பொறியாளர்கள் சொல்கிறார்கள்:
சுவர் மேற்பூச்சு பணியில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:
குடியிருப்புகள் மற்றும் இதர கட்டுமானங்களில் செங்கல் அல்லது ஃபிளை ஆஷ் உள்ளிட்ட மற்ற கற்களை பயன்படுத்தி சுவர் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் 7 அல்லது 8 நாட்கள் கழித்தே பிளாஸ்டரிங் என்ற மேற்பூச்சு பணியை தொடங்க வேண்டும்.
அதற்கும் முன்னதாக போதிய அளவு தண்ணீர் விட்டு சுவர்களுக்கான கியூரிங் பணிகளை முடித்திருப்பது அவசியம்.
பட்டன் மார்க் முறை : சுவர்ப்பூச்சு பணிக்கு முன்னர், தூக்கு குண்டு (Plumb bob) பயன்படுத்தி மேற்கூரை முதல் தரைத்தளம் வரையில் மேலிருந்து கீழாக சுவர்ப்பூச்சு ஒரே சீராக அமைவதற்கு சுவரில் பட்டன் மார்க் செய்து கொள்வது முக்கியம். அதாவது, சுவர்ப்பூச்சின் கனம் மேலிருந்து கீழாக ஒரே அளவாக அமைவதற்கு இந்த பட்டன் மார்க் முறை அவசியமானது.
கிச்சன் மெஷ் பயன்பாடு : செங்கல் அல்லது இதர கற்கள் கொண்டு அமைந்த சுவர்பரப்புகளை தக்க சிமெண்டு- மணல் கலவை கொண்டு பூச்சு வேலை செய்து விடலாம். ஆனால் சுவர்ப்பகுதியில் தூண்கள் அல்லது கான்கிரீட் அமைப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீது வெறுமனே சிமெண்டு- மணல் கலவை மட்டும் கொண்டு பூச்சு வேலைகளை செய்வது கூடாது. காரணம், செங்கல் அல்லது இதர சுவர் அமைப்புகள் மற்றும் கான்கிரீட் தூண்கள் ஆகியவற்றிற்கிடையே உள்ள வெப்பநிலை மாறுபாடுகள் கொண்டதாக இருக்கும். அதன் காரணமாக, சிமெண்டு கலவையில் உள்ள ஈரப்பதம் உலரும் தன்மையில் உண்டாகும் மாற்றத்தின் காரணமாக விரிசல்கள் ஏற்படலாம். இந்த சிக்கலை தவிர்க்க சிக்கன் மெஷ் எனப்படும் கோழிவலை அமைப்பை அவற்றிற்கு இடையில் வைத்து சுவர்ப்பூச்சு பணிகளை செய்யவேண்டும்.
மேற்பூச்சின் கன அளவு : பொதுவாக, சுவர் பூச்சு அமைக்கப்படும் கனம் 12 எம்.எம். முதல் 16 எம்.எம். வரையில் இருப்பதுதான் சரியானது. இந்த அளவை விட அதிகமாக சுவர் பூச்சுஅமைவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ,வீட்டின் வெளிப்புற சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆர்க்கிடெக்சுரல் வடிவங்களை கச்சிதமாக சிமெண்டு- மணல் கலவை மூலம் பிளாஸ்டரிங் செய்து அழகாக தோன்றும்படி செய்யப்படும். அந்த நிலையில் மேற்பூச்சின் கனம் 18 எம்.எம். என்ற அளவுக்கு மேற்படாமல் இருப்பதே சுவர் அமைப்புக்கு எடுப்பான தோற்றம் தரும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087267
|