Q: வீடு கட்டும்போது ஆங்காங்கே கனமான சுவர்களுக்கு பதிலாக, கிரில், ஜன்னல்கள் வைத்தால் கட்டுமானச் செலவு குறையும் என்பது சரியா? அப்படி செய்யலாமா? - ரம்யா,கல்லூரி மாணவி, ஆவடி
Q: நாங்கள் சென்னை கொளத்தூரில் புதிதாக ஃப்ளாட் வாங்க இருக்கிறோம்.சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து விட்டோம். கட்டுமானத்தின் தரத்தினை எப்படி சரிபார்ப்பது? கட்டுமானத்தின் தரத்தினை நாங்கள் எப்படி சரிபார்ப்பது? ( கான்கிரீட்டின் அடர்த்தி, பில்லர்களின் அளவு,சென்ட்ரிங் வேலைகளின் தரம் போன்றவை) - ம.அ.வரதராஜன், வில்லிவாக்கம்
கட்டுமான விதிகளின்படி கட்டப்பட்ட கட்டட த்தின் (Flatted Apartments) - கட்டுநர்/விற்பவர் - நகராட்சிக்கு/அல்லது நகர மற்றும் ஊரகத்திட்ட இயக்குநருக்கு (Diector of Town and country planing) ஒப்புதல் பெற அளிக்கப்பட்ட வரைபடங்கள், வடிமைப்புப் பொறியாளரிடமிருந்து பெற்ற கட்டுமான வரைபடங்கள் (Struchural brawings detailing foundation systems columns, Beans & stals etc) இவற்றை வீடு வாங்குபட்ருக்குத் தரவேண்டும், பல கட்டுநர்கள் இவற்றைத் தருவதேஇல்லை. கேட்டு வாங்குங்கள் (விலை கொடுத்தாவது)கட்டப்பட்ட கட்டடத்தின் தரம், வலிமை, நீடித்து நிற்கும் உறுதி இவற்றைப்பார்த்தறிய திறமையும் பட்டறிவும் கொண்ட தகுதியுடைய பொறியாளர் மூலமாகச் சோதிக்கலாம்.
பதிலளித்தவர், பொறி அ.வீரப்பன்
- From Builders line Monthly
To subscribe pl call : 88254 79234
www.buildersline.in
Q: அன்புள்ள பொறியாளர் அவர்கட்கு, எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் சந்தேகத்தை உங்களிடம் கேட்கிறேன். இப்போது எல்லா நகரங்களிலும் பாதாள சுரங்க ரயில் பாதைகள் வந்து விட்டன. கடுமையான நில நடுக்கத்தின் போது, இப்பாதைகள் (சுரங்க வழிகள்) மண் சரிந்து மூடப்படாமல் இருக்குமா? ஒருவேளை உள்ளே மக்கள் இருக்கும்போது, சுரங்கப்பாதை நில அதிர்வுகளால் பாதிக்கப்படும்போது மக்கள் எப்படி வெளியே வர முடியும்? -ஆர். சாருலதா, பேrன் டிசைனர், அண்ணா நகர், சென்னை
அன்பு சகோதரி சாருலதா அவர்களே!
அண்ணா நகரில் வசிக்கும் தங்களுக்கு (அண்ணா நகர் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை செல்வதால்) இத்தகைய பயம் வருவதற்குத் தகுந்த காரணம் உள்ளது.
முதலில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். சென்னை-மும்பை-டெல்லி- கொல்கத்தா போன்ற நகர்களில் அமைக்கப்பட்ட எல்லா சுரங்க ரயில் பாதைகளும் அப்பகுதிகளில் ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்க விசைகளைத் தாங்கி நிற்கும் வகையிலேயே (ரிக்டர் அளவுகோலில் 7.80 வரை) வடிவமைக்கப்பட்டு - உரிய பாதுகாப்பு வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ளன. எனவே சுரங்க ரயில் பாதைகளில் விபத்துக்கள் ஏற்படுவதில்லை.
மேலை நாடுகளில் - சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் முதலியவற்ஷீல் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகப் பயன்பாட்டிலுள்ள சுரங்க ரயில் பாதைகள் மிகவும் உறுதியுடன் பாதுகாப்புடன் உள்ளன. தரைமேல் செல்லும் இரயில் பாதைகளில் நாள்தோறும் நடைபெறும் விபத்துகளில் 1000 இல் ஒரு முறை கூட சுரங்க ரயில் பாதைகளில் நடைபெறுவதில்லை. அண்மையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ((Swiss Alps) உலகின் மிக நீளமான 56 கிமீ சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டு கோலாகலமாக சூன் 1, 2016கொண்டாடப்பட்டு திறக்கப் பட்டது.
சென்னையைப் பொறுத்த வரையில் - சென்னை நிலநடுக்க மண் டலம் 3- இல் வருகிறது. இதன் ரிக்டர் அளவுகோல் 3.50 முதல் 4.20 வரை (பாரம் ஏற்ஷீய ஒரு சரக்குந்து நெடுஞ்சாலையில் 60 கிமீ வேகத்தில் சென்றால் - அருகிலுள்ள வீடுகளில் ஏற்படும் அதிர்வுகளே - 3.50 முதல் 4.20 வரையுள்ள ரிக்டர் அளவின் அதிர்வுச் செஷீவு ஆகும். (Highest intensity of Earthquake) கடந்த 1000 ஆண்டுகளில் சென்னையில் நிலநடுக்கத்தால் எந்த பெரியபாதிப்பும் ஏற்படவில்லை.
எனவே, சென்னை மெட்ரோ சுரங்க ரயில் பாதைகளும் நிலநடுக்க விசைகளைத் தாங்கும் வகையில் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டு பாதுகாப்பாகக் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் சகோதரி சாருலதாவுடன் சேர்ந்து.
பதிலளித்தவர், பொறி அ.வீரப்பன்
- From Builders line Monthly
To subscribe pl call : 88254 79234
www.buildersline.in
Q: வீரப்பன் அய்யா அவர்கட்கு. நாங்கள் 2400 ச.அடி பரப்பு கொண்ட வீட்டு மொட்டை மாடியில் ஒளி ஊடுருவும் கூரை அமைக்க இருக்கிறோம். (தளத்தில் சிறி ய அளவில் மூலிகை சோப் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது ) பிவிசி, பாலி கார்பனேட் என பல வகை கூரைகள் சொல்கிறார்கள். செலவு குறைந்த, உறுதியான, லேசான கூரைப்பொருட்கள் ஏதாவது இருந்தால், அதன் குணாதிசயங்களோடு விலையையும் ஒப்பிட்டு எனக்குச் சொல்லுங்கள்.. - திருமதி. எம்.அர்ச்சனா, இல்லத்தரசி, விருகம்பாக்கம்
உங்கள் வீட்டு மொட்டைமாடித் தளத்தில் நிறைய வெளிச்சமும் காற்றோட்டமும் உடைய கூரை அமைப்பது வரவேற்கத்தக்கது, அதற்கு மேலும் புதிய கூரைக் கட்டுமானப் பொருளைப் பயன்படுத்திட வேண்டும் என்கிற உங்கள் ஆர்வம் மிகவும் பாராட்டத்தக்கது. ஆனாலும், இரண்டு நிபந்தனைகளை விதித்துள் ளீர்கள்
.
1. செலவு குறைந்த லேசான கூரைப் பொருள்.
2.உறுதியாக நிடித்து ழைக்கும் கூரைப் பொருள் எங்களுடைய கருத்துரைகள் இவைதான்.
1..Tata Structura / Jindal RHS / SHS எனப்படும் எஃகு உறுப்புகளைக் கொண்டு கூரைக் கட்டமைப்பு ஏற்படுத்தல் ,
2. அதன் மீது FRP (Fibre Reinforced plastic)
அல்லது polycarbonate Double walled sheet-corrugated & Grooved கொண்டு மூடுவது தேவைகளை நிறைவு செய்யும் (எனிலும் பிவிசி தகடோ/ FRP / Polycarbonate plain தகடோ நீடித்துழைக்காது, விலையும் கூடுதல். எனவே கூடாது)
3.பக்கவாட்டுச் சுவர்களை- போதுமான சன்னல்கள் வைத்த ஃபிளைஆஷ் செங்கல் சுவர்கள் கொண்டு அமைத்திடலாம்.
இதன் செலவு:-
எஃகு கூரையமைப்பு : ரூ. 150/ச.அடி,
Polycarbonate plain : : தகட்டுப் போர்வை ரூ. 400/ச.அடி. பக்கவாட்டுச் சுவர்கள், சன்னல்கள்
பூச்சுவேலை :
ரூ. 40 / ச.அடி.
கூடுதலாக டர்போ வெண்டிலேட்டர்கள் - 6 :
ரூ 1000/ ஒன்று . மொத்தச் செலவு :
ரூ 15 லட்சம் ஆகலாம்.
இதை 30/40 நாட்களில் கட்டி நிறைவு செய்யலாம், பராமரிப்புச் செலவு குறைவு, வசதியாக உழைக்கக் கூடியது. எஃகுக் கூரை அமைப்புக்கு ஒரு திறமை வாய்ந்த வடிவமைப்புப் பொறியாளரை அனுகுங்கள்.
Q: நான் திருத்தனியில் 880 ச.அடியில் தனி வீடு ஒன்றை தெரிந்த மேஸ்திரி துணையுடன் கட்ட இருக்கிறேன்.எனக்கு சிமெண்ட் தொடர்பான கேள்வி இதுதான். 1.சந்தையில் ஏராளமான சிமெண்ட் நிறுவனங்கள் உள்ளன. அது ஒவ்வொன்றும் ஏராளமான பிராண்டுகளை தயாரிக்கின்றன. அவற்றில் எது No.1 Cement ? 2.கான்கிரீட் தயாரிப்பதற்கு ஒரு வகை சிமெண்ட், பூச்சுவேலைக்கு ஒரு சிமெண்ட் பயன்படுத்த வேண்டும் என எனது உறவினர் சொல்கிறார். அது உண்மையா ?உண்மையயனில் கான்கிரீட் தயாரிப்பதற்கும், பூச்சுவேலைக்கும் எந்தெந்த சிமெண்டை பயன்படுத்த வேண்டும். - பா.கணேசன் ,கொத்தூர்
யார் (தகவல் தெரிந்த பெரிய புத்திசாலி) இப்படியயல்லாம் தெரிவிக்கிறார்கள். முற்ஷீலும் தவறான தகவல் எனினும் உறுதியான வலிமையான கட்டடத்திற்குக் கீழ்க்கண்டவற்றைப் பரிந்துரை செய்கிறோம். ஆனால் எல்லாவற்
றிற்கும் PPC (எரிசாம்பல் 35% வரை கலந்தது) சிமெண்ட் ஒன்றே ஏற்றது.
1. அடித்தளம், தூண், விட்டங்கள், பலகங்கள் - னி25 தரம் (1:1:2)
2. கட்டுவேலை - PPC - சிமெண்ட் கலவை விகிதம் 1:5
3. பூச்சுவேலை - PPC சிமெண்ட் கலவை விகிதம் 1:6
முதல் பத்தியைப் படித்து மறந்து விட்டேன்.
எந்தக் காரணத்திற்காகவும் மேஸ்திரி மூலமாக வேலையாள் ஒப்பந்தத்தில் (Lobour Contract ) வீடு கட்டவே கூடாது. அலைச்சலும் கூடுதல் செலவுமே (இறுதியில்) மிஞ்சும். தகுதியுடைய நல்ல நம்பிக்கையுடைய ஒரு கட்டுமானப் பொறியாளரிடம் கொடுத்து ((Plinth Area contract or total lump sun contract) மூலமாக) பதிவு பெற்ற ஒப்பந்தத்தினுடன் வேலையைச் செய்யுங்கள். கட்டடத்தின் உறுதிக்கும் வலிமைக்கும் ( (Structural Stability) ஒப்பந்தக் காரரைப் பொறுப்பாக்கி ஒப்பந்தத்தைப் போடுங்கள்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|