கந்தன்சாவடி கட்டிட விபத்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி ; உயர் நீதிமன்றம் உத்தரவு
26 ஜூலை 2018   10:21 AM



சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனைக்கான அடுக்குமாடி கட்டிடத்திற்கான சாரம் கடந்த சனிக்கிழமை சரிந்து விழுந்தது. இதில், கட்டிடப் பணிகளில் ஈடுபட்டிருந்த பீகாரைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர். மேலும் ஒடிசா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், “கந்தன்சாவடி பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதிகாரிகள் முறைகேடாக தனியாருக்கு கொடுத்துவிட்டனர். இப்பகுதியில் உள்ள 99 சதவீத கட்டுமானங்களுக்கு முறையான அங்கீகாரம் பெறவில்லை. தற்போது கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது கட்டிடம் சரிந்து 2 பேர் பலியாகியுள்ளனர். 

 

இந்த நிலமும் ஆரம்பத்தில் அரசு புறம்போக்கு நிலமாக இருந்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஒட்டியுள்ள பெருங்குடி மற்றும் கந்தன்சாவடி பகுதிகள் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்ட தகுதியற்றவை. மண் உறுதியற்ற நிலையில் உள்ளது. எனவே, புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு மாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால்,  நிர்மல்குமார்  ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று  விசாரணைக்கு வந்தது. 

 

அரசு நிர்வாகத்தில் யாரிடமும் புகார் அளிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தை நாடியுள்ளதால் வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது,  வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087366