கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் அடிப்படையில், கட்டுமான திட்டங்களுக்கு வழங்கப்படும் அனுமதியின் செல்லத்தக்க அவகாசம், ஏழு ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், கட்டுமான திட்டங்களை மேற்கொள்ள, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்காக, கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் படி, கடலோர பகுதிகள், பல்வேறு நிலைகளாக பிரிக்கப்பட்டு, எந்த பகுதியில், எத்தயை திட்டங்களை அனுமதிக்கலாம் என்பதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு, கடலோர ஒழுங்கு முறை மண்டல விதிகளில் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் அனுமதியின், செல்லத்தக்க அவகாசம், ஐந்து ஆண்டுகளில் இருந்து, ஏழு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.