Q: இரும்புக்கம்பியின் வளையும் தன்மை ! முன்னணி பிராண்ட் இரும்புக் கம்பிகளில் கிரேட் 40 மற்றும் கிரேட் 60 ஆகியவற்றின் Yield Strength மற்றும் Ultimate Strength என்னவாக இருக்கும் என்பதை கூற முடியுமா? - பாஸ்கர், கட்டட ஒப்பந்தக்காரர்
திரு. பாஸ்கர் அவர்களே! கட்டட ஒப்பந்தக் காரராக இருந்துக் கொண்டு வெளிச்சந்தையில் விற்கப்படும் எஃகு உறுதியூட்டிகளின் தரங்களைத் தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள்? என்று தெரியவில்லை. எஃகு கம்பிகளின் Grade 40,60 என்றெல்லாம் ஒன்று இல்லை.
மாறாக Grade Fe 415, Fe 500, Fe 500D, Fe 550, Fe 550D, முதலிய தரங்கள் தான் உள்ளன. இந்த எஃகு கம்பிகள் Yield Strength (Fe 500 N / mm2 / Fe 550N / mm2) Fe 415N / mm2 Ultimate Strength என்று பொருள்.
Q: சார் ! நான் ஒரு ஹோட்டல் 7 லாட்ஜ் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எரிசாம்பல் கொண்டுக் கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் உள்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் முழுதும் மரத்தகடுகள் கொண்டு மூடப்படுகின்றன. சுவர் மேற்பூச்சுக்கு பதிலாக டைல் மார்பிள்கள் மரத்தகடுகள் கொண்டு மூடகூடாது என்பது தானே சரி விளக்கவும். - பொறி. செழியன், திருவண்ணாமலை.
நீங்கள் குறிப்பிடும் கட்டடம் ஒரு உணவகம் ஆகவும் தங்கும் விடுதியாக இருப்பதால் மரத் தகடுகள் கொண்டு (Wooden Panelling) மூடப்படுகின்றன. இதனால் கட்டடத்தினுள் உள்வரும் அதிக வெப்பத்தைத் தடுக்கலாம். AC க்கு தேவைப்படும் மின்சாரமும் குறையும் Wooden Panels / Sound Insulating Materlal ஆகவும் பயன்படுகிறது.
எனவே மரத் தகடுகள் பயன்படுகிறது. எனவே மரத் தகடுகளைப் பயன்படுத்துவது சரிதான்.
Q: சார்! நான் சிவில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். எங்கள் வீட்டின் அருகே 30 மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டி வருகிறார்கள். அதில் இரவு நேரத்தில் கட்டட உச்சியிலிருக்கும் கிரேனிலிருந்து சிவப்பு விளக்கு ஒளிர்ந்து அணைகிறது. இது எதற்கான சமிக்ஞை எனத் தெரிந்து கொள்ளலாமா? - விக்னேஷ், ஜி, பெரம்பூர்
பன்மாடி அடுக்குக் கட்டடங்களில் உயரத்தில் ஒளிர்ந்து அணையும் விளக்குகளை நிறுவ வேண்டும் என்பது ஒரு கட்டட விதிமுறை. வானில் பறந்து வரும், விமானங்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும். சென்னை மீனம்பாக்கத்திற்கு அருகிலுள்ள பல்லாவரம், St Thomas Mount மலையில் கூட இத்தகைய ஒளிர்ந்து அணையும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Q: வீரப்பன் சார்! நான் மேகலாயாவில் குடிநீர் குழாய் பதிப்பு புராஜ்க்ட் ஒன்றில் ஈடுபட உள்ளேன். எனக்கு தொலை தூர வாட்டர் பைப்பிங் கன்ஸ்ட்ரக் ஷன் தொடர்பான நூல்கள் தமிழில் கிடைக்குமா? சிறு சிறு கட்டுரைகளாக இருந்தாலும் பரவாயில்லை. அதே போல் அத்துறையில் முன்னம் பணியாற்றியவர்கள் எழுதிய ஆங்கில கட்டுரைகள் இருந்தாலும் அனுப்பி வைக்கவும். உதவி செய்யவும். (இணையதளத்தில் கிடைப்பவை அத்தனை உதவிகரமாக இல்லை) பொறி. கே. நிக்சன் ராஜ் ., ஹோசூர்,
மேகலயா மலைகள் சூழ்ந்த மேடு பள்ளமுள்ள பகுதியாக இருக்கும். அதில் தண்ணீர் வழங்கும் குழாய்கள் பதித்தல் சவாலான வேலை தான்.
எனவே அங்கே இப்படிப்பட்ட வேலைகளை எப்படிச் செய்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து செய்வது நல்லது. இது தொடர்பாக எல்&டி போன்ற நிறுவனத்தாரை உதவிக்கு அணுகுங்கள்.
Q: அய்யா, பெரும்பாலான கட்டுநர்களும் ஏன் வடிவமைப்பாளர்களும் குறைந்த பாரந்தாங்கும் அடி மண்வகைகளில் - குறிப்பாக விரிவடையும் மென் களிமண் /வண்டல் கலந்த நொய்மணல் மீது கூட அப்படியே அடித்தளத்தை அமைக்கின்றனர். ஆனால் நீங்கள் மட்டும் குறைபாரந்தாங்கும் அடிமண் வகைகளைக் கண்டிப்பாக வலிமைப்படுத்தியும் கெட்டிப்ப்டுத்தியும் (கருங்கல் உடைதூள் : செஞ்சரளை மண் கலவை 1:3 அல்லது சிமெண்ட்: கருங்கல் உடைதூள் 1:10 கொண்டு ) பின்னரே ஏற்ற அடித்தளங்களை அவற்றின்மீது அமைத்திட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றீர். இது எதன் அடிப்படையில் என்று விளக்கலாமா? மேலும் இதனால் ஏற்படும் கூடுதல் பயன்கள் என்ன?
நமக்கு கட்டடக் கலைஞர், கட்டுமான வடிவமைப்பாளர் முதல், கட்டுமான மேற்பார்வையாளர் வரை 50 ஆண்டுகளுக்கு முன் என்ன செய்தோமோ அதையே திருப்பத் திரும்ப செய்வதும் வசதியாக எளிதாக இருக்கிறது.
கடந்த 50 மண்ணியக்கவியல் (Soil Mechanics and Foundation Engg) துறையில் ஏராளமான முன்னேற்றங்கள், மேம்பட்ட தொழில்நுட்ப உத்திகள் புதிதாகப் புகுந்துள்ளன. குறிப்பாக Soil Stabilisation, soil strengthing செய்வதற்கு Geosynthetics எனப்படும் செயற்கை இழை வலைகளும் Vibroflotation எனனும் அதிர்வலை மூலம் கெட்டிப்படுத்தல் போன்றவை சில வளர்ந்த நிறுவனங்களால் மட்டுமே கையாளப்படுகின்றன. மிகச் செலவில்லாமல் Soil pressure bulb Theory - introduction of CNS Layaer Theory (உங்களிடம் Soil Mechanics Book (Latest) இருந்தால் புரட்டிப்பாருங்கள் - சிறிது புரியும் ) வாயிலாக Sand Gravel mix 1:3, filling in layers of 150mm thick and compacting in semidry condition / / அதைவிடச் செலவு குறைவாக Quarry Dust (Stone Crusher Dust) : Gravel 1:3, Semidry and well compacting மூலமாக மண்ணின் காப்பு திறனை (Safe Bearing capacity) இரண்டு மடங்கு/ மூன்று மடங்கு (100KN/m2 to 300KN/m2) மேம்படுத்தலாம்.
இதனால் அடித்தளச் செலவு ஏறக்குறைய 40% வரை குறைகிறது என்பதும் இவ்வாறு செயற்கையாகக் கெட்டிப்படுத்திய மண்ணில் கீழிறக்கம் (Soil Settlement) மிகுதியாகக் குறைகிறது என்பதும் நமக்குத் தெரியவில்லை; தெளிவாகப் புரியவில்லை. புரிந்தாலும் மாற்றிச் செய்ய - மாற்றங்களை ஏற்றுச் செய்ய நாம் இன்னும் பழகிக் கொள்ளவில்லை இப்படி கருங்கல்லுடைதூள் : செஞ்சரளை மண் 1:3 கொட்டி நிரப்பி அடிமண்ணைக் கெட்டிப்படுத்துவதால் கீழ்க்கண்ட பயன்கள் பெறப்படுகின்றன.
1. அடிமண்ணின் தாங்குதிறன் இருமடங்கிற்மேல் மேம்படுத்தப்படுவதால் அடித்தள அமைப்புச் செலவு 25% முதல் 40% வரை குறைகிறது.
2. அடித்தளத்தைத் தாங்கும் மண் செயற்கையாகக் கெட்டிப்படுத்தப்படுவதால் அடித்தள கீழிறக்கம் (Foundation Settlement) பெரும்பாலும் தடுக்கப்படுகிறது.
3. மண்ணின் பாதுகாப்புத் தாங்கு திறன் கூடுவதால் - எளிய - செலவு குறைந்த அடித்தள வகைகளை (Isolated Footings, Combineed Strip Footings etc) பன்மாடிக் கட்டடங்களுக்கும் பயனபடுத்த முடிகிறது. இப்பொழுது மாற்றத்திற்கு நீங்கள் தயாரா?
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|