Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 40 நாங்கள் இருக்கும் வீடு கடந்த 5 ஆண்டுகளாக எந்த வொறு பிரச்சனையும் இல்லை. (சுவர் தாங்கும் கட்டுமானம்) ஆனால், சுமார் 2 மாதகாலமாக மொட்டை மாடி தளத்தில் வெடிப்புகள் பாளாம் பாளமாக விடுகின்றன. அதே சமயம் சுவர்களில் ஏது விரிசல் இல்லை. இதற்கு காரணம் என்ன? எப்படி சரி செய்வது? - சு.மேனகா, இல்லத்தரசி, ராம் நகர், கோவை
நீங்கள் உங்களின் வீட்டின் இன்றைய நிலையினை ஏற்பட்டுள்ள குறைபாடுகளை முழுமமையாகத் தெரிவிக்கவில்லை.
1. உங்கள் வீட்டின் வயது என்ன? மொட்டை
மாடித்தளத்தில் பாவியுள்ள பரப்புப் பொருள் : இணைப்புக் கலவை எவை மழைக் காலங்களில் சுவர்களில் ஈரம் தங்குகிறதா (விரிசல் இல்லா விட்டாலும்) மொட்டை மாடித்தளத்தில் பெய்யும் மழை நீர் தேங்காமல் - 5 நிமிடங்களுக்குள்ளே ஓடிவிடுகிறதா? எனினும் கீழ்கன்டவற்றைக் கருதி - பழுதுநீக்குமுறைகளைத் தெரிவிக்கிறோம்.
மொட்டை மாடித்தளத்தில் Hydraulic pressel tiles (clay lrust red tiles) with joints pointed with cement mortaral 1:3 என்றால் வெடிப்புகள் ஏற்பட்டுத் தண்ணீர் தேங்கி ஈரமிருக்கும்.
மழைநீர் வடிகுழாய்களுக்குப் போதிய வாட்டமில்லாமல் இருந்தாலும் நிலலைமை மோசமாகும். மாற்றாக Hydraulic pressel tiles - mortars joints முழுமமையாகப் பெயர்த்து எடுத்துவிட்டு - கீழ்க்குறிப்பிடுவனவற்றைப் போடுக.
1. பெயர்த்தெடுத்த மேற்பரப்பில் மீது 20 மிமீ கனத்திற்கு நீர்த்தடுப்பு திரவம் கலந்த கூட்டுக்கலவை(combination mortars) பூசவும்.
2. அதன் மீது சாதாரண மொசைக் ஒடுகளை - நீர்த்தடுப்பு திரவம் கலந்த சிமெண்ட் மணல் கலவை (1:5) -( 12 மிமீ கனத்தில் ) மீது அழுத்திப்பதிக்கவும்
( வறண்டக்கலவை / Dry mix mortar கூடாது)
3. இணைப்புகளை மூடTile Grout பயன் படுத்தவும்.
4. நான்கு நாட்கள் நீராற்றலுக்குப் பின் - மொசைக் ஒடுகளின் மீது சொரசொரப்பான ஒரு ஒட்டு (Rough polishing-one) ஒட்டவும்.
5. மழைநீர் வடிகுழாய்களை வாட்டத்துடன் சரியாக அமைக்கவும் உதவிக்கு பொறிஞர் T. கோவிந்தராஜன் 94433 80092 , K. நாகராசன் 98422 31046 கோவை அவர்களைத் தொடர்பு கொள்க.
'பதிலளித்தவர் : பொறி. அ. வீரப்பன்
From Builders line Monthly
www.buildersline.in
For subscription : 8825479234
Q: பில்டர்ஸ்லைன் கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 37 நாங்கள் 1200 ச.அடி மனை வாங்கி, 600 ச.அடி யில் வீடு கட்ட உள்ளோம். (மனை நீளம் 40 அடி, அகலம் 30 அடி) வீட்டுக்கு முன்புறம் இடம் காலியாக விடுவது நல்லதா? பின்புறம் இடம் காலியாக விடுவது நல்லதா? அல்லது இருபுறமும் சமமான அளவு இடம் விட வேண்டுமா? அப்படியயனில் என்ன அளவுகளில் இடம் விட வேண்டும்? வழி காட்டுங்களேன்... - கோசல் ராமன், மின் ஊழியர், திருவாலங்காடு
இத்துடன் இணைத்துள்ள வரைபடத்தைப் பாருங்கள். முன்பக்கம் 5 அடி, பின்பக்கம் 10 அடி பக்கவாட்டில் முறையே 3 அடி இப்பொழுது கட்டப்படும் வீட்டின் பரப்பு (30-6) X (40-50-10) = 24X25 = 600 ச.அடி. வெளிச்சம் காற்றோட்டம் பெறுவதற்கும், பின்பக்கத்தில் துணி காயப்போட, நிலத்தடி நீர்த்தொட்டி அமைக்க. பெண்டிர் வீட்டு வேலைகளைப் பார்க்க வசதியாக இருக்கும்.
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call :8825479234
www.buildersline.in
Q: பில்டர்ஸ்லைன் கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 38 உட்புறச் சுவர்கள் மார்பிள் கல் பதிக்க வேண்டும் என்கிறார் எனது கணவர், வேண்டாம்! இது வீண் செலவு என்கிறேன் நான், சுவருக்கு மார்பிள் கல் பதிப்பது எந்த வகையில் நல்லது? என்று எங்களுக்கு விளக்கவும்.. - மீனா. ஆயத்த ஆடை ஏற்றுமதி, திருவள்ளூர்.
உங்கள் கணவர் என்ன பயன்பாட்டிற்காக - நோக்கத்திற்கான உட்புறச்சுவர்களில் மார்பிள் கற்கள் / ஓடுகள் பதிக்க வேண்டும் என்கிறார்? காசு நிறைய வைத்துள்ளீர்கள் போலிருக்கிறது. தற்பொழுது உட்புறச் சுவர்களை அழுகுபடுத்த சுவர் ஒட்டிகளாக - Wall papers & Laminates முதலியன சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். பழங்கால முறை வேண்டுமென்றால் - Terracotta Cladding இருக்கவே இருக்கிறது. செலவு குறைவு வீட்டினுள் வெப்பநிலையும் குறையும். முயன்று பாருங்கள்.
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 8825479234
www.buildersline.in
Q: பில்டர்ஸ்லைன் கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 39 1800 ச. அடி மனையில் (30 x 60 ) நாட்கள் வீடு கட்டியுள்ளோம், வீடு கட்டி இரண்டு ஆண்டுகளாகியும் காம்பவுண்ட் சுவர் கட்ட காசில்லாமல் நிறுத்தி வைத்திருக்கிறோம். காசு சிக்கனமாக காம்பவுண்ட் சுவர் கட்டுகிற உத்திகளை எனக்கு விளக்கவும். மேலும், மேற்கண்ட மனைக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட ஆகும் உத்தேசமான செலவைக் குறிப்பிடவும். - ராஜ கேரன், ரிட்டைய்ர்ட் காவலர், பெருங்குடி
15’0’’ இடைவெளியில் 8’’ விட்டமுடைய, 8 அடி ஆழமுடையUnder reamed pile foundation - 6’0’’ உயர காங்கிரீட் தூண் இடையில் 4’’ கனமுள்ள Precast solid Concrete Block Masonry - pointed- பூச்சு பூசத் தேவையில்லை, உறுதி யானது, மிகமிகச் சிக்கனமானது. மாதிரி படம் இணைக்கப்பட்டுள்ளது உத்தேச செலவு 180.அடி நீளத்திற்கு ரூ. 3.00 இலட்சம்.
பதிலளித்தவர்: மூத்த பொறியாளர் அ. வீரப்பன்
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 8825479234
www.buildersline.in
Q: பில்டர்ஸ்லைன் கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 40 நான் பி.இ சிவில் படித்து ஒரு ஆண்டாகிறது. ஆனால் ,அனுபவ பொறியியலைக் கற்க விரும்புகிறேன். எங்களைப் போன்ற அறி முக பொறியாளர்கள் ஏட்டளவில் மட்டும் அல்லாமல், களப்பணியிலும் சிறந்து விளங்க ஏதேனும் பயிற்சி மையம் சென்னையில் இருக்கிறதா? - பிரவீன். திருவண்ணாமலை
களப்பணி கட்டுமானத்தில் பயிற்சி தர தனிப்பட்ட மையங்கள் சென்னையில் இருப்பதாகத் தெரியவில்லை. Builders Association of India (BAI), , அண்ணா பல்கலைக்கழத்துடன் இணைந்து அவ்வப்போது இத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். L&T -Construction group அவர்களின் தேவைக்கெனப் பயிற்சிகள் தருகின்றனர். விசாரித்துப் பாருங்கள்.
பதிலளித்தவர்: மூத்த பொறியாளர் அ. வீரப்பன்
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
For Subscription pl call : 8825479234
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|