‘குறைந்த விலை வீடுகளுக்கு ஜி.எஸ்.டி., வசூலிக்க கூடாது’
14 ஜூலை 2018   11:10 AM



‘குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்க கூடாது என, கட்டுமான நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி.எஸ்.டி., கவுன்சில், கடந்த ஜன., 18ல், கூடியது, அப்போது, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக, சலுகை விலையில் வீடு கட்டும் திட்டத்தை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டது.
 
இதையடுத்து, இந்த திட்டத்துக்கான, ஜி.எஸ்.டி., 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும், நிலம், வீடு ஆகியவற்றின் மதிப்பை கழித்த வகையில், ஜி.எஸ்டி., 8 சதவீதம் தான் வருகிறது. இந்த சலுகை திட்டம், ஜனவரி, 25ம் தேதி முதல் அமலாகியுள்ளது.
 
எனவே, குறைந்த விலை வீடு வாங்குபவர்களுக்கு, 8 சமவீத ஜி.எஸ்.டி., மட்டுமே உள்ளது. அதுவும், உள்ளீட்டு வரிப்பயனாக, கட்டுமான நிறுவனங்களுக்கு கிடைக்கும். அதனால், இந்த வரியை, வீடு வாங்குபவர்களிடம் வசூலிக்க வேண்டாம். 
 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087265