அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்
ஒரு முன்னாள் அமைச்சருடைய பண்ணை வீட்டை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததது. வீட்டின் அளவு ஏறக்குறைய 10,000 சதுர அடி இருக்கும்.அமைச்சர் பெயர் வேண்டாம்.
இந்த வீடு கடந்த 5 வருடங்களாக கட்டப்பட்டு வருகிறது. சரி வீட்ட விடுங்க. இதனுடைய சுற்று சுவர் பற்றிதான் நாம் இப்போ பேச போகிறோம். அருமையான சுற்று சுவர்.வீட்டை விட எனக்கு சுற்றுசுவர் மிக அழகாக தெரிந்தது.கலை நயம் மிகுந்ததாக இருந்தது.நல்லதை வீட்டுக்கு வெளியவும் கெட்டதை வீட்டுக்கு உள்ளேயும் வைப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே..அதுல மினிஸ்டர் என்ன சாதாரண மக்கள் எல்லாமே இந்த விசயத்துல ஒண்ணுதான்.
சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துக்கள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 300 மீ சுற்றளவு வரும்.
கடந்த ஒரு வருடமாக கட்டப்பட்டு வருகிறதாம்.பார்ப்பதற்கு க்ரானைட் ஒட்டப்பட்டது போலவே அழகாக தெரிகிறது. நாமும் இதை மண்ணை கொண்டே கட்டி எங்காவது பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.கல் வேலை செய்து கொண்டிருத்த மேஸ்திரியை பாராட்டி தொலைபேசி எண்ணை வாங்கி வந்தேன். இது போல கல் வேலை செய்பவர்கள் அழிந்து விட கூடாது.இவர்களை போன்றோருக்காகவாவது வீடு கட்டுபவர்கள் கருங்கல்லை பயன்படுத்த வேண்டும். என்பது என் ஆசை.
இந்த வீட்டை முழுவதும் கட்டி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டே வீடு திரும்பினேன்.
நான் ரசித்ததை உங்களுக்கும்..
கோவையில் மண் வீடு மரபுசார் கட்டுமான நிறுவனத்தால் கோவையில் கட்டப்பட்டு வரும் மண் வீடு.
இந்த வீட்டிற்கு கருங்கல் மற்றும் செம்மண்ணை கொண்டே கடைக்கால் மற்றும் அடித்தளம் அமைத்துள்ளார்.
இந்த வீடு முழுக்க செங்கல் சுவர் செம்மண் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவை கொண்டு கட்டப்பட்டு உள்ளது.
இந்த கட்டடத்தின் கூரை அமைப்பு பில்லர் ஸ்லாப் டெக்னாலஜி மூலம் மட்ட கூரை மற்றும் மங்களுர் டைல்ஸ் கொண்டு சாய்தள கூரை போடப்பட்டு உள்ளது.
மற்றும் சுண்ணாம்பு செம்மண் கலந்த கலவை கொண்டே இரு புறமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது.
இயற்கையாக வீடு கட்ட விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய வீடு.
சமூக ஆர்வளர்களே தயவு செய்து எங்களை போல இயற்கையை சிதைக்காமல் வீடு கட்டுபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்
ஆத்தூரில் 1200 சதுரடியில் பிணைப்பூட்டப்பட்ட மண் கற்கள் கொண்டு கட்டப்பட்டு வரும் சூழ்நிலைக்கேற்ற வீட்டின் புகைப்படங்கள்.. அடுத்த பக்கத்தில்..
இந்த மாதிரியான மண்வீடுகள் தட்பவெப்ப நிலைக்கேற்ப வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன்.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இவை அலைகற்றைகளையும் வீட்டினுள் அனுமதிப்பதில்லை என்பது கூடுதல் தகவல்.
நான் ஈரோடு கணபதிபாளையத்தில் கட்டிவரும் வீட்டுக்கு வெளியே அலைபேசியில் 4 புள்ளிகள் அளவுக்கு கிடைக்கும் அலைகற்றைகள் வீட்டினுள் ஒரு புள்ளி அளவு கூட கிடைப்பதில்லை என்பதை பலரும் சொல்லி விட்டனர். நானும் கவனித்து பார்த்தேன்.நீங்கள் நேரடியாக வந்து உங்கள் அலைபேசி மூலமே உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
அலைபேசியில் பேச இது ஒரு பக்கம் பிரச்சனை என்றாலும் இன்னொரு பக்கம் radiation அளவுகளை குறைக்கும் வல்லமையும் மண்ணுக்கு உண்டு. உடலுக்கு radiation மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையும்
பழந்தமிழரின் மெட்ராஸ் டெர்ரஸ்
இப்போது வீடு கட்டும்போது நாம் பயன்படுத்தும் முறையை ஆர் சி என்கிறோம் . இம்முறைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று இன்னொரு முறையையும் சொல்லுவார்கள், இது மெட்ராஸ் டெர்ரஸ் இதனை அமைக்கும் முறை – தேக்கு மரங்களைக் குறுக்கே போட்டு அதன் மேல் மூங்கில் பரப்பி செம்மண் கலவை போட்டுவிடுவார்கள் இம்முறை ஆங்கிலேயர் காலத்தில் தான் நமக்கு அறிமுகம் ஆனது. இதனைத் தான் ‘மெட்ராஸ் டெர்ரஸ்’ என்று சொல்லி வருகிறார்கள்.
உண்மையில் இது நமது முன்னோர்களின் கட்டுமானத்திறன். தமிழகத்தில் விளங்கிய கோபுரங்களில் முதலாவதும், மிகப்பெரியதுமான கோபுரமாக திகழ்வது தஞ்சை பெரிய
கோயில் கேரளாந்தகன் திருவாயிலே ஆகும். பின்னாளில் எழுநிலை, ஒன்பது நிலை, பதினொரு நிலை, பதின்மூன்று நிலைக் கோபுரங்கள் எடுக்கப்படுவதற்கு அடிப்படையாய் விளங்கியதும் இக்கோபுரமே ஆகும்.
பலகணிகள் கீழ்தளத்தில் நான்கு பக்கத்தில் மொத்தம் 12 பலகணிகள் உள்ளன. இவை ஒவ்வொரு தளத்தின் உட்புறமும் நல்ல காற்றோட்டம் வெளிச்சம் ஆகியவை வேண்டி அமைக்க பெற்றவை ஆகும். இந்த அளவு மிகுதியான பலகணிகள் உள்ள கோபுரம் தமிழகத்தில் இதுவே. முன்னோடியான தள அமைப்பு ஒவ்வொரு தளத்தின் உட்புறம் சுவரில் பிதுக்கம் கொடுத்து சாளரம் எனும் துவாரம் அமைத்து அதில் திராவி எனும் உத்திரங்களை நெருக்கமாக பதித்து அவற்றின் மேல் பலகைகளை தைத்து செங்கற்களைக் குத்து வாட்டில் சுண்ணாம்புச் சாந்து கொண்டு இணைத்து தளம் அமைத்து உள்ளார்கள்.
இவ்வகை அமைப்பை கிபி1600க்கு பின்பு மேலைநாட்டு கட்டட பொறியியல் அமைப்பு என்றும், அவர்களால் இது தமிழகத்துக்கு அறிமுகம் செய்து வைக்கபட்டது என்றும் கூறிக்கொண்டு மீண்டும் நமக்கே ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஆயிரம் ஆண்டு முன்பே இது தமிழர்களின் கட்டிட அமைப்பு, இத்தொழில்நுட்பம் நமக்கு புதிது இல்லை.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087315
|