எந்த பீம் ஆக இருக்கட்டும் (plinthபீம், tie பீம், roof பீம், continuous lintel பீம், raft பீம்,rcc wall corner மற்றும் slab rod அனைத்துக்கும் L அடிப்பது மிக மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
ஒரு சிறு உதாரணம்.
நீங்கள் மனிதச் சங்கிலியை பார்த்து இருப்பீர்கள் அல்லது கேள்வி பட்டு இருப்பீர்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? கைகளை விரல்களால் பிடித்து கொண்டு அல்லது கோர்த்து கொண்டு இருக்கிறார்கள்
(முக்கியமாக விரல்களால்). விரல்களின் உதவியுடன் பிடித்து கொண்டு இருக்கும் மனித சங்கிலியை தள்ள முயற்சிப்பது என்பது மிக
மிகக்கடினம். விரல்களால் பிடிக்காமல் இருந்தால் அது மனித சங்கிலி அல்ல.
மாறாக இந்த மனித சங்கிலியை எளிதாக அகற்ற முடியும். அது போல beam, rcc wall, slab rod மற்றும் column தில் உள்ள L அடிக்கும் rod கள் விரல்கள் போன்றவை. இவை ஒன்றுடன் ஒன்று நன்றாக பிடித்து பிணைந்து கொள்ளும்.
Earthquake மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் அதிர்வுகளை இது தாங்கி கொள்ளும்.
L அடிக்காமல் கட்டும் beam X column X இந்த அதிர்வுகளை (earthquake) தாங்காது மேலும் பீம் joint களில் விலகள் ஏற்பட்டு , column, beam joint களில் Crack வர மிக அதிக அளவில் வாய்ப்பு உள்ளது.
மேலும் earthquake தாங்கக்கூடிய இதை seismic design என்று சொல்லுவோம்.
இந்த L I beam, rcc wall மற்றும் column joint களில் செய்ய சொல்லி மேஸ்திரிகளிடம் கண்டிப்பாக வலியுறுத்தவேண்டும்.
சில நேரங்களில் Building settlement ஆகும் போதும் இது ஒன்றுடன் ஒன்று பிடித்து இழுத்து கொள்வதால் பாதிப்பு மிக குறைவாகவே இருக்கும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087270
|