பில்டர்ஸ் லைன் தங்களுக்கு சந்தா செலுத்தியும் வரவில்லையா?
நமது பில்டர்ஸ் லைன் மாத இதழ் கடந்த 24 ஆண்டுகளாக கொண்டிருக்கிறது.
மேலும், தமிழ்நாடு முழுக்க அதற்கு கட்டுமானத்துறைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
பில்டர்ஸ் லைன் மாத இதழ் RMS என்கிற பத்திரிகைகளுக்கான விசேஷ தபாலின் மூலமாக பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் பட்டுவாடா செய்யப்படுகிறது.
அதிகபட்சம் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் பில்டர்ஸ் லைன் மாத இதழ் தமிழ்நாடு முழுக்க சென்றடைந்து விடும். ஒருவேளை தங்களுக்கு இதழ்கள் வராத பட்சத்தில் 88255 77291 என்கிற எண்ணுக்கு மட்டுமே உங்களது சந்தா புகார்களை தெரிவிக்க வேண்டும். அல்லது buildersline@gmail.com மின்னஞ்சலிலும் உங்கள் புகாரை அனுப்பலாம்.
உங்களது புகார்கள் அனைத்துமே எங்களது மென்பொருளில் கவனமாக பதிவிடப்படுகிறது.
சரியான விலாசம். லேண்ட் மார்க் இல்லாமலிருத்தல், தவறான பின்கோடு ஆகியவற்றின் காரணமாக ஒருவேளை நமது பில்டர்ஸ் லைன் உங்களுக்கு பட்டுவாடா செய்யப்படாமல் எங்கள் அலுவலகத்திற்கு திரும்ப வந்துவிடும். அப்படி திரும்பி வருகின்ற பத்திரிகைகளின் சந்தாதாரர்களை நாங்களே போனில் அழைத்து முகவரியை சரி செய்வோம்.
மேலும், கூடுதலாக ஒரு முகவரியையும் (Alternate Address)கேட்டு பெற்றுக் கொள்வோம்.
நீங்கள் சந்தாவை பதிவு செய்யும்போதே உங்களது வீட்டு மற்றும் அலுவலகம் முகவரி இரண்டுமே கொடுக்கும் கொடுத்து விட்டால் எதிர்காலத்தில் ஒரு முகவரி தவறாகி போனாலும் அடுத்த முகவரிக்கு நாங்கள் அனுப்புவோம்.
(தபால்துறை ஊழியர்களின் வெகு சிலரின் கவனக்குறைவாலும் சில சமயம் பில்டர்ஸ் லைன் பட்டுவாடா செய்யப்படுவதில்லை. எங்களுக்கு திரும்ப கூட வருவதில்லை என்பது வேறு விஷயம்)
ஆனால் பொதுவாக, புகாரையே தெரிவிக்காமல் சொல்லாமல். 4,5 மாதங்கள் கழித்து பில்டர்ஸ் லைனே 'எங்களுக்கு வரவில்லை என நீங்கள் சொன்னால் எங்களால் சரியான நடவடிக்கையை எடுக்க முடியாது.
நமது பத்திரிகை நிர்வாகமும் இங்கே சென்னையில் இருக்கக்கூடிய தலைமை அஞ்சலக மைய அலுவலகத்திற்கு சென்று பலமுறை புகார்களை அளித்திருக்கிறோம் .
அப்படியும் சில சந்தாதாரர்களுக்கு இதழ்கள் வராமல் இருந்து விடுகிறது.
எனவே, அப்படிப்பட்ட சந்தாதாரர்களுக்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.
1. உங்களது மாற்று முகவரியை கொடுக்கலாம்.
2. அவ்வாறு பத்திரிகை (பிரின்ட் காப்பி) சந்தாவிற்கு பணம் அளித்துவிட்டு பத்திரிகை வராது போனால், எங்கள் இணைய பக்கத்தில் உள்ள ஆன்லைன் சந்தாதாரராகவும் நீங்கள் மாற்றிக்கொண்டு படிக்கலாம்.
அவ்வாறு ஆன்லைனில் படிப்பவர்களுக்கு, மேலும், ஒரு ஆண்டு ஆன்லைன் சந்தா காலத்தை நாங்கள் நீட்டி தரவும் தயாராக இருக்கிறோம்.
நண்பர்களே!
நமது பில்டர்ஸ் லைன் பத்திரிகை ஒவ்வொரு சந்தாதாரர்களின் புகார்களையும் மிக கவனமாக எடுத்து பரிசீரித்து அதை நிவர்த்தி செய்ய
முயல்கிறது.
வாசகர்களும் ஒத்துழைப்பு தரும் பட்சத்தில் பில்டர்ஸ் லைன் சந்தா
சேவை இன்னமும் சிறப்பாக இருக்கும்.
தமிழ்நாட்டிலேயே அதிக சந்தாதாரர்களை உடைய நமது பத்திரிகை ஒவ்வொரு வாசகருக்கும் அவர்களுக்கு உரித்தான மாத இதழ், உரிய நேரத்தில் போய் சேர வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை செலுத்துகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
- பில்டர்ஸ்லைன் சந்தா குழு
சந்தா புகார் : 88255 77291 (காலை 11 மணி முதல் மாலை 5 வரை திங்கள் - வெள்ளி)
blsubscription@gmail.com
buildersline@gmail.com