மண்ணிறக்கத்தினைத் தடுத்திட சுண்ணாம்பு செலுத்துதல் முறை சரியாகுமா?
நமது பொறியாளர்கள் சிலர், விரிவடையும் மென் களிமண்ணில் சுண்ணாம்பு செலுத்துதல் (Lime Injection) முறையை மண்ணிறக்கத்தினைத் தடுத்திட பின்பற்றுவார்கள். இம்முறை பெரும் பயனளிக்காது.
விரிவடையும் மென் களிமண்ணிலுள்ள அடி மனையில் தனித்த பரவல் அடித்தளம் (Isolated Footing) கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் நாளாவட்டத்தில் கீழிறங்கி (Settle) மேலே செங்கல் சுவர்களிலும் தரைமட்ட பரவல் விட்டங்களிலும் (Grade beams) விரிசல்களை உண்டாக்கும்.தனித்த பரவல் அடித்தளத்தில் இறங்கும் நேரடி பாரங்களை எதிர்த்துத் தாங்கமுடியாமலே இந்த கீழிறக்கமும் அதன் விளைவாக விரிசல்களும் விழுகின்றன. இதைச் சரி செய்வதற்குச் சில கட்டட வடிவமைப்பாளர்கள்/ வல்லுநர்கள் அடிமனை மண்ணில் சுண்ணாம்பு செலுத்தல் தொழில்நுட்பத்தைப் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு சுண்ணாம்பு செலுத்திய அடிமனைக் கட்டடங்களில் ஏற்பட்ட இறக்கமோ, விரிசல்களோ சரியாவதில்லை. ஏன்?
இரு காரணங்கள்.
1. சுண்ணாம்பு செலுத்தல் கலப்பு விரிவடையும் களிமண்ணை விரிவடைவதிலிருந்து தடுக்கிறது.It changes cohensive clay into non cohensive only .
2. சுண்ணாம்பின் இயற்கை வலிமை தாங்கு திறன் மிகக்குறைவு. எனவே சுண்ணாம்பு செலுத்துதல் அடிமனை மண்ணின் தாங்குதிறனைக் கூட்டுவதில்லை. இதனால் முன்னரே ஏற்பட்ட கீழிறக்கவோ விரிசல்களோ சரி செய்யப்படுவதில்லை. இன்றைய காலத்தில் சுண்ணாம்பு செலுத்துதல் தொழில்நுட்பத்திற்கு மாற்றுத் தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. அவற்றை அந்தந்தச் சூழலுக்கேற்ப அறிந்துப் பயன்படுத்திட வேண்டும்.