Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 27 நான் எனது ஜி+2 கட்டுமானத்திற்காக கிட்டத்தட்ட 16 பில்லர்களை கடந்த அக்டோபர் மாதம் எழுப்பி இருந்தேன். வெறும் அஸ்திவாரம் வரையில் கான்கிரீட் அமைக்கப்பட்டு தரையில் இருந்து டி.எம்.டி. சென்ட்ரிங் கம்பிகள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. மழையின் காரணமாக 2 மாத காலம் கட்டுமானப் பணிகளை அப்படியே விட்டு விட்டேன். தற்போது பணிகள் துவங்கலாம் என்றால், டி.எம்.டி கம்பிகள் அதிகமாக துருப்பித்து இருக்கின்றன. துருவை அகற்றாமல் பணிகளை தொடரலாமா? கூடாது என்றால், துரு அகற்ற என்ன வழி? - ஜீவ பிரகாசம், தனியார் நிறுவன கணக்காளர், திருநின்றவூர்.
நீட்டிவிடப்பட்ட டி.எம்.டி உறுதியூட்டிக் கம்பிகள் துருப்பிடித்து இருந்தால் கீழ்க்குறிப்பிடும் வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்.
• கம்பிகளின் மீது Brush கொண்டு Ruct Cleaner என்ற வேதித் திரவத்தைப் பூசி - குறைந்தது 3 மணி நேரம் ஊறவிடுங்கள்.
• பின்பு Wire Brush கொண்டு கம்பிகளைச் சுரண்டி துருத்துகள்களை அகற்றுங்கள்.
• அதன் பின்னர் நன்னீர் கொண்டு - Water Hose Pipe கொண்டு கம்பிகளைச் சுத்தம் செய்து காய விடுங்கள்.
• நன்றாகக் காய்ந்தபின்பு (2 முறைகள் - இரண்டு மணி) நேர இடைவெளியில் - கம்பிகளின் மீது துருத் தடுப்பான் பூச்சு ((Corrosion Inhibitor - say CERA REBARCOTE /Dr Fixit...........................) அடித்து உலரவிடவும்.
அதற்குப் பின்பு உங்களின் கட்டுமான வேலைகளைத் தொடரலாம்.
பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் ,
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
Ph:no:8825479234
Q: வீடு கட்டுதலில் உள்ள பல்வேறு பணிகளில் எதை முன் செய்வது? எதை பின் செய்வது என்கிற குழப்பம் என்னைப் போன்ற பலரிடம் உண்டு.. சதாரணமாக, ஒரு வீடு கட்டுவதில் அஸ்திவாரம். போர் போடுதல், செப்டிக் டேங்க் கட்டுதல் தொடங்கி பெயிண்டிங் வரை உள்ள கட்டுமானப் பணிகளின் சரியான வரிசை என்ன என்பதைக் கூற முடியுமா? - ஆராதனா அழகுக்கலை நிபுணர், சென்னை
பதில் :
----------
அழகுக் கலை நிபுணர் ஒருவர் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டுள்ளது எங்களை ஆச்சரியப் படுத்துவதாக உள்ளது.
நீங்கள் மேஸ்திரி மூலமாகத் தொழிலாளர் ஒப்பந்த முறையில் சொந்தமாக வீடுகட்டுவோர் என ஊகிக்கிறோம். இது ஒரு மோசமான- சங்கடங்களை ஏற்படுத்தும் கட்டுமானமுறையாகும். அத்துடன் கட்டுமானச் செலவை (கடைசியில் கணக்குப்பார்த்தால்) குறைந்தது 20% மிகுதியாக்குவது. எனவே, வேண்டவே வேண்டாம். கூடவே கூடாது என்று எச்சரிக்கிறோம்.
இப்பொழுது கேட்ட கேள்விக்குரிய பதிலைப் பார்ப்போம்.
வீடு கட்டுதலில் உள்ள பல துணைவேலைகள் (Sub works) 100க்கு மேலிருக்கும். அவை. ஒவ்வொன்றையும் இக்கேள்வி-பதில் பகுதியில் வெளியிடமுடியாது.
எனினும், சில முக்கியமான துணைவேலைகளை வரிசைப்படுத்தலாம் (according to construction-Technical sequence)
1. மனை சரிப்படுத்தல் - மண்சோதனை செய்தல்-ஆழ்துளைக்கிணறு அமைத்தல்,
2.கட்டட அளவுகளைக் குறித்து மண்
வெட்டுவேலை -சாதா 1:5:10 காங்கிரீட்போடல் ,
3. அடித்தள பெட்டி அடைப்பு - கம்பி கட்டிப் பொருத்தல் - M20/M25 தரக் காங்கிரீட் போடல்,
4. தூண்களை உயர்த்தித் தரைமட்டGrade beam வார்த்தல்.
5. தரைத்தளமட்டம் வரை மண் கொட்டிக் கொட்டிப்படுத்தி 1:5:10 காங்கிரீட் போடல்,
6. இதேசமயத்தில் கீழ்நிலைத்தொட்டி, அழுகுத் தொட்டி அமைத்தல்,
7. தூண்களை ஜன்னல் மட்டம் உயர்த்தி- சன்னல் விட்டம் போடுதல்,
8. தூண்களைக் கூரை கீழ்மட்டம் வரை உயர்த்தி-கூரைவிட்டம் & கூரைப்பலகம் அமைக்கப் பெட்டி அடைப்பு - தாங்கு அமைப்பு-கம்பிகட்டி இருத்தல் இதன்மீது M20/M25 தரக் காங்கிரீட் வார்த்து 14 நாட்கள் நீராற்றல்.
9.பின் தரைத்தளச் சுவர்கள் கட்டி, ஜன்னல் & கதவு நிலைகளைப் பொருத்தல்,
10. தண்ணீர்க் குழாய்கள், மின் குழாய்கள், கழிவறைக் குழாய்கள் பொருதல்,
11. சுவர்களுக்கும் கூரை விதானத்திற்கும் (Ceiling) கலவைப்பூச்சு பூசுதல் ,
12. தரைத்தளத்திற்கு பளிங்கு ஒடுகள் போடல் குளியலறை, கழிவறை ஒடுகள் ஒட்டல்,
13. உள்ளேயும் வெளியேயும் வண்ணப்பூச்சு பூசுதல்,
14. பின்னர்-கடைசியாக சுற்றுச்சுவர் கட்டி, பூசி, வண்ணம் பூசுதல்,
15.வரவேற்பறை, சமையலறை இவற்றில் மரவேலைகள் செய்தல் இப்படி இந்த பட்டியல் நீளும்.
பதிலளித்தவர் : பொறி.அ.வீரப்பன்
பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து
For Subscribe pl call: 88254 79234
www.buildersline.in
Q: நான் திருத்தனியில் 880 ச.அடியில் தனி வீடு ஒன்றை தெரிந்த மேஸ்திரி துணையுடன் கட்ட இருக்கிறேன்.எனக்கு சிமெண்ட் தொடர்பான கேள்வி இதுதான். 1.சந்தையில் ஏராளமான சிமெண்ட் நிறுவனங்கள் உள்ளன. அது ஒவ்வொன்றும் ஏராளமான பிராண்டுகளை தயாரிக்கின்றன. அவற்றில் எது No.1 Cement ? 2.கான்கிரீட் தயாரிப்பதற்கு ஒரு வகை சிமெண்ட், பூச்சுவேலைக்கு ஒரு சிமெண்ட் பயன்படுத்த வேண்டும் என எனது உறவினர் சொல்கிறார். அது உண்மையா ?உண்மையயனில் கான்கிரீட் தயாரிப்பதற்கும், பூச்சுவேலைக்கும் எந்தெந்த சிமெண்டை பயன்படுத்த வேண்டும். - பா.கணேசன் ,கொத்தூர்
பதில்: யார் (தகவல் தெரிந்த பெரிய புத்திசாலி) இப்படியயல்லாம் தெரிவிக்கிறார்கள். முற்ஷீலும் தவறான தகவல் எனினும் உறுதியான வலிமையான கட்டடத்திற்குக் கீழ்க்கண்டவற்றைப் பரிந்துரை செய்கிறோம். ஆனால் எல்லாவற்
றிற்கும் PPC (எரிசாம்பல் 35% வரை கலந்தது) சிமெண்ட் ஒன்றே ஏற்றது.
1. அடித்தளம், தூண், விட்டங்கள், பலகங்கள் - னி25 தரம் (1:1:2)
2. கட்டுவேலை - PPC - சிமெண்ட் கலவை விகிதம் 1:5
3. பூச்சுவேலை - PPC சிமெண்ட் கலவை விகிதம் 1:6
முதல் பத்தியைப் படித்து மறந்து விட்டேன்.
எந்தக் காரணத்திற்காகவும் மேஸ்திரி மூலமாக வேலையாள் ஒப்பந்தத்தில் (Lobour Contract ) வீடு கட்டவே கூடாது. அலைச்சலும் கூடுதல் செலவுமே (இறுதியில்) மிஞ்சும். தகுதியுடைய நல்ல நம்பிக்கையுடைய ஒரு கட்டுமானப் பொறியாளரிடம் கொடுத்து ((Plinth Area contract or total lump sun contract) மூலமாக) பதிவு பெற்ற ஒப்பந்தத்தினுடன் வேலையைச் செய்யுங்கள். கட்டடத்தின் உறுதிக்கும் வலிமைக்கும் ( (Structural Stability) ஒப்பந்தக் காரரைப் பொறுப்பாக்கி ஒப்பந்தத்தைப் போடுங்கள்.
- பதிலளித்தவர் பொறி : அ. வீரப்பன்
From Builders line Monthly
www.buildersline.in
For Subscribe pl call : 98417 43850
Q: அய்யா.., நான் சென்னை எண்ணூரில் ஒரு மருந்து பாட்டில்கள் கழிவு கிடங்கு ஒன்றை 4000 ச.அடியில் வைத்திருக்கிறேன். 33 அடி உயரத்தில் கான்கிரீட் கூரை போட்டிருக்கிறேன். அது மொட்டை தளமாக உள்ளது 20 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கட்டத்தில் நான் நீர்க்கசிவு தடுப்புக்கு என எதையும் செய்ய வில்லை.. இப்போது கட்டடத்தின் பல பாகங்களில் ஆங்காங்கே நீர்க்கசிவு ஆகிறது.. கட்டடத்தை நீரக்கசிவை தடுக்க...எனக்கு மூன்று விதமான யோசனைகள் எனக்கு நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அ. மெம்பரேன்.., போர்த்துதல், நீர்க்கசிவு தடுப்பு சிகிச்சை செய்தல்.. ஆ.வெதரிங்க் கோர்ஸ் டைல் பொருத்துதல், இ. கட்டடத்தின் கூரை மேலே பாலிகார்பனேட் கூரை நிறுவுதல் ( ஷெட் அடித்தல்) இந்த மூன்று வழிகளில் நான் எதை தேர்ர்ந்தெடுப்பது சிக்கனமானது? பயனுள்ளது? - குருசாமி., எண்ணூர்
ஒரு உள்ளூர் கட்டுமானம் பொறியாளரை அழைத்துச் சென்று கள ஆய்வு செய்து நீர்க்கசிவு எந்த இடங்களில், எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறியுங்கள்.
நீர்க்கசிவுத் தடுப்பு செய்ய - Ultra Tech-Seal & Dry திரவத்தில் 2 பூச்சுகள் (2Wats ) அடியுங்கள்.
வெதரிங் கோர்ஸ் மேலே புதியதாக ஓடுகள் பதித்தல் நல்ல பயன் தரும்.
மற்றவைகளால் விரும்பிய பயன் கிடைக்காது. தேவையற்ற வீண் செலவே.
Q: என் நண்பனின் பழைய வீடு ஒன்று ( சுமார் 45 ஆண்டு காலத்தியது) 'மெட்ராஸ் டெரஸ்' வகை கட்டுமானமாகும்.. ஜிூ 1 வீடு அது.. இப்போது அது மோசமான் நிலையில் உள்ளது. நாம் லேசாக அதிர்ந்து நடந்தால் மேலே சீலிங்கிலிருந்து மண் கொட்டுகிறது.. கட்டடத்தின் பல பாகங்க்கள் இப்படித்தான் உள்ளது வீடு முழுக்க மண்ணாகிறது. வசிக்கவே முடியவில்லை. இதை எப்படி தற்காலிகமாக சரி செய்வது? மரமாத்து வேலைகளை எப்படி தொடங்குவது? (அவர்களால் பெரும் பணம் செலவழிக்க முடியாது) - இசைப்பிரியன், திருச்சி..
மெட்ராஸ் டெரஸ் ரூஃபிங்கில் உள்ள மேல் பகுதியை முற்றிலுமாக எடுத்துவிட்டு (றுழழனநn சுயககநச- ஐ மட்டும் வைத்துக் கொண்டு) புதிதாகத் தளம் போடுங்கள். உள்;ர் - கட்டுமானப் பொறியாளர் உதவியை நாடுங்கள். அவர் செய்ய வேண்டியவைகளை எடுத்துச் சொல்வார்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|