செங்கற் சுவரும்
காங்கிரீட் தூணும் சேருமிடத்தில்
கம்பிவலை ஒட்டி மெத்துவது சரியா?
எல்லாக் கட்டடங்களும் தற்போது சட்டகோப்பு வடிவமைப்பில் (உறுதியூட்டிய காங்கிரீட் பலகம், விட்டங்கள், தூண்கள் இவற்றால்) கட்டப்படுகின்றன. இடைப் பட்ட இடைவெளியை செங்கல் கட்டுவேலை கொண்டு நிரப்புச் சுவர்களாக காங்கிரீட் தூண்களோடும் காங்கிரீட் விட்டங்களோடும் இணைக்கின்றனர்.
இச்சுவர்களில் பூச்சுவேலை செய்யும்முன், சுவரும் தூணும் சேரும் இணைப்பில்-பின்பு மயிரிழை சிறுவிரிசல்கள் ஏற்படுவதைத் (தட்பவெப்பத்தால் ஏற்படும் சுருக்க விரிசல்கள்
Shrinkage cracks தடுக்கும் நோக்கத்தோடு அந்தப்பகுதியில் கீழிருந்து சுவர்முழு உயரத்திற்கும் சுவரையும் தூண் மேற்பரப்பையும், கொத்திச் சொரசொரப்பாக்கி - 50மிமீ + 50மிமீ அகலத்திற்குச் செங்கல் சுவரில் தூணின் மேற்புறத்திலும் கோழிவலை அல்லது G.I Wire mesh- யை வைத்துக்கட்டி களிப்பான கலவை (1:3) கொண்டு பூசுகின்றனர். இதனால் இரண்டு இணையும் இடத்தில் அல்லது மூலையில் விரிசலைத் தடுக்கின்றனர். இந்த உத்தியானது கட்டுமான மேற்பார்வையாளர்கள் / கட்டடமேஸ்திரிகளால் தெரிவிக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகிறது, பல ஆண்டுகளாக.
இது சரியானதுதானா? என்றால், கண்டிப்பாக இல்லை என்பது எங்களின் கருத்து, ஏனென்றால்... செங்கற் சுவரும் காங்கிரீட் தூணும் சேருமிடத்தில் விரிசல் கோடு இல்லாமல் இருந்தாலும், கம்பிவலை / கோழிவலை செங்கற்சுவரில் முடிவடையும் இடத்தில் பார்த்தால் - நெடுக்கையாக சிறுசிறு விரிசல்கள் விழுந்திருப்பதைப் பார்க்கலாம்.
இது நமக்கு ஏற்பட்டுள்ள தவறான புரிதலே.
செங்கல்சுவரின் சுருக்க / விரிவடையும் தன்மை மிகக்குறைவு, ஆனால் தூண் காங்கிரீட்டின் சுருக்க / விரிவடையும் தன்மை அதிகம் இந்த வேறுபாட்டால் தான் மயிரிழை விரிசல்கள் ஏற்படுகின்றன.
மேலும் செங்கல் சுவர் சிமெண்ட் கலவை இவற்றின் இழுவிசையளவு / தாங்கும் திறன் (Tensile stress resisting strength) மிகவும் குறைவு. இதனாலும் பூச்சுகலவை விரிவடையும் போது மயிரிழை விரிசல்கள் ஏற்படுகின்றன.
எப்படித் தடுப்பது? மாற்று உத்திகள் எவை?
இப்படி இணையும் இடத்தில் ஏற்படும் விரிசல்களைத் தடுக்க...
அ) கூட்டுக் கலவை - சிமெண்ட் 1பங்கு : சுண்ணாம்பு 2பங்கு : மணல் 6 பங்கு கலந்த Combination mortar 1:2:6 கொண்டு பூச்சு வேலை செய்து - சேருமிடத்தில் கொல்லுறு / எஃக்கரணை கொண்டு நெடுக்கைக்கோடு (Vertical groove) அடித்து விட வேண்டும்.
ஆ) சாதாரண சிமெண்ட்கலவையின் விகிதத்தை 1:5/1:6க்குப் பதிலாக 1:8 விகிதத்தில் கலந்து அக்கலவையில் இழுவிசையைத் தாங்கும் செயற்கை இழைவலைத்துண்டுகள் (synthetic fibres, Glass Fibers) குறிப்பிட்ட அளவுக்குச் சேர்த்து பூச்சு வேலை செய்தால் இத்தகைய வரிசல்கள் ஏற்படாமல் தடுத்திடலாம். இதற்கென வெளிச்சந்தையில்...
i) Reliance Recron-3
ii) Optical Fibres 6mm (From Dugar & Company) கிடைக்கின்றன.
iii) இதைத்தவிர Birla white - Level Plast கொண்டும் சுவர் பூச்சைப் பூசலாம். பயன்படுத்திப் பாருங்களேன்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087269
|