கட்டிட உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
17 ஜூலை 2018   12:13 PM



சிஎம்டிஏ அதிகாரி எனக் கூறி கட்டிட உரிமையாளர்களிடம் பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
கொடுங்கையூர், மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் (59), சூளைமேடு வன்னியர் தெருவைச் சேர்ந்த கவுதம் (33) இருவரும் வீடு மற்றும் கட்டிடங்களை கட்டியிருந்த சிலரிடம் சென்று தங்களை சிஎம்டிஏ அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு "கட்டிடத்தில் விதி மீறல் உள்ளது.  கட்டிடத்தை இடிக்காமல் இருக்க ரூ. 2 லட்சம் பணம் வேண்டும்" என கேட்டுள்ளனர்.  பசுபதி (60) என்பவரிடமும் பணம் கேட்டு மிரட்டியபோது, சந்தேகமடைந்து 2 பேரையும் பிடித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
 
போலீஸ் விசாரணையில் இவர்கள் சிஎம்டிஏ அதிகாரிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.  கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
 
 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087363