1300 அடி நீள,அகல,உயரத்தில் சவுதியில் ஒரு கனச்சதுர
கட்டடம், !
உலகிலேயே மிகப்பெரிய கனச்சதுரக் கட்டிடம் என்றால், உடனே நாம் சவுதியில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான காபா ஆலயத்தினைக் (காபா என்றாலே அரபு மொழியில் கியூபிக் என பொருளாகும்) குறிப்பிடுவோம். இப்பொழுது அதே போன்ற கனச்சதுர வடிவத்தில் ஒரு குடியிருப்புக் கட்டடம் சவுதி அரேபியாவில் அமைய இருக்கிறது.
இதனை ‘முகாப்’ என அழைகிறார்கள். நகரமே ஒரு கனச்சதுரப் பெட்டிக்குள் அமைகிற இந்த கான்செப்ட் ( “சிட்டி-இன்-எ-பாக்ஸ்” ) உலகிலேயே இது தான் முதல் முறை. இதன் உயரம் 400 மீ, அகலம் 400 மீ, நீளமும் 400 மீ, என ( காபாவின் நீளம், அகலம் , உயரம் சராசரியாக 12 முதல் 13 மீ என்னும் பட்சத்தில்., இந்த முகாப் ஒரு ராட்சச கனச்சதுரதுக்குள் ஒரு நகரத்துக்கான வானுயர்வு கட்டிடத்தை அமைக்கப் போகிறார்கள். அதாவது, 1,300 அடி உயரமும், 1,200 அடி அகலமும் கொண்ட முகாப், 20 எம்பயர் ஸ்டேட் கட்டிடங்களுக்குச் சமமானதாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட இருக்கிறது.
சவுதியின் தலைநகர் ரியாத்தின் மையத்தில் அமையப் போகிற, உலகின் மிகப்பெரிய கட்டிடமாக மாறும் என்று எதிர் பார்க்கப்படும், ‘முகாப்’பின் கட்டுமானப் பணிகளை சவுதி அரேபியா தொடங்கியுள்ளது. இதற்கான அடித்தள பணிகள் சமீபத்தில் துவங்கப்பட்ட நிலையில், அடித்தளப் பணிக்காக ஏறத்தாழ 10 மில்லியன் கியூபிக் மீட்டர் மணல் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த அஸ்திவாரப்பணிக்காக 250 எக்ஸ்கவேட்டர்கள், 400 க்கும் மேற்பட்ட கனரக கருவிகள், இயந்திரங்கள், இந்த சைட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஏறத்தாழ 900 கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் . இந்த கட்டுமானப் பொருட்களை கையாளுவதற்காகவும், பணியிடத்திற்கு பொருட் களைக் கொண்டு செல்வதற்காகவே ஒரு தற்காலிக சாலைப்பாலம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.
சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியிலிருந்து ( $50 பில்லியன் ) இந்த கட்டிடம் கட்டப்படுகிறது . இந்தக் கட்டமைப்பின் வெளி வடிவமைப்பு உள்ளூர் நஜ்தி கட்டிடக்கலை கூறுகளை உள்ளடக்கியது என்கிறார்கள்.
இந்ததிட்டமானது, சவூதி அரேபியாவிற்கு எதிர்கால கட்டிடக்கலையை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் “சவூதி விஷன் 2030” முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்தப் பெட்டிக்குள் தான் 20 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் ஒரு ஸ்கைகிராப்பர் கட்டடம் கட்டப்படுகிறது. உணவு விடுதிகள், ஆடம்பர சில்லறை விற்பனை மையங்கள், அலுவலக இடங்கள்,அருங்காட்சியகம், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம், தியேட்டர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார மையங்கள் ஆகியவை இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
‘இந்த கட்டிடம் 2030க்குள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு விடும் என சவுதி அரசு தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் இணையதளத்தில் தெரிவித்து இருக்கிறது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087183
|