சிங்கப்பூரில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள ஒரு 140 மீட்டர் உயர ஆர்ச்சர்ட் ஹோட்டல் கட்டடம் (Orchard hotel ) சிங்கப்பூரில் மிகச் சிறந்த பசுமை மற்றும் சிறந்த அதிஉயரக் கட்டிடம் என்ற விருதினைப் பெற்றிருக்கிறது. சிங்கப்பூரில் கட்டுகிற எல்லா கட்டிடங்களுமே இயற்கையோடு இணைந்த பசுமை கட்டிடங்கள் தான்.
ஆனால் இந்த ஹோட்டல் கட்டிடத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், 25 சதவீதம் மட்டுமே கட்டுமானத்தை மேற்கொண்டு மீதி 75 சதவீதத்தை ஓபன் ஸ்பேஸாக அப்படியே விட்டிருக்கிறார்கள்.
அதாவது ஒவ்வொரு ஏழு மாடி கட்டடத்திற்கு ஒரு பொதுவான பெரிய பால்கனியை திறந்து வழியாக விட்டிருக்கிறார்கள். அதனால் இந்த பால்கனி சீலிங் உயரம் மட்டும் ஏழு மாடிக்கு சமமாக இருக்கிறது .
இதனால் நெருக்கடியான இடத்தில் அமைந்தும் கூட கட்டிடத்தில் வெளிப்பக்க காற்றும் வெளிச்சமும் எல்லா அறைகளுக்கும் தங்கு தடையில்லாமல் வருகிறது. இது போன்ற திறந்தவெளி பசுமைக் கட்டுமானங்கள் சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கட்டுமானத் துறைக்கே புதிதாகும் .
இந்த ஹோட்டல் கட்டுமானத்தை ஒட்டுமொத்த கட்டுமானப் பரப்பிலும் கட்டி இருந்தால் எப்படியும் ஆயிரத்து ஐநூறு ரூம்களை கட்டி இருக்கலாம். ஆனால், இந்த ஹோட்டல் கட்டுமானத்தில் உள்ள ஒட்டுமொத்த 28 அடுக்குகளில் 25 சதவீதம் கட்டுமானங்கள் மட்டுமே கட்டியிருக்கிறார்கள். அதாவது 347 ரூம்கள் மட்டுமே இதில் கட்டப்பட்டிருக்கின்றன.
இந்த கட்டுமானத்தில் ஒவ்வொரு ஏழு மாடிகளுக்கும் ஒன்று என தரை தளத்திலிருந்து 4 பெரிய இடங்களில் ஓபன் டெரஸ் பால்கனிகள் அமைந்துள்ளன. இதுபோன்று திறந்தவெளியாக் இவ்வளவு பெரிய இடத்தை விட்டு இருப்பது அனேகமாக இந்த கட்டிடத்தில் மட்டுமே நாம் காண முடியும்.
இதனுடன் இணைக்கப் பட்டுள்ள படத்தைப் பார்த்தால் உங்களால் இதை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
ஒட்டுமொத்த 25 ஆயிரம் சதுர மீட்டர் கட்டுமானத்தில், ஏறத்தாழ 19 ஆயிரம் ச.மீட்டர் வரை நான்கு அடுக்கு ஓபன் ஏர் கிராஸ் வெண்டிலேஷனுக்காக காலி இடத்தை விட்டிருக் கிறார்கள். இதன் கட்டடக் கூரையில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு இருப்பது கூடுதல் விசேஷம்.
இந்த ப்ராஜெக்ட்டிற்கு சிங்கப்பூரின் உயரிய சான்றான ‘கிரீன்மார்க் பிளாட்டினம் ரேட்டிங்’ கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு அடுக்கிலும், நான்கு சதுரத்தின் இரண்டு பக்கங்களில் ஹோட்டல் ரூம்களும் இரண்டு பக்கம் திறந்து வெளியாக விட்டிருப்பது சிங்கப்பூருக்கு மட்டுமல்ல. உலக கட்டிடக்கலைக்கு மிகவும் புதிதான விஷயம்.
பாராட்டுவோம் பின்பற்றுவோம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2137030
|