Q: சார்.. நீங்கள் சென்ற மாதம் 'பிரிகேஸ்ட் பலகையால் ஆன அடுக்கு மாடி வீட்டை வாங்காதீர்கள்' என ஒரு வாசகரை தவறாக அறிவுறுத்தியதைப் படித்தேன்....பார்ட்டிஷியன் சுவர்கள்.., வெளிப்புறச் சுவர்கள் ஆகியவற்றை பிரிகேஸ்ட் பலகையால் தான் துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் கட்டுகிறார்கள். அங்க்கெல்லாம் சுவர்கள்.,தளங்கள் மட்டும் தான் கான்கிரீட்.. இப்படி செய்வதால் கட்டடத்தின் எடை குறைகிறது. ஆனால், நீங்களோ பிரிகேஸ்ட் தடுப்புச் சுவர்களினால் ஆன வீட்டை வாங்கக்கூடாது என்கிற ரீதியில் ஆலோசனை சொல்லியிருக்கிறீர்கள்.. (பில்டர்ஸ்லைனும் யாதொரு தணிக்கையுமின்றி உங்கள் பதிலை அப்படியே பிரசுரித்திருக்கிறது.). இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் புது தொழிற் நுட்பத்தை ஏற்காமல் மறுத்துக்கொண்டே இருக்கப் போகிறீர்களோ...? - எஸ். தனபால்.,ஆர்ஆர்பிரிகேஸ்ட்., மதுரவாயல்.
தங்களின் கருத்திலிருந்து முற்றிலும் நான் மாறுபடுகிறேன். கீழ்க்கண்ட காரணங்களின் அடிப்படையில் நான் தரமான முன் ஆயத்தக் காங்கிரீட் கட்டுமானங்களை எப்போதும் விரும்புகிறவன்; ஆதரவாளரும் கூட. நான் முதுநிலைப் பொறியியல் (ME Structures) படித்த போது என் சிறப்புப் பாடம் Precast Concrete Construction தான்.
சென்ற மாத வாசகர் திரு. சிவா, பிரிகேஸ்ட் கன்ஸ்ட்ரக்rன் உறுப்புகளின் தரநிலை வாக்கியங்களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். நீங்களாக இருந்தால் அதை ஒப்புக் கொள்வீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் உருவாக்கிய உருவகம் தரமற்ற கட்டுமானமாக இருந்தமையால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
என்னுடைய நண்பர் பொறியாளர் ஒருவர் சிங்கப்பூரிலும், சென்னை கோவை நகர்களில் முன் ஆயத்தக் காங்கிரீட் கட்டுமானம் செய்கிறார். அவற்றில் சிலவற்றுக்கு நான் வடிவமைப்பு செய்து தந்துள்ளேன்.
புதிய தொழிற்நுட்பம் நம் வழக்கமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டிற்கு ஒத்ததாகவும் இருக்க வேண்டும். நீங்கள் நினைப்பது போல 50மிமீ கனமுடைய சுவர்களை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை.
புதிய தொழிற்நுட்பம், விரைவான கட்டுமானம் என்றாலும் கட்டுமானச் செலவு குறையவில்லை.
Precast Modular Construction. ஒவ்வொருவருக்கும் மாறுபடும். Standard Dimensions-களை ஒப்புக் கொண்டால் முன் ஆயத்தக் காங்கிரீட் வீடுகள் பயனானவை.
குறிப்பு: அனுபவம் வாய்ந்த ஒரு கட்டுமானப் பொறியாளர் என்ற வகையில் என் கருத்துகளைச் சொல்ல முழு உரிமை எனக்குண்டு. இதிலே தணிக்கை எங்கே வருகிறது?

Q: சார் எனக்கு ..,200 ச.அடி பரப்பில் அலுவலக அறை அமைக்கும் வேலை ஒன்று வந்தது.. அது ஒரு காகித பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கு ஆகும்.. தரைலிருந்து 22 அடி உயரத்தில் சீலிங் இருந்தது.. இப்போது சீலிங்கிற்கும் தரைக்கும் நடுவே ( சீலிங்கை தொட்டபடி..,8 அடி உயரத்தில்) ஒரு அலுவலக அறையும்..போக வர, படிக்கட்டும் அமைக்க வேண்டும் என என்னை அணுகினார்கள். கீழே பில்லர்கள் இல்லாமல் .., பக்கச்ச்சுவரிலிருந்து கான்கிரீட் நீட்டல் மூலம் அமைத்து தரச் சொன்னார்கள். நான் அது போன்ற வேலைச் செய்தது இல்லை என்பதால்., மறுத்து விட்டேன்.. இதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள்? எனத்தெரியவில்லை... இதுபோல கட்டுமானங்கள் பாதுகாப்பனாதா? இது பற்றிய வழிகாட்டுதல் குறிப்பு தேவை.. பொறி.இனியன்.., சென்னை.., மிண்ட்
இத்தகைய கட்டுமானங்கள் பெருங்காற்றின் போதும் சிறிய நில நடுக்கத்தின்போதும் பெரிய ஆபத்தை /விபத்தை ஏற்படுத்தும். எனவே, முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய அமைப்புகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்ட அனுமதியோ கட்டுமான ஒப்புதலோ தரப்பட்டிருக்காது.
எனவே, இவ்வேலை வேண்டாம். விலகி நில்லுங்கள் பொறிஞர் இனியன் அவர்கள் (தங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது).
Q: பொதுவாக எனக்கு ஒரு அய்யம்.. ஒரு கட்டுமானத்தை ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு கட்டிய பிறகு வேறொரு பயன்பாட்டுக்கு ஏற்றார்போல் மாற்றி அமைக்க முடியாது.. உதாரணத்திற்கு அலுவலக அறையை வசிப்பிடமாக்குவதில் சிரமமாக இருக்கும்.. தொழிற்சாலையை ஹோட்டலாக மாற்ற முடியாது...திரையரங்கை..,.அலுவலகத்தை ஒர்க் ~hப்பாக மாற்ற முடியாது. அவ்வளவு ஏன் பெட் ரூமை க்கூட கிச்சனாக மாற்ற முடியாது.. உண்மை இப்படி இருக்க..,சட்ட மன்றக் கட்டடத்தையே.., மருத்துவமனையாக ( பயன்பாடு மட்டும் ., கட்டடத்தை அல்ல) மாற்றி அமைத்த அதிபுத்திசாலிகள் பற்றி உங்கள் கருத்து.. - சுதாகர்.., மணிமங்கலம்
ஒரு கட்டடத்தை ஒரு பயன்பாட்டிற்காகக் கட்டியபிறகு வேறொரு பயன்பாட்டிற்கு (அதுவும் கூடுதல் பாரம் வரும்) மாற்றக் கூடாது. முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.
.இது பாதுகாப்பினைக் குறைத்து கட்டடங்களின் பயன் படுகாலத்தைக் குறைப்பதுடன் இரட்டை வெட்டிச்செலவு. அப்படித்தான் சட்டமன்றக் கட்டடத்தை பல்துறை மருத்துவமனையாக மாற்றினார்கள். அன்று முதலமைச்சராக இருந்தவரின் தனிப்பட்ட பொறாமை மற்றும் ‘தான்’ தான் எல்லாம் என்ற தன்முனைப்பு (Ego).
பொதுவாழ்வில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. சொந்த நலனுக்காக - அச்ச உணர்வோடு எடுபிடிகளாகச் செயற்பட்ட பொறியாளர்களின் தவறான பிழைப்பு முற்றிலும் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இடிப்பார் இல்லா ஏமரா மன்னன்; அச்சம் என்பது கீழ்களது ஆசாரம் என்பதை உணராத அரசு அதிகாரிகளின் விளைவே இது.
Q: நான் சென்னை, பட்டாளம் பகுதியில் ஒரு அதி உயரக்கட்டத்தில் ஃபிளாட் ஒன்றை வாங்க்குவதற்காக சென்றேன்.. பத்தாம் மாடியில் ஃப்ளாட்... தரை கூரை மட்டும் தான். கான்கிரீட். போட்டிருந்தார்கள். . 800 ச.அடியில் சுற்றிலும் ஒரே ஹாலோவாக இருக்கிறது.. சுற்றிலும் சுவர்களே இல்லை..கேட்டால் நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அறைகளை காங்கிரீட் பலகைகள் வைத்து முடுக்குவார்களாம்.. பார்ட்டிஷியன் சுவர்கள் என்றால் கூட பரவாயில்லை.. வெளிப்புறச் சுவர்கள் கூட காங்கிரீட் பலகைகள் தானாம்.. என்னடா இது ? என பயந்து வந்து விட்டேன்.. இது போன்ற வீடுகள் பாதுகாப்பானது தானா? செலைவக் குறைக்க இப்படி செய்கிறார்களா? இல்லை கட்டட எடை குறைக்க இப்படி செய்கிறார்களா? - ஆர்.சிவா.சென்னை., பெரம்பூர்
நிச்சயமாக இந்தத் தளம் கட்டுவதற்கு உரிய அனுமதி இருக்காது. எனவே நிச்சயமாக இதைத் தவிருங்கள். இத்தகைய அறைகளில் உரிய பாதுகாப்பு இருக்காது. செலவைக் குறைக்கவும் உள்ளாட்சி திட்ட அதிகாரிகளை ஏமாற்றவும் ( அல்லது கையூட்டு கொடுத்தும்) இப்படிச் செய்கிறார்கள்.
இத்தகையவர்களுக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|