MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: நீங்கள் உள்பட பல மூத்த பொறியாளர் களும் சிவில் பயிலும் மாணவர்கள் கூடுதல் திறனை படிக்கும் காலத்தில் வளர்த்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுகிறீர்கள்.. நல்லது தான்.. ஆனால். எங்களைப் போன்ற கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்கள் ஏழ்மையில்.., பணவசதி இன்றி இருக்கிறோம். அது மட்டுமல்ல முதல் தலைமுறை பொறியியல் மாணவர்களான எங்களுக்கு வீட்டில் சரியான வழிகாட்டுதல் இல்லாததால், எங்களின் பாட திட்டம் படிப்பதற்கே நேரம் இல்லை.., கிரகித்து கொள்ளும் திறன் இல்லை.. இதில் பாட திட்டத்தை தாண்டி படியுங்கள் என்றால் அதற்கான நேரம், பண வசதி...எங்களுக்கு எங்கே இருக்கிறது? உங்கள் கால கட்டத்தில் இது போன்ற நடைமுறை சிரமங்களை தாண்டி எப்படி சிறப்பாக பொறியியல் பட்டம் பெற்றீர்கள்? அறிய ஆவலாக இருக்கிறது.. - இம்மானுவேல், காரைக்குடி, சிவில் 4 ஆம் ஆண்டு.


Answer:

நாங்கள் சிவில் பயிலும் 1960-1970ல் ஆண்டுகளிலும் எங்களுக்கும் இத்தகைய சங்கடங்களும் சிக்கல்களும் இருக்கவே செய்தன. ஆனால் நாங்கள் படித்த கல்லூரி எல்லா வசதிகளையும் கொண்டது. 

 

பேராசிரியர் பெருமக்கள் மிக அக்கறைக் கொண்டு மிகத் தெளிவான பொறியியல் கல்வியை எங்களுக்கு அளித்தனர்.

 

எங்களை அக்கறையோடு அணுகி கற்பித்த பேராசிரியர்களும் இப்போது இல்லை.  எனவே, நிலைமை மோசமாக இருக்கிறது என்பது உண்மைதான்.



Q: சர்.விஸ்வேஸ்வராயா.., லாரி பெக்கர், பென்னி குக் மூவருக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள் என்னவென கூற முடியுமா? - ஆர். மதிவாணன், ஆசிரியர் மணப்பாறை..


Answer:

அன்புள்ள ஆசிரியர் மதிவாணன் அவர்களே, பட்டிமன்றம் நடத்தி இவர்களின் சாதனைகளைப் பட்டியலிட முடியாது. 

 

சர். விஸ்வேசுவராயா ஒரு மாபெரும் பொஷீயாளர்; சிறந்த ஆட்சியாளர். நாட்டின் தேவையுணர்ந்த தேசியத் தலைவர். வாழ்நாளில் மாபெரும் சாதனைகள் செய்தவர். அவரோடு லாரி பேக்கரை எப்படி ஒப்பிடுவது என்று தெரியவில்லை.  லாரி பேக்கர் தற்சார்பு கட்டடக்கலையை வலியுறுத்தியவர்.  

அவர் ஒரு கிராமிய கட்டடக் கலைஞர் மட்டுமே. 


பென்னி குக் ஓர் சமுதாய சிந்தனை மிக்க ஆங்கிலேயப் பொறியாளர். இவர்கள் மூவரையும் ஒப்பிட முடியாது, ஒவ்வொருவரும் தங்கள் துறைகளில் பணிகளில் மேம்பட்டவர்கள்.



Q: ஃபாஸ்ட் செட்டிங்க் சிமெண்ட் என்பது என்ன? அதன் குணாதிசயம் என்ன? அது நல்லதா? அதை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்..? - ஆர்.சாரதா, சிவில் பொறியியல் 4 ஆம் ஆண்டு, மதுராந்தகம்


Answer:

விரைவாக கெட்டியாகும் சிமெண்ட் (Rapid Hardening Cement - RHC ) என்பது கூடுதலான நுண்மையான துகள்களைக் கொண்டது. OPC சிமெண்ட்டின் நுண்மை 2250 cm2 /gm.

 

ஆனால் விரைவாக கெட்டியுறும் சிமெண்டில் நுண்மை 3250 cm2 /gm.. எனவே இது விரைவில் கெட்டியாகி அதிக வலிமையைத் தருகிறது. இது போன்ற விரைந்து கெட்டியுறும் OPC 53 கிரேடு வந்தபிற்பாடு. இந்த விரைந்து கெட்டியுறும் (RHC) சிமெண்ட்டுகள் தயாரிக்கப்படுவதில்லை. 

 

அதற்கு பதிலாக OPC 53 Grade சிமெண்டைப் பயன்படுத்தலாம் முன்வார்க்கும் காங்கிரீட் உறுப்புகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் இவற்றில் இத்தகைய சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.



Q: அய்யா.. நாங்கள் புதியதாக வாங்கிய மனை (அது 30க்கும் நாப்பது அடி அளவிலான அரை கிரவுண்ட் மனை ஆகும்) தெரு வாட்டத்தில் இருக்கிறது. அதாவது கிராஸாக உள்ள தெருவின் வாட்டத்தில் எங்கள் மனையும் கிராஸாக இருக்கிறது. வீட்டை சரிபடுத்து நேராக கட்டினால் வீட்டின் நான்கு பக்கமும் நிலம் வீணாகிறது. இப்போது தெரு வாட்டத்திலேயே நான் வீடு கட்டவேண்டுமா? இல்லை.. வீட்டை சரிபடுத்தி நேராக கட்ட வேண்டுமா? உங்கள் புரிதலுக்கு ஒரு வரை படத்தை அனுப்பியுள்ளேன். - மீனாட்சி சுந்தரம், ஓவியர்..


Answer:

வீட்டைச் சரிபடுத்தி நேராகவே கட்ட வேண்டும் உங்கள் படத்தில் (ஆ) வரைபடம் சரியானது. வீடு கட்டும் போது வீட்டுமனைவீணாகாமல் கட்டு வதுதான் மிகச் சரியானது.



Q: அய்யா. எஃகிழை உறுதியூட்டிய காங்கிரீட் (Steel Fibre Reinforced Concrete SFRC) தரைத்தளங்களின் நன்மைகள் என்ன என்பதைக் கூற முடியுமா?


Answer:

தொழிற்சாலைகளின் தரைத்தளம் (Basic Flooring ) போடுவதற்குப் பல ஆண்டுகளாகவே எஃகுக் கம்பிகள் உறுதியூட்டிய உயர்தரக் காங்கிரீட்டை (M20,M25,M30) பயன்படுத்தி வந்தார்கள். இத்தகைய தளங்களின் மேல் பரப்பில் ஆங்காங்கே இழுவிசை விரிசல்கள் (Tensile Surface Cracks ) ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. (Cross section of Flooring Concrete).

 

ஆனால் அண்மைக் காலங்களில் பல வடிவமைப் பாளர்களும் கட்டுநர்களும் Steel Rebars  க்குப் பதிலாக Steel Fibres - ஐ பயன்படுத்திக் காங்கிரீட் தளங்களைப் போட்டு வருகிறார்கள். (Cross Section of SFRC Dramix Steel Fibre ) 10 கிலோ முதல் 30 கிலோ ஒரு கனமீட்டருக்கு காங்கிரீட்டில் கலக்கிறார்கள்.

 

எஃகிழை உறுதியூட்டிய காங்கிரீட் தரைத்தளங்கள் கீழ்க்கண்ட நன்மைகளை / பயன்களை உடையவையாக உள்ளன.

 

 மேல் தளப்பரப்பில் இழுவிசை விரிசல்கள் பெரும்பாலும் விழுவதில்லை.


* தரை இணைப்புப் பகுதிகளில் முனைகள் பொடிந்து விழுவதில்லை.


* தரை இணைப்புகள் போதுமான தாங்கு வலிமை உடையனவாக உள்ளன.


* தரைப்பரப்பு கூடுதலான தாக்கு விசையினைத் (Impact) தாங்குகிறது.


*அடிக்கடி திரும்பத்திரும்பப் பயன்படுத்து வதற்கேற்ற தடுப்புத் தன்மையுள்ளதாக இருக்கிறது.


* குறிப்பாக  தரைத்தளப் பராமரிப்புச் செலவு குறைகிறது.


* கூடுதலான காலத்திற்குப் பயன்படத்தக்க அளவில் அமைகிறது.


  இந்த எஃகிழை கலந்த காங்கிரீட்டை எங்கெங்கே பயன்படுத்தலாம்?


* சுரங்கங்களுக்கு உள் மேலுறை அமைத்திட


* தொழிற்சாலை மற்றும் சரக்கறைகளின் தளங்கள்


* முன்வார்த்த (கனங்குறைந்த) காங்கிரீட் சுவர்கள்


* முன்வார்த்த காங்கிரீட் குழாய்கள் தயாரித்திட சாலைகள், பாலங்கள், விமான ஓடுதளங்கள் முதலியவைகளின் அடித்தளங்களின் கீழே / மேலே காங்கிரீட்டு      பலகங்கள் அமைக்க மழைநீர் வடிகால்கள் / கழிவு நீர்க்கால்வாய் இவற்றின் மூடுபலங்கள் இப்படி எண்ணற்ற காங்கிரீட் வேலைகளுக்கு எஃகிழைக் காங்கிரீட்டைப்  பயன்படுத்துவோம். 


 தரமான உறுதியான கட்டுமானங்களை உருவாக்குவோம்.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000