Q: ஆற்றுமணலுக்கு இது வரை பிராண்ட் பெயர் இல்லாத போது.., இப்போது எம்.சாண்டுக்கு பிராண்டிங் வர ஆரம்பித்திருப்பது நல்லதா? தவிர்க்க கூடியதா? நீங்கள் இதை வரவேற்கிறீர்களா? உங்கள் கருத்தென்ன? - சங்கையன்.,நெல்லை
எம் சேண்ட் எனப்படும் செயற்கை மணலுக்கு பிராண்ட் பெயரோடு நிறைய பேர் சந்தைப்படுத்த வந்துள்ளதை முழுமனதோடு வரவேற்கிறேன்.
அப்பொழுதுதான் செயற்கை மணலின் தரத்தை உயர்த்த முடியும். உறுதிப்படுத்தவும் தேவையானது. விலையும் குறையும் வாய்ப்புண்டு.
Q: அய்யா.. எங்களுக்கு சொந்தமாக ஒரு கிரவுண்ட் கட்டுமானம் ( ஷெட்) ஒன்று உள்ளது. 30 அடி உயரத்தில் சீலிங்க்(கான் கிரீட் சமதள கூரை) கட்டமைக்கப்பட்டிருக்கிறது. , இப்போது தரையிலிருந்து 20 அடிக்கு மேலாக., சீலிங்கை தொட்டபடி 15 க்கு 10 என்ற நீள அகல கணக்கில் பில்லர்கள் இல்லாமல் ஒரு கண்காணிப்பு அறை ஒன்றைக் 10 அடி உயரம் உடையதாகக் கட்ட உள்ளோம்.. பக்கவாட்டு சுவர்கள் மற்றும் கூரை சப்போர்ட்டில் இந்த சிறிய அறையை அமைக்க உள்ளோம்.( தரை டூ அறை ஸ்ரீ 20 அடி கிளியரண்ஸ்) ஆனால்., கிட்டத்தட்ட இதே அளவுகளில் ஒரு அறை அமைக்க வாசகர் ஒருவர் (பொறி. இனியன்) சென்ற மாதம் தங்களிடம் ஆலோசனை கேட்க., தாங்களோ அது போன்ற கட்டுமானங்க்களை கட்ட வேண்டாம் என பயமுறித்தி இருந்தீர்கள். கீழே வாகனங்கள் வந்து போக இடைஞ்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பில்லர்கள் வைக்க முடியாது.. எனவே, காண்டிலிவர் டைப் கட்டுமானங்கள் தானே அப்பிரச்சனையை தீர்க்கும்? உங்களுக்கு ஏண் காண்டிலிவர் கட்டுமானங்கள் மீது நம்பிக்கை இல்லை..? - ஜி.ஜி.பிளாஸ்டிக்க்ஸ்., பூங்குன்றன், அரியலூர்.
திரு. பூங்குன்றனும் தவறாகப் புரிந்து கொண்டு அல்லது முழுமையான புரிதலன்றிஎழுதியுள்ளார். நான் கொடுங்கை வடிவ (Cantilever) கட்டுமானங்களை மிகவும் விரும்பி வடிவமைப்பவன்.
100 அடி முதல் 200 அடி வரை இடையில் தூண்களின்றி தொழிலகங்களை வடிவமைத்துக் கட்டியவன். இருபக்க 50 அடி இடைவெளி கொண்ட கொடுங்கை வடிவ மாமண் நீர் பேருந்து நிலையத்தை வடிவமைத்துக் கட்டியவனும் நானே.
சென்னை அம்பத்தூரில் India Land Towers Building Main Entrance -12m Long Cantilever ஆக குறைந்த செலவிலும் வடிவமைத்துள்ளேன்.40 ஆண்டுகளுக்கு முன்பே சிதம்பரம் மின் நகரில் ஒற்றைத் தூணில் 6 கொடுங்கை விட்டங்களோடு (ஒவ்வொன்றும் 15 அடி) ஒரு வீட்டை வடிவமைத்து என் நண்பர் கட்டியுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள என்னுடைய சொந்த வீட்டில் தூண்களின்றி 3.40 மீட்டர் நீள கொடுங்கையோடு வீட்டுப் பால்கனி கட்டப்பட்டிருக்கிறது, 3 ஊர்திகள் தடையின்றி நிறுத்தப்பட.
எனவே தாங்கள் குறிப்பிடுவது போல கீழே வாகனங்கள் இடைஞ்சலின்றி வந்து போக தூண்களின் இடையில்லா கேண்டிலிவர் கட்டுமானங்கள் வாய்ப்பாக அமையும் என்ற கருத்தை வழிமொழிகிறேன்.
Q: சார்.. நீங்கள் சென்ற மாதம் 'பிரிகேஸ்ட் பலகையால் ஆன அடுக்கு மாடி வீட்டை வாங்காதீர்கள்' என ஒரு வாசகரை தவறாக அறிவுறுத்தியதைப் படித்தேன்....பார்ட்டிஷியன் சுவர்கள்.., வெளிப்புறச் சுவர்கள் ஆகியவற்றை பிரிகேஸ்ட் பலகையால் தான் துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் கட்டுகிறார்கள். அங்க்கெல்லாம் சுவர்கள்.,தளங்கள் மட்டும் தான் கான்கிரீட்.. இப்படி செய்வதால் கட்டடத்தின் எடை குறைகிறது. ஆனால், நீங்களோ பிரிகேஸ்ட் தடுப்புச் சுவர்களினால் ஆன வீட்டை வாங்கக்கூடாது என்கிற ரீதியில் ஆலோசனை சொல்லியிருக்கிறீர்கள்.. (பில்டர்ஸ்லைனும் யாதொரு தணிக்கையுமின்றி உங்கள் பதிலை அப்படியே பிரசுரித்திருக்கிறது.). இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் புது தொழிற் நுட்பத்தை ஏற்காமல் மறுத்துக்கொண்டே இருக்கப் போகிறீர்களோ...? - எஸ். தனபால்.,ஆர்ஆர்பிரிகேஸ்ட்., மதுரவாயல்.
தங்களின் கருத்திலிருந்து முற்றிலும் நான் மாறுபடுகிறேன். கீழ்க்கண்ட காரணங்களின் அடிப்படையில் நான் தரமான முன் ஆயத்தக் காங்கிரீட் கட்டுமானங்களை எப்போதும் விரும்புகிறவன்; ஆதரவாளரும் கூட. நான் முதுநிலைப் பொறியியல் (ME Structures) படித்த போது என் சிறப்புப் பாடம் Precast Concrete Construction தான்.
சென்ற மாத வாசகர் திரு. சிவா, பிரிகேஸ்ட் கன்ஸ்ட்ரக்rன் உறுப்புகளின் தரநிலை வாக்கியங்களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். நீங்களாக இருந்தால் அதை ஒப்புக் கொள்வீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் உருவாக்கிய உருவகம் தரமற்ற கட்டுமானமாக இருந்தமையால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
என்னுடைய நண்பர் பொறியாளர் ஒருவர் சிங்கப்பூரிலும், சென்னை கோவை நகர்களில் முன் ஆயத்தக் காங்கிரீட் கட்டுமானம் செய்கிறார். அவற்றில் சிலவற்றுக்கு நான் வடிவமைப்பு செய்து தந்துள்ளேன்.
புதிய தொழிற்நுட்பம் நம் வழக்கமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டிற்கு ஒத்ததாகவும் இருக்க வேண்டும். நீங்கள் நினைப்பது போல 50மிமீ கனமுடைய சுவர்களை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை.
புதிய தொழிற்நுட்பம், விரைவான கட்டுமானம் என்றாலும் கட்டுமானச் செலவு குறையவில்லை.
Precast Modular Construction. ஒவ்வொருவருக்கும் மாறுபடும். Standard Dimensions-களை ஒப்புக் கொண்டால் முன் ஆயத்தக் காங்கிரீட் வீடுகள் பயனானவை.
குறிப்பு: அனுபவம் வாய்ந்த ஒரு கட்டுமானப் பொறியாளர் என்ற வகையில் என் கருத்துகளைச் சொல்ல முழு உரிமை எனக்குண்டு. இதிலே தணிக்கை எங்கே வருகிறது?

Q: சார் எனக்கு ..,200 ச.அடி பரப்பில் அலுவலக அறை அமைக்கும் வேலை ஒன்று வந்தது.. அது ஒரு காகித பிளாஸ்டிக் பொருட்கள் கிடங்கு ஆகும்.. தரைலிருந்து 22 அடி உயரத்தில் சீலிங் இருந்தது.. இப்போது சீலிங்கிற்கும் தரைக்கும் நடுவே ( சீலிங்கை தொட்டபடி..,8 அடி உயரத்தில்) ஒரு அலுவலக அறையும்..போக வர, படிக்கட்டும் அமைக்க வேண்டும் என என்னை அணுகினார்கள். கீழே பில்லர்கள் இல்லாமல் .., பக்கச்ச்சுவரிலிருந்து கான்கிரீட் நீட்டல் மூலம் அமைத்து தரச் சொன்னார்கள். நான் அது போன்ற வேலைச் செய்தது இல்லை என்பதால்., மறுத்து விட்டேன்.. இதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள்? எனத்தெரியவில்லை... இதுபோல கட்டுமானங்கள் பாதுகாப்பனாதா? இது பற்றிய வழிகாட்டுதல் குறிப்பு தேவை.. பொறி.இனியன்.., சென்னை.., மிண்ட்
இத்தகைய கட்டுமானங்கள் பெருங்காற்றின் போதும் சிறிய நில நடுக்கத்தின்போதும் பெரிய ஆபத்தை /விபத்தை ஏற்படுத்தும். எனவே, முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய அமைப்புகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்ட அனுமதியோ கட்டுமான ஒப்புதலோ தரப்பட்டிருக்காது.
எனவே, இவ்வேலை வேண்டாம். விலகி நில்லுங்கள் பொறிஞர் இனியன் அவர்கள் (தங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது).
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|