MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: எங்கள் பக்கத்து வீட்டில் தரை தளத்தில் லேத் பட்டறை இருக்கிறது. அதில் இயந்திரங்கள் இயங்கும் போது எங்கள் கட்டடமும் அதிர்கிறது ( அப்பகுதியில் எல்லா வீடுகளும் ஒட்டியே இருக்கும்..) இதனால் எங்கள் கட்டத்திற்கு ஆபத்து வருமா? விளக்கவும்.. அந்த வீட்டின் உரிமையாளரே அந்த பட்டறையின் முதலாளி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.. தினமும் 10 மணி நேரம் வீடு அதிர்ந்து கொண்டே இருப்பது பெரும் மன உளைச்சலாக இருக்கிறது. தகுந்த ஆலோசனை சொல்லி உதவவும். - ஆராவமுதன்., கொரட்டூர்.., பேன்சி ஸ்டோர்


Answer:

லேத் பட்டறையிலிருந்து ஏற்படும் அதிர்வுகள் மிகுதியாக இருப்பதாகத் தெரிகின்றது.

அனுபவமும் திறமையுள்ள ஒரு பொறியாளரை அழைத்துச் சென்று கள ஆய்வு செய்யச் சொல்லுங்கள்.

வர் சொல்லும் வழிமுறைகளைக் கடைபிடியுங்கள். தொடர் அதிர்வுகள் கட்டத்தின் நிலைத்தன்மையை பாதிக்கவே செய்யும்.



Q: டியர் வீரப்பன் சார்! நான் ஆவடியில் ஜிூ1 கட்டுமானம் ( 800 ச.அடி) கட்ட இருக்கிறேன்.. சிமெண்ட் பொறுத்தவரை பலவித கிரேட் வகைகள் இருக்கின்றனவாம்.. நான் எதை? எதற்கு? பயன்படுத்த வேண்டும். இதை என் பொறியாளர் பார்த்துக் கொள்வார் என்றாலும்.., நானும் அந்த விவரங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.. - செழியன்.. ,வழக்கறிஞர், ஆவடி


Answer:

சிமெண்ட் வகைகளில் OPC -23 Grade, 43 Grade & 53 Grade என மூன்று வகைகள் உள்ளன. அதிகமாக புழக்கத்தில் இருப்பது OPC-53 Grade என்பதே.

இதைத் தவிர எரி சாம்பல் கலந்த PPC எனும் சிமெண்ட்டும் உள்ளது. கட்டுமான வேலைகள் அனைத்திற்கும் PPC சிமெண்ட்டையே பயன்படுத்திடப் பரிந்துரைக்கின்றோம்.



Q: தமிழ் நாட்டில் பொறியியல் தரம் இப்படி குறைந்து போனதற்கு காரனம் தமிழ் வழி கற்றல் தான் என்கிறார் என் பேராசிரியர்.. இதற்கு எளிய தமிழில் கட்டுமானக் கட்டுரைகள் எழுதும் உங்கள் மறுப்பு என்ன? தமிழ் வழி கற்றல் காரணமிலையெனில், பொறியியல் தரம் இப்படி குறைந்து போனதற்கு வேறு என்ன தான் காரணம்?. வட இந்திய மாநிலங்க்களிலும்., அண்டை மாநிலங்களிலும் பொறியியல் தரம் சூப்பராக இருப்பதற்கு அவர்கள் ஆங்கிலம் வழி கற்பது தானோ? - பிரதீப்,பீ. ,சிவில் நான்காம் ஆண்டு


Answer:

முற்றிலும் தவறான அரைவேக்காட்டுத்தனமான முடிவு உங்களின் பேராசிரியருடையது. தமிழ்வழிக் கற்றவர்கள் பலரும் பெரும் பொறுப்புக்களிலும் உயர் பதவியிலும் உள்ளனர். தமிழ்வழிக் கற்றல் நல்ல புரிதலையே ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தரம் குறைந்து போனதற்கு முக்கியமான காரணங்கள்:

1. கல்வியே வியாபார ரீதியில் அணுகப்பட்டு அளிக்கப்படல்.
2. திறமையும் அனுபவமும் இல்லாத பேராசிரியர்கள்
3. கல்லூரியில்   ஆய்வகம், நூலகம் மற்றும் போதுமான கட்டமைப்புகள் இல்லாமை.
4. பொறியியல் கல்வி - வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான விவரங்கள் தெரியாமல் புற்றீசல் போல நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளைத் திறந்தமை. எனவே, இன்றுள்ள 565 பொறியியல் கல்லூரிகளில் உதவாக்கரை 500 பொறியியல் கல்லூரிகளை உடனே மூடி - அவற்றை ITI தொழிற்கல்விப் பயிலகங்களாக மாற்றிட வேண்டும் என ஈராண்டுகளாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.



Q: தனி வீட்டு கட்டுமானத்திற்கு கான்கிரீட் தயாரிக்க ஏற்ற ஜல்லிகளை எவ்வாறு கண்டுகொள்வது? சப்ளையர்கள் தரமற்ற ஜல்லிகளை நம் தலையில் கட்டி விடுவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்....... - கு. ஆடல் நாயகன்., வழக்கறிஞர்.


Answer:

கருங்கல் சல்லிகளுக்கென தனியான தரக் குறிப்புகள் உள்ளன.  தட்டையாகவோ நீட்டாகவோ இல்லாமல் சிறிது ஒழுங்கற்ற குண்டு வடிவத்திலும் 5 கிலோ சுத்தியால் அடித்தால் உடையாதவையாகவும் இருக்க வேண்டும்.  

கட்டுமானப் பொறியாளர் அல்லது கட்டுமான மேற்பார்வையாளரிடம் கேட்டால் - தரமான கருங்கல் சல்லிகளைத் தெரிந்தெடுப்பர்.  கருங்கல் சல்லிகளின் தரக் குறிப்பறிய - ஏதாவது ஒரு Building Construction பாட நூலைப் படித்திடுக.



Q: சார் வனக்கம்... இது என் சொந்த கருத்து.. வட சென்னையில் பெரம்பூரில் திமுக ஆட்சியில் ஒரு பாலம் கட்டப்பட்டது..பின் அது அதிமுக ஆட்சியில் மண் பரிசோதனை தோல்வி எனக் கூறப்பட்டு நிறுத்தப்பட்டது...அதன் பின் மறுபடி திமுக அதில் சில மாற்றங்களை செய்து அப்பாலத்தை கட்டி முடித்தார்கள். அதில் அரசியல் கலந்திருந்தாலும்., வட சென்னை என்பது பொதுவாகவே மண் வளத்தில்., மண் இறுக்கத்தில் சற்று வீக்கான பகுதி என்பதையும்., அடித்தளத்தில் பாறைகள் அதிகம் இல்லை என்பதையும் அங்கு மண்ணின் தாங்குதிறன் குறைவு என்பதையும் நாம் மறுக்க முடியாது. என் கேள்வி என்னவென்றால்., மண்ணின் தாங்க்கு திறனில் தென் சென்னை போல அல்லாமல்., சற்று வீக்காக இருக்கும் வட சென்னையில் எப்படி 45 மாடிகள் கொண்ட ஒரு பன்னடுக்கு கட்டடத்தை கட்டுகிறார்கள்? (பார்க்க ஜூன் மாத பில்டர்ஸ்லைன்) (பெரம்பூர் பாலத்திலிருந்து 1 கி,.மீ தொலைவில் தான் இககட்டடம் கட்டப்பட இருக்கிறது) உங்கள் நேரடி பதில் தேவை.. - சௌம்யா ராமனாதன்., இண்டிரியர் டிசைனர்., புரசை


Answer:

வட சென்னை பெரம்பூர் பாலக் கட்டுமானத்தில் தவறான மண் பரிசோதனை அறிக்கை பொருத்தமான அடித்தளம் அமைக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டது.

வட சென்னை - தென் சென்னை அடிமனை மண்ணமைப்பில் (அடையாறு, கூவம், கடற்கரையோரப் பகுதிகள் தவிர) - இரண்டும் ஒன்றே தான்.  பல இடங்களில் 18 மீட்டர் முதல் 24 மீட்டர் அடியாழத்தில் கெட்டித்தரை (hard Strata) கிடைக்கிறது.  இதில் Deep Foundation எனப்படும் Group of Piles with pile cap at 20மீ மிலி 25மீ ஆழம் வரை போட்டு அதன் மீது 45 மாடிகள் கொண்ட பன்னடுக்குக் கட்டடத்தை எளிதாகக் கட்டலாம் பாதுகாப்போடு.  

பெரம்பூர் பாலத்தில் Shallow Foundation எனும் 3மீ - 5மீ ஆழத்தில் Gravity Type Foundation போட்டதால் சிக்கல்.  இரண்டும் இரண்டு வகையான அடித்தளக் கட்டமைப்பை கொண்டவை.  

எனவே வடசென்னையிலும் பன்மாடிக் கட்டடங்களை அச்சமில்லாமல் கட்ட முடியும்.

 



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000