சொத்து விற்பனை தொடர்பாக, பதிவுக்கு வரும் பத்திரங்களில் குறிப்பிடப்படும் மதிப்புகள், வழிகாட்டி மதிப்பைவிட குறைவாக இருந்தால், முத்திரை தீர்வைக்கான மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது தனித்துணை ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும்.
அவர்கள், வழிகாட்டி மதிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை ஆராய்ந்து முடிவு செய்வர்.
இது தொடர்பாக, பதிவுத்துறை, ஐ.ஜி., பிறப்பித்துள்ள உத்தரவு:
குறைந்த வழிகாட்டி மதிப்புடன் பத்திரங்கள் பதிவுக்கு வந்தால், அவற்றின் மதிப்பை முடிவு செய்யும் நடைமுறைகளை, 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். சரியான வழிகாட்டி மதிப்பை பதிவு செய்ய வேண்டும். மதிப்பை உயர்த்தி நிர்ணயித்தால், அதற்கான காரணத்தை, விரிவாக பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்வதால், வழிகாட்டி மதிப்பு தொடர்பான வழக்கு, நீதிமன்றத்திற்கு செல்லும் போது ஏற்படும் சிக்கல்களை தடுக்க முடியும். இந்த நடைமுறையை, மாவட்ட பதிவாளர்கள் சரியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.