மும்பையில் கடந்த 22 ஆம் தேதி தீப்பிடித்த கிறிஸ்டல் டவரை கட்டிய பிரபல பில்டர் அப்துல் ரசாக் சுபரியா என்பவரை மும்பை போலீஸ் கைது செய்திருக்கிறது.
இந்த கட்டடம் 14 அடுக்குகளை உடையது. 64 வீடுகள் இதில் உள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் எல்லா வீடுகலையும் பில்டர் விற்று விட்டார். ஆனால் வீடு குடியுரிமை சான்றிதழ் இல்லாமலேயே இவர் வீடுகளை விற்று விட்டார். மேலும் கட்டட்தின் ஒயரிங் தரமாக இல்லாதது, ஒயரிங் பணிகள் முடிவடையாமல் இருந்தது, அவசர காலங்களில் எளிதாக வெளியேறக் கூடிய வழிகளைக் கட்டமைக்காமல் இருந்தது போன்ற பில்டரின் அலட்சியத்திறகாக அவர் இப்போது , இபிகோ 304,336,37,338 ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
மும்பை பில்டருக்கு நேர்ந்த இந்த நிலை நாடு முழுக்க உள்ள பொறுப்பற்ற கட்டுநர்களுக்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணியாகும்.
அதெல்லாம் சரி. அந்த பில்டர் பணி நிறைவுச் சான்றிதழ் தராமலே வீட்டை விற்றதை பத்திரப்பதிவு அலுவலகம் எப்படி கண்காணிக்க வில்லை? நகராட்சி அதிகாரிகள் இந்த 5 ஆன்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 4 உயிர்கள் போன பிறகு தான் இந்த 14 மாடி புராஜெக்ட் இவர்கள் கண்ணில் பட்டிருக்கிறதா என்ன?
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087396
|