இறக்குமதி மணல் தொடர்பாக எம்.ஆர்.எம். ராமையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த ஜூலை 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது
அப்போது நீதிபதிகள், மனுதாரர் சார்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா். இருந்தபோதிலும், இந்த மணலுக்கான விலையை நிர்ணயிப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னையில் உள்ள மாநில பொதுப்பணித்துறை செயலரின் அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அக்கூட்டத்தில் மனுதாரர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளதால், அடுத்த விசாரணைக்குள் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்கிறோம். இந்த வழக்கு ஜூலை 20-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்என உத்தரவிட்டனர்
இதற்காக சென்னையில் உள்ள மாநில பொதுப்பணித்துறைற செயலரின் அலுவலகத்தில் ஜூலை 11, 17 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது, எதிர் தரப்பு சார்பில் டன் மணலுக்கு ரூ. 2,750 ஆக விலை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. ஆனால், தமிழக அரசு டன் மணலுக்கு ரூ. 2050 ஆக விலை அளிப்படும் எனத் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் தடை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்
அந்த உத்தரவில், ''தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள இறக்குமதி மணலை டன்னுக்கு ரூ.2,050 விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கான ஜிஎஸ்டி வரியையும், மணல் வைக்கப்பட்டுள்ள துறைமுகத்துக்கான வாடகைக் கட்டணத்தையும் தமிழக அரசு செலுத்த வேண்டும். அபராதம், வாடகை தொடர்பான விவகாரம் 6 வாரங்களுக்குப் பிறகு தனியாக விசாரிக்கப்படும்;;; எனத் தெரிவித்தனா்
தூத்துக்குடி துறைமுகத்தில் தற்போது சுமாா் 54 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டு கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
வழக்கு பின்னணி:
இறக்குமதி மணல் தொடர்பாக எம்.ஆர்.எம். ராமையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலை விற்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காதது தொடர்பாகத் தெரிவித்திருந்தாா்
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக அடுத்த 6 மாதங்களுக்குள் மூடவும், புதிதாக மணல் குவாரிகளை திறக்க தடைவிதித்தும் உத்தரவிட்டது
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றறத்தில் கடந்த ஜனவரி 19-இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை கடந்த பிப்ரவரி 5-இல் விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது
இந்நிலையில், இது தொடர்பாக எம்.ஆர்.எம். ராமையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மே 16-ஆம் தேதி விசாரித்தது.
அப்போது, இறக்குமதி மணல் விவகாரத்தில் 20 நாள்களில் ரசாயன அறிக்கையை அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது