ஜெர்மன் ஏரி ஒன்றில் உலகின் மிகப்பெரிய மிதவை சோலார் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிரான்ஸ் நிதி உதவி கிடைத்திருக்கிறது.
ஆஸ்திரேலிய பெர்லின் நகரைச் சேர்ந்த கியூ எனர்ஜி (Q Energy) என்கிற நிறுவனம் , ஜெர்மனியில் உலகின் மிகப்பெரிய மிதவை சோலார் நிலையத்தை உருவாக்கும் பணியை துவங்கி இருக்கிறது .
ஏறத்தாழ 50 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கி அதற்கான பணியை செய்து வருகிறது. இதன் மூலம் 74 மெகாவாட் (74KW ) சோலார் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரம் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு வழங்கப்படும் என ஜெர்மன் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இந்த ப்ராஜெக்ட்டுகாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 649 சோலார் பேன்ல்கள் பொருத்தப்பட்டுள்ளன . இதனால் விவசாய பண்ணைகளுக்கு மட்டுமல்ல 37 ஆயிரம் வீடுகளுக்கும் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
க்யூ எனர்ஜி நிறுவனத்தின் அதிகாரி பெரக்ஸ் (Ludovic Ferrer) என்பவர் கூறும் போது, “இந்த மிகப்பெரிய சோலார் நிலையத்தை ஒரு நீர் நிலையின் மீது அமைப்பதன் மூலமாக நாங்கள் நீர் ஆவியாவதை கட்டுப்படுத்துகிறோம். அதே சமயம் நிலத்தின் பயன்பாட்டை குறைத்துக் கொள்கிறோம் “என்கிறார்.
ஐரோப்பாவில் 10, 11 மாதம் வரை குளிர் ,மழைதான். வெயிலே இருக்காது.
ஆனால், அவர்களே இந்த அளவிற்கு முனைப்பாக வந்து சோலார் பேனல்களை அமைக்கிறார்கள், ஒரே சமயத்தில் நிலத்தையும், நீரையும் காக்கிறார்கள்.
நாம் ஏரிகளில் தெர்மாகோலை விடுவதோடு நம்முடைய அறிவியலின் தேவையை தீர்த்துக் கொள்கிறோம். சோ.சேட்...