பிளம்பிங் திட்டமிடலில் அலட்சியம் காட்டினால் ...
12 நவம்பர் 2020   10:29 AM



பிளம்பிங் திட்டமிடலில் அலட்சியம் காட்டினால் ...
போர்வெல் அமைப்பது, மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைப்பது,இவற்றை இணைப்பது, இதில் இருந்து பிற பகுதிகளுக்கு டெலிவரி  கொண்டு செல்வது இவற்றோடு முடிந்துவிடாது. கட்டடம் எனில், அதில் எத்தனை வீடுகள் உள்ளன: அவற்றில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, அமைப்பது ஆகியவற்றை கருத்தில் வைத்து, பிளம்பிங் பணிகளுக்கான திட்டமிடுதல் இருக்க வேண்டும். நுகர்வோர் எண்ணிக்கை பயன்பாடு  வேறுபாடுகளை மிக துல்லியமாக புரிந்து செயல்படுவது அவசியம். இதில், எந்த இடத்துக்கு எத்தகைய குழாய் அமைக்க வேண்டும் என்பதில் இருந்து, அதன் நீடித்த உழைக்கும் தன்மை வரை, அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குழாய்,தேவையான இடங்களில் மட்டும் 
திருப்பங்கள் உடையதாக இருக்கலாம். தேவையின்றி அதிக திருப்பங்கள் இருந்தால், தொட்டிக்கு சென்று சேரும் தண்ணீர் அளவு குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இத்தகைய கூடுதல் திருப்பங்கள்,பிளம்பிங் அமைப்பையே சிக்கலாக்கி விட வாய்ப்புள்ளது. திட்டமிடப்படாத  மற்றும் குறைபாடு உடைய பிளம்பிங் வேலைகள் கட்டட தளம் மற்றும் சுவர்களை நீர்க்கசிவால் பாழ்படுத்தும் என்பதால் பிளம்பிங் பணிகளை வேலையாள்கள் செய்யும் போது  கூடவே இருந்து மேற்பார்வை செய்ய வேண்டும்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087264