MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: அன்பு அய்யா வீரப்பன் அவர்கட்கு.. நான் வீடு கட்ட உள்ளேன். எங்கள் ஊரில் தண்ணீர் தட்டுப்பாடு மணல், சிமெண்ட் விலை அதிகம் என்பதால் Interlock Brick ல் வீடு கட்ட உள்ளேன். Interlock Brick ல் வீடு கட்டலாமா? இதனுடைய நன்மைகள் தீமைகள் பற்றிய தகவல்கள் தேவை. செங்கல் கட்டுமானத்திற்கும் Interlocking Brick க்கிற்கும் உள்ள வேறுபாடு பற்றி தகவல் தரவும். -மகேந்திரன், சேலம்.


Answer:

இண்டர்லாக்கிங் செங்கற்கள் (Interlock Brick) கொண்டு வீடு கட்டும் போது சிமெண்ட் கலவை தேவைப்படாது. இண்டர்லாக்கிங் சுவருக்குத் தேவையான வலிமையை (உறுதியை) தருகின்றன. இந்த வகையான கட்டுமானங்கள் கேரளாவில் பெரிதும் வரவேற்கப் படுகின்றன. இண்டர்லாக்கிங் செங்கற்கள் சுடப்படுவதில்லை.

 

Pressing Machine கொண்டு அமுக்கப்பட்டு இயற்கையாக வெயிலில் காய வைக்கப்படுகின்றன. சில வேதியியல் சேர்மங்கள் இணைப்பு வலிமையை அதிகப்படுத்துவதற்காகச் சேர்க்கப் படுகின்றன.

 

இந்த செங்கல்கள் அளவில்  பெரியவை 10” x 8” x  4” இவற்றினுடைய எடை சுடப்பட்ட செங்கல்லுக்கு இணையாக இருக்கும். இதைப்பற்றி மேலும் அறிய இணைய தளத்தில் தேடுக.



Q: அடித்தளத்திற்கு ஆலோசனை சார் நாங்கள் பூந்தமல்லிக்கு அருகே மனை வாங்கியுள்ளோம். அதில் பேப்பர் & பாட்டில் கிடங்கு அமைக்க உள்ளோம் கீழே கிடங்கு, மேலே (2000 + 2000 சதுர அடி) என திட்டமிட்டிருகிறோம். இந்த நிலத்தில் சுமார் அடிமனை மண் 6 அடி வரை களி மண் நிரம்பி இருக்கிறது. அதன் கீழே மிக நுண்ணிய மண் 15’ அடி வரை இருப்பதாக கூறுகிறார்கள். தரை தளம் கிடங்கு என்பதால் சாலை மட்டத்திலிருந்து 3 அடியாவது உயர்த்த வேண்டும் இந்த நிலையில் நாங்கள் அடித்தளம் அமைக்க வேண்டிய முறையைப் பற்றிக் கூற முடியுமா? - ஆர்.ஜீவ பாஸ்கர், முன்னாள் எம்பி.


Answer:

நீங்கள் எழுதியதைப் பார்த்தால் முதல் 6 அடி களி மண் ஆகவும் கீழே 15 அடி வரை நெய் மணல் Fine Sand) இருப்பதாகவும் தெரிகிறது. எனினும், ஒரு JCB மூலமாக (1 Trip Pit) சோதனைக் குழி 12’  அடி வரை போட்டுப் பார்ப்பது அதை உறுதிப்படுத்தும் இது கட்டாயம் செய்யப்பட வேண்டும். இந்த அடிமண்ணில் உங்களுடைய கட்டத்திற்கு அடிப்பெருத்த குத்துத் தூண் (Under Reamed Piles) கொண்ட அத்தோடு இணைத்து குத்துத் தூண் கவசம் (Pile Cap) இணைந்து அடித்தளம் அமைப்பது சரியாக இருக்கும். 

 

எப்படியும் தகுதியும் திறமையும் வாய்ந்த ஒரு பொறியாளரின் மேற்பார்வையில் இத்தகைய அடித்தளத்தை அமைப்பது நல்லது. 

 

(இதுபற்றி மேலும் விவரம் அறிய கட்டுமானப் பொறியாளர் சூன் 2019 இதழை வாங்கிப் படியுங்கள்)



Q: ஹாலுக்கு எந்த அளவு? அய்யா! 1000 ச.அடியில் ஒரு ஹால் 2 படுக்கையறைகள் கொண்ட வீடு கட்ட இருக்கிறேன். நான் ஹால் அளவு எவ்வளவு வைக்க வேண்டும்? ஏனென்றால், 18க்கு 25 என விசாலமாக கட்ட வேண்டும் என்பது என் அவா. என் பொறியாளரோ ஹால் அமைப்பதற்கென்று சில ஐடியல் அளவுகள் உள்ளன அதன் படி தான் கட்ட வேண்டும் என என் ஆசைக்கு தடை போடுகிறார் எது சரி? அந்த ஸ்டாண்டர்ட் அளவுகள் என்ன? - அமுதன், வழக்கறிஞர், எண்ணூர்.


Answer:

1000 ச.அடி உள்ள வீட்டின் வரவேற்பு அறைக்காக 16’ X 20’  அளவில் அமைக்கலாம் . இதுவே போதுமானது. மனையடி சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் அளவுகளில் அமைத்தலும் சரிதான். ஆனால் நீங்கள் நினைப்பது போல 1000 ச.அடி வீட்டில் 450 ச.அடி வரவேற்பு அறை மிகப் பெரியது. மற்ற அறைகளுக்கு இடம் போதாமல் போய்விடும். எனவே, உங்கள் பொறியாளர் சொல்வதை கேளுங்கள்.



Q: இரும்புக்கம்பியின் வளையும் தன்மை ! முன்னணி பிராண்ட் இரும்புக் கம்பிகளில் கிரேட் 40 மற்றும் கிரேட் 60 ஆகியவற்றின் Yield Strength மற்றும் Ultimate Strength என்னவாக இருக்கும் என்பதை கூற முடியுமா? - பாஸ்கர், கட்டட ஒப்பந்தக்காரர்


Answer:

திரு. பாஸ்கர் அவர்களே!  கட்டட  ஒப்பந்தக் காரராக இருந்துக் கொண்டு வெளிச்சந்தையில் விற்கப்படும் எஃகு உறுதியூட்டிகளின் தரங்களைத் தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள்? என்று தெரியவில்லை. எஃகு கம்பிகளின் Grade 40,60 என்றெல்லாம் ஒன்று இல்லை.

மாறாக Grade  Fe 415, Fe 500, Fe 500D, Fe 550, Fe 550D,  முதலிய தரங்கள் தான் உள்ளன. இந்த எஃகு கம்பிகள் Yield Strength  (Fe 500 N / mm2 / Fe 550N / mm2) Fe 415N / mm2 Ultimate Strength என்று பொருள்.



Q: சார் ! நான் ஒரு ஹோட்டல் 7 லாட்ஜ் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எரிசாம்பல் கொண்டுக் கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் உள்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் முழுதும் மரத்தகடுகள் கொண்டு மூடப்படுகின்றன. சுவர் மேற்பூச்சுக்கு பதிலாக டைல் மார்பிள்கள் மரத்தகடுகள் கொண்டு மூடகூடாது என்பது தானே சரி விளக்கவும். - பொறி. செழியன், திருவண்ணாமலை.


Answer:

நீங்கள் குறிப்பிடும் கட்டடம் ஒரு உணவகம் ஆகவும் தங்கும் விடுதியாக இருப்பதால் மரத் தகடுகள் கொண்டு (Wooden Panelling) மூடப்படுகின்றன. இதனால் கட்டடத்தினுள் உள்வரும் அதிக வெப்பத்தைத் தடுக்கலாம். AC க்கு தேவைப்படும் மின்சாரமும் குறையும் Wooden Panels / Sound Insulating Materlal ஆகவும் பயன்படுகிறது.

எனவே மரத் தகடுகள் பயன்படுகிறது. எனவே மரத் தகடுகளைப் பயன்படுத்துவது சரிதான்.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000