்டு நீர்க் குழாய்களை முற்றிலுமாக PP-R GreenPipes (Heating Process for joining ) அல்லது Composite Pipes (Joining by Threads) கொண்டு மாற்றுங்கள். சாதாரண நீர்க்குழாய்களை இணைக்க Bonding solution பயன்படுத்தப்படுவதால் - அவை கெட்டியாகும் போது இடைவெளிகள் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்படுகின்றது.
குளியலறைத் தளத்தில் பளிங்கு / செராமிக் ஓடுகளைப் பதிப்பதற்கும் -இணைப்பை அடைக்க White Cement பயன்படுத்துவதால் சிலகாலத்தில் அவை பெயர்ந்து நீர்க்கசிவை ஏற்படுத்துகின்றன.
மாற்றாக Silicone sealant (Tile related) கொண்டு இடைவெளிளை அடைக்க வேண்டும். இந்த இரு சரி செய்தல் முறைகள் நல்ல பயனைத் தரும்.
பின்குறிப்பு:
உங்கள் வீட்டு மேற்கூரையின் காங்கிரீட்பலகம் - இதனால் துருப்பிடித்துச் சேதம் அடைந்திருந்தால் அதைச் சரி செய்யத் தனி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Q: கேள்வி : நாங்கள் புதிதாக வீடு (ஜி+2) கட்ட உள்ளோம். மூன்று புறமும் 3 வீடுகள் உள்ளன. இவற்றிற்கு இடையே தான் எங்கள் மனை உள்ளது. அந்த வீடுகளை ஒட்டியபடி தான் நாங்கள் வீடு கட்ட உள்ளோம். இப்போது அஸ்திவார பள்ளம் தோண்டும்போது அக்கம் பக்கத்து வீடுகளின் அஸ்திவாரத்துக்கு ஆபத்து வராமல் நாங்கள் எப்படி பணி செய்வது? வழிகாட்டுங்கள்... பழனி மாணிக்கம், எழுதுபொருள் விற்பனையாளர், சென்னை
பதில்: உங்கள் மனை - மூன்றுபக்கங்களிலும் 3 வீடுகள் உள்ளமையால் - உங்கள் வீட்டுக்கு , உங்கள் சொத்து விளிம்பில் (Boundary Line)அடித்தளப் பள்ளம் தோண்டும் போது - அந்த வீடுகளின் அடித்தளமும் சுவர்களும் பெரிதும் பாதிக்கப்படும்.
எனவே, உங்கள் வீட்டு அடித்தளக் குழிகளை மேலுள்ள வரைபடத்தில் காட்டியுள்ளது போல 750 மிமீ (2.50 அடி) தள்ளி - மூன்று பக்கத்திலும் குழிகள் எடுத்து அடித்தளத்தைப் போட்டு - தூணை மேல் எழுப்பி - தரைமட்டத்திற்கு 450 மிமீ (1.50 அடி) கீழாக நிறுத்திட வேண்டும். அதிலிருந்து 230 X 450 மிமீ
அளவுடைய கொடுங்கை விட்டத்தை (Cantilever Beams) (வடிவமைப்புப் பொறியாளரிடம் சரியான வடிவமைப்பு பெற்று ) அமைக்க வேண்டும். அதன் விளிம்பில் தூண்களை நிறுத்தி மேல் எடுத்து செல்ல வேண்டும் (Floating columns).
பின்குறிப்பு: 1. உங்கள் மனையின் அடிமண்வகை
( Type of soil ) தெரிவிக்கப்படவில்லை.
2. உங்கள் வீடும் மற்ற வீடுகளும் Street House என்ற வகையாக இருந்தால் ஒழிய, நகராட்சி கட்டு
மான கட்டுப்பாட்டு விதிகளின் படி - உங்கள் சொத்து விளிம்பிலிருந்து மிகக்குறைந்தது 900 மிமீ (3 அடி) தள்ளியே தூண்கள் போடப்படவேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Q: புதிய வீட்டின் சுவர்களில் சிறு சிறு கீறல்கள் விழுவது ஏன்? கேள்வி்: நாங்கள் கே.கே நகரில் புதிதாக ஃபிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறோம். கட்டி 6 மாதமே ஆன அந்த வீட்டில் சிறுசிறு நுண்ணிய கீறல்கள் விழுந்தாற்போல் சுவற்றில் விரிசல்கள் ஏற்படுகின்றன கட்டுனரிடம் கேட்டால், ‘கட்டிடம் மூச்சு விடுகிறது, கலவை கலக்கும்போது உண்டாகும் காற்று வெளியேறுவதால் லேசான கீறல்கள் ஏற்படுவது இயற்கைதான். அப்படிதான் இருக்கும்’ என்கிறார். இது உண்மையா? பதில் சொல்லுங்கள்? - ஆர்.செளம்யா, ஐடி, ஊழியர், கே.கே.நகர்
முன்னாள் தலைமைப் பொறியாளர் (த.நா.பொ.பா.து) பொறி. அ.வீரப்பன் அவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார்.
கட்டிடமும் மூச்சு விடவில்லை; கலவையிலிருந்து காற்றும் வெளியேறவில்லை. சுவரில் சிறுசிறு நுண்ணிய விரிசல்கள் ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
1.சுவரின் மீது பூசும் கலவையில் -ஒபிசி 53 தரச் சிமெண்ட்டைக் கலப்பதும் -பூச்சை அழுத்தி அழுத்திக் கெட்டியாகத் தேய்ப்பதாலும் சுருக்கவிரிசல்கள் (shrinkage cracks) எனப்படும் மயிரிழை விரிசல்கள் ஏற்படுகின்றன.
2.தேவையின்றி பூசப்பட்ட கலவையின் மீது மீண்டும் ஒபிசி-53 தரச்சிமெண்டைப் பாலாகக் கரைத்துத் தெளித்துத் தேய்ப்பதாலும் இவ்வகை நுண்ணிய விரிசல்கள் விழுகின்றன. இதனால் கட்டடத்திற்கு எந்தப் பாதிப்பும் சேதமும் ஏற்படாது; அச்சம் சிறிதும்மின்றி வசிக்கலாம் இதைப் சரிசெய்வதற்கு இதன் பரப்பின் மீது cracksmicro/fine putty (wallcareputty) - 1 மி.மீ / கனத்திற்குப் பட்டி பார்த்தால் இவ்விரிசல்கள் மறையும்.
முதலில் நீங்கள், சுவரில் ஏற்படும் விரிசல் வடிவமைப்பு விரிசலா அல்லது கலவை பூச்சு விரிசலா என ஆராய வேண்டும். கலவை பூச்சு விரிசல் சாதராணமாக தட்பவெப்ப விரிசலாகவும் ( seasoning crack ) இருக்கலாம் இதற்காக நீங்கள் ஐயம் கொள்ள தேவையில்லை.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|