பில்டர்ஸ் லைன் கட்டுரை போட்டியில் 72 சிறந்த கட்டுரைகளை தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் குழு மும்முரம்
21 ஆகஸ்ட் 2018   03:42 PM



பில்டர்ஸ் லைன் பொறியாளர் தினத்தை ஒட்டி தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரிடையே ( மூத்த பொறியாளர்கள்.., அறிமுக பொறியாளர்கள்., மாணவர்கள் &  பேராசிரியர்கள்)  15 தலைப்புகளில் நடத்தப்பட்ட மாபெரும் கட்டுரை போட்டிக்கு சுமார் 700 கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாகவும்..., தபால்.., கூரியர் மூலமாகவும் வந்து சேர்ந்தன..

மின்னஞ்சலில் மட்டும் 315 கட்டுரைகள் வந்து சேர்ந்தன..

மொத்த கட்டுரைகளின் விவரம்

1. மூத்த பொறியாளர்கள்.., : 210
2. அறிமுக பொறியாளர்கள். : 120
3.  மாணவர்கள் & : 264
4.  பேராசிரியர்கள் : 112 


இதில் அடையாள அட்டை..,இல்லாத கட்டுரைகள்.., ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள்.., காபி கேட் செய்யப்பட்ட கட்டுரைகள் ,  ஒரே கட்டுரையை பல பேரில் அனுப்பி இருந்த கட்டுரைகள்.. ..,மற்றும் அப்பட்டமான தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 78 கட்டுரைகள்  நிராகரிக்கப்பட்டன..

அதன்பின் , நேற்று முதற் கட்டமாக ( 20.8.2108) மொத்த கட்டுரைகளில் 300 கட்டுரைகள் வடிக்கட்டப்பட்டு எடுக்கப்பட்டன..

இன்று இரண்டாம் கட்டமாக  150 கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது...

பரிசு விவரம்

நான்கு பிரிவில் ..தலா மூன்று பரிசுகளும்.. ( 12) , 10 ஆறுதல் பரிசுகளும்

மற்றும்" பாராட்ட பட வேண்டிய படைப்புகள் " என்கிற சிறப்பு பிரிவில் 50 பரிசுகளும் வழங்கப்பட உள்ளன..

எனவே ., மொத்தம் 72 பரிசுகளுக்குரிய கட்டுரைகளை தேர்ந்தெடுக்கும் இறுதிகட்டப் பணி... 1.9.2018 அன்று நடைபெற உள்ளது..

 பரிசுக்கு தகுதியான கட்டுரைப் போட்டியை தேர்ந்தெடுக்கும் பணியில் ஆசிரியர் குழு.மும்முரமாக உள்ளனர்..

(முடிவுகள் ...பில்டர்ஸ் லைன் ஆகஸ்ட் இதழில் வெளியாகும்.) 
(இணையதளத்தில் 6.9.2018 அன்று வெளியாகும்....)

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087407