MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: உலகக் கட்டக்கலையின் தலைநகராக பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோ நகரை யுனைஸ்கோ தன்னிச்சையாக தேர்வு செய்திருக்கிறது. கட்டடக்கலைக்கு எனப் பெயர் பெற்ற நாடுகளில் பிரான்ஸ், இந்தோனேஷியா,இந்தியா, சீனா போன்ற நாடுகள் இருக்க யுனைஸ்கோ பிரேஸிலை தேர்ந்தெடுத்தது சரியா? இதை ஒரு கட்டுமானப் பொறியாளர் என்னும் முறையில் நீங்கள் ஏற்கிறிர்களா? -இரா. மதிவாணன், ஆசிரியர், மணப்பாறை


Answer:

மதிவாணன் அவர்களே, உங்களுடைய கேள்வினுடைய உள்பொருள் எனக்குப் புரியவில்லை யுனேஸ்கா விவரங்களை நன்கு திரட்டி, முழு நிலையையும்தெரிந்த பின்பு தான் ஒரு நகரைத் தேர்ந்தெடுகிறது. இதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 



Q: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து விட்டார்கள். ஆனால் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து கட்டுமானத்தில் பயன்படுத்தலாம் , அதனால் கட்டுமானச் செலவுகள் குறையும் என பத்திரிககைகளில் செய்தி வருகின்றனவே. அதை எவ்வாறு எவ்விதத்தில் கட்டுமானத்தில் பயன்படுத்த முடியும் என நீங்கள் விளக்கமாய் கூற முடியுமா? -ஆர். வீரசோழன், தஞ்சாவூர்


Answer:

பிளாஸ்டிக்கு தடை விதித்ததனால் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து கட்டுமானத்தில் பயன்படுத்த பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக சாலைகள் போடுவதற்கு பயன்படுத்துகிறார்கள்? எவ்வளவு செலவு குறைகிறது? என்ற புள்ளி விவரங்கள் என்னிடம் இல்லை. இது பற்றி மேலும் அறிய இணையதளத்தைப் பார்த்திடுக.



Q: அய்யா.., நான் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து விட்டு களப்பணிக்கு சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஒரு பொறியாளன். நான் படித்த சிவில் பாட திட்டத்துக்கும் தற்போதைய நடைமுறை களப்பணிக்கும் தொழில்நுட்பங்களுக்கும் யாதொரு தொடர்புமின்றி தவிக்கிறேன். என்னால் ஒரு பிளானைப் பார்த்து புரிந்து கொள்ளக் கூட முடியவில்லை. நான் 15 ஆண்டுகாலம் பின் தங்கி இருப்பதாக உணர்கிறேன். இணைய தளம், பில்டர்ஸ் லைன் போன்ற தகவல் ஊடகங்களைத் தான் நம்பி இருக்கிறேன். இது நான் படித்த கல்லூரியின் தவறா? அரசாங்கத்தின் தவறா? அல்லது என் தவறா? - ஆர். பிரவீண் குமார், சென்னை


Answer:

இதுதான் இன்றைய பொறியியல் பாடத் திட்டத்திற்கும் எதார்த்த களப்பணிக்கு உள்ள வேறுபாடு. எனவேதான் நான் தொடர்ந்து ‘கட்டுமானப் பொறியியல் பேராசிரியர்கள் கெம்பாவுக்கு வரட்டும்; பொறியியல் மாணவர்கள் கெம்பா’ வில் இருக்கட்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன். புதிதாகப் படித்த பொறியியல் மாணவர்களுக்குக் குறைந்தது ஓராண்டாவது களப்பணியில் பயிற்சிகள் கட்டாயமாக தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் நிலமை சரியாகும்.

ஒரு பிளானைப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது, தற்கால கல்விமுறை மிகவும் மோசமான கல்வி முறை என்னும் உண்மையைச் சொல்கிறது. இவையயல்லாமே அரசாங்கத்தின் திட்டமிடாத தவறு என்றே சொல்லலாம்.



Q: அய்யா. கட்டுமானத்துறை தொடர்பாக பல்வேறு நகரங்களில் பலப்பல கருத்தரங்குகள் நடக்கின்றன. தங்களைப் போன்ற மூத்த பொறியாளர்கள், நிபுணர்கள் அதில் உரையாற்று கிறார்கள். அதில் இளம் பொறியாளர்கள் மற்றும் சீனியர் பொறியாளர்கள் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டு தங்கள் ஐயங்களைக் கேட்கிறார்கள். ஆனால் என் போன்ற மாணவ, மாணவியர்களுக்கு தனியாக ஏதும் கட்டுமானப் பயிலரங்குகள் நடக்கின்றதா? (ரூ.2,000 , ரூ, 3000 என அதிகக்கட்டணம் இல்லாமல்..?) -மதிவதனி., பி.இ. சிவில் பொறியியல் மூன்றாம் ஆண்டு, திருச்சி


Answer:

அன்புள்ள சகோதரி மதிவதினிஅவர்களே, பொறியியல் மாணவர்களுக்கு என்று தனியாக கட்டுமானப் பயிலரங்குகள் யாரும் நடத்துவதாகத் தெரியவில்லை. அதுவும் நீங்கள் எதிர்ப்பார்ப்பது போல மிகக் குறைந்த கட்டணமாக (ரூ 1000க்கு) செய்யமாட்டார்கள்.



Q: பொறியாளர் அவர்களே! நாங்கள் ஆவடியில் 1000 ச.அடியில் ஒரு வீட்டை இந்த தை மாதம் கட்டி முடித்திருக்கிறேன். 15 லட்ச ரூபாயில் நான் போட்ட பட்ஜெட் கிரகப்பிரவேச செலவெல்லாம் சேர்த்து 21 லகரத்தை தாண்டி விட்ட படியால் வீட்டின் பின்புற மற்றும் பக்கவாட்டுச் சுவர்களுக்கு சிமெண்ட் கலவை பூசாமல் விட்டு விட்டேன். மேற்கூரை தளம் கூட பூச வில்லை. என் கேள்வி என்னவென்றால், இது போல பூச்சு வேலை செய்யாமல் செங்கற்கள் சுவரை எவ்வளவு மாத காலம், விட்டு வைக்கலாம்? (என்னால் 4 ஆண்டுகளுக்கு தலை நிமிர முடியாது என்பது தான் உண்மை) - திருநாவுக்கரசன், சிறு தொழில் வியாபாரி, ஆவடி


Answer:

அன்புள்ள நண்பர் திருநாவுக்கரசர் அவர்களே, உங்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். ரூ.15 இலட்சம் பட்ஜெட் போட்டு, செலவு ரூ.21 இலட்சமாக மாறி இருப்பது நீங்கள் தொழிலாளர் ஒப்பந்த முறை (Labour Contract) மூலமாக உங்களுடைய வீட்டை கட்டியிருக்கிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

செங்கல் சுவரை பூச்சு வேலை செய்யாமல் விடுவது ஒன்றும் தவறன்று. வட மாநிலங்களில் பெரும்பாலான கட்டடங்களில் வெளிப்புற பூச்சு பூசாமலேயே தான் விடப்படுகின்றன. எனவே வெளிப்புறச் சுவர்களுக்கு சந்து பதித்தல் மாத்திரம் செய்வது நல்லது. அதைப்போல மேற்புற மொட்டை மாடித்தளத்திற்கு சிமென்ட் காரை கொண்டு ஒரு பூச்சு பூசுவது நல்லது. 10 ஆண்டுகளுக்குப் பயப்படாமல் இருக்கலாம்.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000