முன்பணம் வாங்கிக் கொண்டு, வீடு கட்டுவதில் தாமதம் செய்த கட்டுமான நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 5.87 லட்சம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
சென்னை, முகப்பேரைச் சேர்ந்தவர், வேணுகேபால். இவர், காஞ்சிபுரம் மாவட்டம், நல்லம்பாக்கத்தில், தனியார் கட்டுமான நிறுவனத்தில், 29 லட்சம் ரூபாய்க்கு, வீடு வாங்க ஒப்பந்தம் செய்தார். இதில் முன்பணமாக, 5.87 லட்சம் செலுத்தினார். கட்டுமான நிறுவனம் வீடு வழங்க தாமதமானதால், முன்பணத்தை திரும்ப கேட்டும், நிறுவனம் வழங்கவில்லை.
முன் பணத்துடன் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி, செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில், நிபந்தனைகளை மனுதாரர் பின்பற்றவில்லை. வீடு வழங்குவதாக கூறியும், பாக்கி தொகை செலுத்தவில்லை. சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, கட்டுமான நிறுவனம் தெரிவித்து இதையடுத்து, கட்டுமான நிறுவனம் உரிய சேவை வழங்கவில்லை. மனுதாரருக்கு அவர் செலுத்திய முன்பணம், 5.87 லட்சம் ரூபாயை, கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி கலியமூர்த்தி உத்தரவிட்டார்.