உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் உள்ள சோங்கிங்அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாகும். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் உள்ள சோங்கிங்அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாகும். பெருகிவரும் வாகனங்களுக்கு ஏற்ப பெரிய கட்டிடங்களின் மேலயும் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்தில் இருந்தும் மேல்தளத்துக்கு காரில் செல்லலாம், நல்ல நீளம் கொண்ட இந்த குடியிருப்பு வளாகத்தின் மேல்தளத்தில் இரண்டு லேண்கள் கொண்ட விசாலமான சாலை உள்ளது.
அடுக்குமாடி சாலை ஓரம் முழுதும் பெரிய சட்டிகளில் மரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும் சாலையயொட்டி கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வினோதமான குடியிருப்பு வளாகம், சீன கட்டுமானத்துறையினரின் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சுமார் 8 கோடி மக்கள் தொகை கொண்ட சோங்கிங் நகரத்தில் உள்ள இந்த குடியிருப்பு வளாகம் அங்குள்ளவர்களை வியக்க வைத்துள்ளது. தற்போது இந்த வளாகம் வீடியோ மூலமாக வெளியுலகத்தினரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.
அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் மேல் சாலை அமைக்கப்பட்டு, அதில் வாகனங்கள் சென்று வரும் வீடியோ தற்போது வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக சீனாவில் அடுக்குமாடி வளாகத்தினூடே ரயில்வே பாதை அமைக்கப்பட்டு அதில் ரயில்கள் சென்று வரும் வீடியோ வைரலானதை கண்டிருப்பீர்கள். இதுவும் இதே சோங்கிங் நகரில் தான் உள்ளது. அடுக்குமாடி ரயிலை தொடர்ந்து தற்போது கட்டிடத்தின் மீது சாலை அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவும் சோங்கிங் நகரை மீண்டும் பிரபலமாக்கி வருகிறது.
இதுவும் இதே சோங்கிங் நகரில் தான் உள்ளது. அடுக்குமாடி ரயிலை தொடர்ந்து தற்போது கட்டிடத்தின் மீது சாலை அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவும் சோங்கிங் நகரை மீண்டும் பிரபலமாக்கி வருகிறது. இந்த சாலை குடியிருப்பு அடுக்குமாடி வளாகம் நகரமயமாக்கல்-க்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும் இந்த வினோத அடுக்குமாடி குடியிருப்பை வடிவமைத்த கட்டட வடிவமைப்பாளர்களை உலக நாடுகள் பலவும் பாராட்டி வருகின்றன.