Q: பில்டர்ஸ்லைன் கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 41 அய்யா. மன்னிக்கவும். இது தொழிற்நுட்ப அய்யம் இல்லை. அண்மையில் சென்னை மெட்ரோ சுரங்கப் பணி தோண்டும் போது, துளையிடும் இயந்திரம் சென்ட்ரலுக்கு அருகே, வரும் போது, அந்த இயந்திரம் அடிக்கடி பழுதடைந்ததாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதாகவும் இதற்கு காரணம் ஜி.,எச் பிணவறை கீழே அந்தப் பணிகள் நடைபெறுவதால், சில துர் ஆத்மாக்கள் வேலையை செய்யவிடாமல் தடுப்பதாகவும், அதற்கென மலையாள மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டு விசேr பூஜைகள் செய்யப்பட்டதாகவும் நாளேடுகளில் ( தினமலரில்) செய்திகள் வந்தன. இதுதவிர , எனது சில சக பொறியாளர்கள் கூட , தங்கள் பணிக்காலத்தில் மயான பூமிகளில் மற்றும் வேறு பல அமானுஷ்ய இடங்களில் கட்டுமானப்ப ணிகள் மேற்கொள்ளும் போது, சில புதிரான சம்பவங்கள் ஏற்பட்ட்டதாக கூஷீயுள்ளனர். இந்த விஞ்ஞான காலத்தில் இதெல்லாம் உண்மையா? உங்கள் பணிக்காலங்களில் இது போன்ற அமானுஷ்யங்களை ஏதேனும் நீங்கள் உணர்ந்திருக்கிறீரா? - பொறி ஜீவா, மயிலம்
சுத்தமான அபத்தம் இது. அப்படியேதும் நடை பெறவில்லை. நகரின் பழம் பெரும் பகுதிகள் என்பதால் - கீழே கட்டுமானப் பகுதிகளோ - ஆழ்கிணறுகளோ,வெற்றி டங்களோ - சுரங்க வேலையினைத் தாமதப்படுத்தின. மேலுள்ள
இன்றைய பழைய கட்டடங்கள் பழுதடையாமல் இருக்கவும் மெதுவாகத்தான் சுரங்கம் தோண்டும் வேலை நடைபெறும். படித்தவர்களை - பாமரர்களை இப்படிப் பைத்தியமாக்குவதில் டி.வி, தொலைக் காட்சி தொடர்களும் பேய்த்திரைப்படங்களும் பெரும் சமுதாய மூடத்தனத்தை வளர்ப்பதில் பொறுப்பு வகிக்கின்றன. என் பணிக்காலத்திலும் - இப்போது இப்படி உணர்ந்ததில்லை.
பதிலளித்தவர்: மூத்த பொறியாளர் அ. வீரப்பன்
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
www.buildersline.in
For Subscription pl call : 8825479234
Q: இக்காலப் பொறியாளர்களுக்கு இருக்கிறதா முழுத்திறமை ? நான் 1995-ல் பி.இ முடித்து விட்டு வெளியே வந்தவன், ஆனால், இப்போது பி.இ முடித்து விட்டு வரும் மாணவர் களிடையே, எங்களைப்போல் கட்டுமானப் பொறியியல், பணி முறைகள் பற்றிய அறிவு சிறிதும் இருப்பதில்லையே ஏன்? அதற்குக் காரணம், பேராசியர் களின் திறமையின்மையா? பாட திட்ட குறைபாடா? அல்லது மாணவர்களின் ஆர்வமின்மையா? - பொறி. கிருபாகர், ஹோசூர், பணியிடம் : போபால்
திரு. கிருபாகரன் இந்தக் காலப் பொறியியல் மாணவர்களின் திறமையினைக் குறைத்து மதிப்பிடுவதாகத் தெரிகிறது. 1967 இல் பி.இ. யும், 1978 எம்.இ.யும் படித்து வந்த நான், 1995 இல் பொறியியல் படித்த பொறிஞர் கிருபாகரின் பொறியியல் திறமையினை எப்படி மதிப்பிடுவது? எனவே, இது ஒரு சரியான அணுகுமுறை
இல்லை.
குறிப்பாக இன்றைய பொறியியல் கல்வி, குறிப்பாகக் கட்டுமானப் பொறியியல் மாணவர்களைக் கட்டுமானத்தலங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வதில்லை. கட்டுமான நிறுவனங்களில்ஓராண்டாவது (மருத்துவர் கட்குHouse surgen Training போல) தலப்பயிற்சித் தரப்படுவதில்லை.
இன்னும் சொல்லப் போனால் இவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் பேராசிரியர்கள் பலருக்கும் (90%) கட்டடம் எப்படிக் கட்டப்படுகிறது? - அதில் ஏற்படும் சிக்கல்கள் எவை, அவை எப்படித் தீர்க்கப்படுகின்றன? என்பது பற்றி ஒன்றும் தெரியாது. இதுதான் பொறி யியல் கல்வியின் இன்றைய நிலை, இதைப் பற்றி க் கல்லூரி நிர்வாகத்தினர் -பேராசிரியர்கள் (துணை வேந்தர்கள் உட்பட) மற்றும் அரசாங்கத்தினர் யாரும் ஒரு சிறிதும் கவலைப்படுவதில்லை.
எனவே, பாடத்திட்டத்திலேயே, பட்டம் பெறுவதற்கு முன்பாகவே-ஒராண்டு தலப்பயிற்சி (Field Training))என்பது கட்டாயமாக்கப் படவேண்டும்.
இந்தத் தலப்பயிற்சியினைத் தர அரசாங்கமும் பொறியியல் கல்லூரி நிர்வாகமும் கட்டாயமாக ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால், இப்போதுள்ள 4 ஆண்டு பொறியியல் படிப்பு - 5 ஆண்டுகளாக ஆவதால் ஒன்றும் குடி முழுகிப்போகாது. நம்புங் கள் இது தான் மிக எளிதான தீர்வு.
பில்டர்ஸ்லைன் மாத இதழிலிருந்து....
சந்தாவிற்கு அழைக்க ...8825479234
இணையதளத்தில் படிக்க.. www.buildersline.in
Q: தங்களைப் போன்ற, பொதுப்பணித்துறையில் இருந்து, பிற பொறியியல் சர்ந்த அரசுப்பணிகளிலிருந்து ஒய்வுபெற்ற வர்கள், பிறகு, தனியாக கன்சல்டன்சி ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்கு பதில், பி.இ இறுதியாண்டு முடித்தவர் களுக்கான தனி சிறப்பு பயிற்சி முகாம் அமைத்து பயிற்றுவித்தால் நாளைய கட்டிடப் பொறியியல் சமுதாயம் சிறப்பாக இருக்கும் இல்லையா? ஜஸ்ட் ஒரு ஆலாசனை... -பொறி, கிருபாகர், ஹோசூர், பணியிடம் போபால்.
பொறிஞர் கிருபாகரின் “”ஜஸ்ட் ஒரு ஆலோசனை ‘’
வரவேற்கத்தக்கதுதான்.
ஆனால், இவர் மத்தியப் பிர தசம், போபாலில் உட்கார்ந்து கொண்டு ஆலோசனை சொல்வதைவிட, தமிழ்நாட்டிற்கு வந்து உட்கார்ந்து நிலையினைக் கூர்ந்து கவணிக்க வேண்டும். அப்போது இங்குள்ள நிலைமை தெளிவாகப் புரியும்.
1. அரசுப்பணியில் -குறிப்பாகப் பொறியியல் துறை
களிலிருந்து ஒய்வு பெற்றவர்களில் - 10% கூடத் தனியாக கன்சல்டன்சி செய்வதில்லை. அதிலும் Structural Designs consultancy செய்பவர்கள் 1% கூட இல்லை.
2. பி இ. படித்து முடித்து வருபவர்கட்குச் சிறப்புப் பயிற்சி
முகாம் அமைத்து இரண்டு நாட்களுக்கு ரூ 3000 / ரூ 5000 என்று கட்டணம் வசூலித்தால் 10000 பேர்களில் 50 / 100 பேர்கள் கூடவருவதில்லை.
3. இவர்கட்குக் கட்டுமானப் பொறியியலின் எல்லா உத்திகளையும் நுனுக்கங்களையும் சொல்லித்தரும் பத்திரிகைளை , புத்தகங்களை வாங்கிப் படிக்கக் கூட எண்ணமில்லை. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இல்லாதவர்களை என்ன செய்வது?
- பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் ,
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
PH:No:8825479234
Q: ஜி+1 வீடு கட்டி வருறேன், “படிக்கட்டுகளின் பக்கவாட்டு கைப்பிடிச்சுவர்களை, செங்கற்களால் கட்டினால், சிமெண்ட், மணல், கூலி செலாவகும், அதற்கு பதில் கிரில்களைப் பொருத்தலாம்’ என்கிறேன் நான், “முடியாது செங்கற்கள் சுவர் தான் வேண்டும்’ என்கிறது என் குடும்பம். வழிகாட்டுங்களேன். -பா. கணேசன்,லேத் ஆபரேட்டர், திருமுலைவாயில்.
மாடிப்படிக்கட்டுகளின் பக்கவாட்டுக் கைப்பிடிச் சுவர்களைக் கண்டிப்பாக -சாத்துக்கல்-அரை கல் சுவர்- ஏன் முழு கல்சுவர் என செங்கற்களால்-அவற்ஷீன் நிலைத்தன்மை மற்றும் உறுதி கருதி (stalrility & durabrility) கண்டிப்பாகக் கட்டக் கூடாது. அதிர்வுகளால் அச்செங்கற் களில் (Free standing cantilever walls என்பதால்) விரிசல்கள் விழும். சாத்துக்கல் (1½’’ ’ கனமுடையது) என்றால் சொல்லவே வேண்டாம்.
அதற்கு பதிலாக-எஃகுக் கிரில்கள்-Stainless steel கிரில்கள் வைப்பது பாதுகாப்பானது, உறுதியானது. வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் தருவது. எனவே, இந்த யோசனையைச் சொல்லும் தம்பி
திரு.கணேசனுக்குப் பாராட்டுகள்.
- பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் ,
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
www.buildersline.in
PH:No:8825479234
Q: வீடு கட்டுதலில் உள்ள பல்வேறு பணிகளில் எதை முன் செய்வது? எதை பின் செய்வது என்கிற குழப்பம் என்னைப் போன்ற பலரிடம் உண்டு.. சதாரணமாக, ஒரு வீடு கட்டுவதில் அஸ்திவாரம். போர் போடுதல், செப்டிக் டேங்க் கட்டுதல் தொடங்கி பெயிண்டிங் வரை உள்ள கட்டுமானப் பணிகளின் சரியான வரிசை என்ன என்பதைக் கூற முடியுமா? -ஆராதனா சங்கர், அழகுக்கலை நிபுணர், சென்னை
Answer:
அழகுக் கலை நிபுணர் ஒருவர் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டுள்ளது எங்களை ஆச்சரியப் படுத்துவதாக உள்ளது.
நீங்கள் மேஸ்திரி மூலமாகத் தொழிலாளர் ஒப்பந்த முறையில் (Labour contract) சொந்தமாக வீடுகட்டுவோர் என ஊகிக்கிறோம். இது ஒரு மோசமான- சங்கடங்களை ஏற்படுத்தும் கட்டுமானமுறையாகும். அத்துடன் கட்டுமானச் செலவை (கடைசியில் கணக்குப்பார்த்தால்) குறைந்தது 20% மிகுதியாக்குவது. எனவே, வேண்டவே வேண்டாம். கூடவே, கூடாது என்று எச்சரிக்கிறோம்.
இப்பொழுது கேட்ட கேள்விக்குரிய பதிலைப் பார்ப்போம்.
வீடு கட்டுதலில் உள்ள பல துணைவேலைகள் ((Sub works)) 100க்கு மேலிருக்கும். அவை. ஒவ்வொன்றையும் இக்கேள்வி-பதில் பகுதியில் வெளியிடமுடியாது. எனினும், சில முக்கியமான துணைவேலைகளை வரிசைப்படுத்தலாம் (according to construction-Technical sequence)
1. மனை சரிப்படுத்தல் - மண்சோதனை செய்தல்-ஆழ்துளைக்கிணறு அமைத்தல்,
2.கட்டட அளவுகளைக் குறித்து மண் வெட்டுவேலை -சாதா 1:5:10 காங்கிரீட்போடல் ,
3. அடித்தள பெட்டி அடைப்பு - கம்பி கட்டிப் பொருத்தல் - M 20/ M 25 தரக் காங்கிரீட் போடல்,
4. தூண்களை உயர்த்தித் தரைமட்ட Grade beam வார்த்தல்.
5. தரைத்தளமட்டம் வரை மண் கொட்டிக் கொட்டிப்படுத்தி 1:5:10 காங்கிரீட் போடல்,
6. இதேசமயத்தில் கீழ்நிலைத்தொட்டி, அழுகுத் தொட்டி அமைத்தல்,
7. தூண்களை ஜன்னல் மட்டம் உயர்த்தி- சன்னல் விட்டம் போடுதல்,
8. தூண்களைக் கூரை கீழ்மட்டம் வரை உயர்த்தி-கூரைவிட்டம் & கூரைப்பலகம் அமைக்கப் பெட்டி அடைப்பு - தாங்கு அமைப்பு-கம்பிகட்டி இருத்தல் இதன்மீது M20/M25 தரக் காங்கிரீட் வார்த்து 14 நாட்கள் நீராற்றல்.
9.பின் தரைத்தளச் சுவர்கள் கட்டி, ஜன்னல் & கதவு நிலைகளைப் பொருத்தல்,
10. தண்ணீர்க் குழாய்கள், மின் குழாய்கள், கழிவறைக் குழாய்கள் பொருதல்,
11. சுவர்களுக்கும் கூரை விதானத்திற்கும் (Ceiling) கலவைப்பூச்சு பூசுதல் ,
12. தரைத்தளத்திற்கு பளிங்கு ஒடுகள் போடல் குளியலறை, கழிவறை ஒடுகள் ஒட்டல்,
13. உள்ளேயும் வெளியேயும் வண்ணப்பூச்சு பூசுதல்,
14. பின்னர்-கடைசியாக சுற்றுச்சுவர் கட்டி, பூசி, வண்ணம் பூசுதல்,
15.வரவேற்பறை, சமையலறை இவற்றில் மரவேலைகள் செய்தல் இப்படி இந்த பட்டியல் நீளும்.
- பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் ,
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
www.buildersline.in
PH:No:8825479234
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|