வீட்டின் மொட்டை தளம் மிகசரியான முறையில் அமைய
11 நவம்பர் 2020   01:27 PM



மொட்டைத் தளம் (Terrave roof) அமைத்திடப் பயன்படுத்தும் rdinary weathering course, Hydraulic pressed tiles in cm 1:3 & Pointing with same cm 1:3 கட்டுமான முறை மிகவும் தவறானவை இவை மொட்டைத்தளம் பழுதடைவதற்கு (especially leaky) தலையான காரணம் எனக்கூறி மணல் மற்றும் நீர்ப்புகா வேதியியல் திரவத் கூட்டுக்கலவை  (Combination mortar) மற்றும் சாதாரண சிமெண்ட் வண்ண மொசைக் ஒடுகளைப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். இதை நாங்கள் மிகச் சரியாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்குங்கள்.

எங்களுடைய கண்ணோட்டத்தில் அனுபத்தில் கட்டுமானப் பொருள்களின் தன்மை இவற்றைக் கொண்டு ஆய்ந்ததில்...
Hydraulic Pressed tiles and joints with cement mortar 1:3 என்ற தரவேலைக்குறிப்பு மிக மோசமானது, தவறானது என்று அறிந்துள்ளோம். இதற்கு அடிப்படையாகவே...
1. களிமண்ணை அமுக்கி சுட்ட ஓடுகள் வலிமைமிகுந்தவை அல்ல 5% அளவுக்குச் சரியாகச் சுடப்படாமை (unburnt) அல்லது அதிகமாகச் சுடப்பட்டவை 
(overburnt)  வேகாத இடங்களில் உள்ள களிமண் தொடர் மழையின் போது சுரந்து, குழிவிழுந்து அதனுள் நீர் புகுந்து ஈரத்தை ஏற்படுத்துகிறது.

2. இரண்டாவதாக சிமெண்ட் கலவை 1:3 என்பது சிமெண்ட் அதிகமாக உள்ள களிப்பான கலவை (Rich mix mortar) இது வெயிலிலும் மழையிலும் சுருங்கி விரிவடைவதால் இணைப்புகளில் விரைவில் விரிசல்கள் ஏற்பட்டு அதனுள்ளும் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே அடிப்படையிலேயே 100 ஆண்டுகளுக்கு  முன்பே  தயாரிக்கப்பட்ட தரக்குறிப்புகள் (Work specifcations) பெரிதும் குறைபாடுடையவை. சேதமடைவற்குப் பெரும் காரணமாக உள்ளன. எனவே இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஒதுக்கித் தள்ளவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இதற்கு மாற்றாக கீழ்க்கண்ட வேலைத்தரக் குறிப்புக்களைப் பரிந்துரைக்கிறோம்.
1. வெப்பக்காப்பு வரிசை (Weathering course) போட்டவுடன் அதன் மீது நீர்த்தடுப்புத் திரவம் 150 மில்லிலிட்டர் (say Ultre tech Seal & Dry) கலந்த கூட்டுக்கலவை (Combination mortar 1:2:6 சிமெண்ட்: சுண்ணாம்பு: மணல்) யினை 20மிமீ கனத்தில் பூசி நான்கு நாட்களுக்கு நீராற்றுக.

2. இதன்மீது இதே கூட்டுக்கலவையினை 12மிமீ-15மிமீ கனத்தில் பாவி அதில் சாதாரண சிமெண்ட் வண்ண (Grey colour) மொசைக் ஒடுகளை அழுத்திப் பதிக்கவும் (வறக்கலவை / கட்டுக்கலவை கூடாது)

3. மொசைக்கு  ஓடுகளிடையே உள்ள இணைப்புக்கு Tile Grout  பயன்படுத்துக. (white cement  கூடாது)

4. நான்கு நாட்கள் நீராற்றிய பின்பு தள மேற்பரப்பினை பளபளப்பாக்கும் ஒட்டு இயந்திரம் (Polishing machine) கொண்டு ஒரே ஒரு Rough Polishing செய்து இணைப்புகளை இணைக்கவும்.

5.உடனடியாகவே மொட்டைமாடியைப் பயன்படுத்தலாம். இம்முறையில்..மொசைக் ஒடுகள் கெட்டியானவை, தண்ணீரை உறிஞ்சுவதோ ஈரந்தங்கவைப்பதோ இல்லை. வெயில் மழைபெய்யும் போது அவை பெயர்ந்து உடைவதில்லை (விரிசல்கள் விழாதவை) எங்களுடைய வடிவமைப்பு கட்டுமான மேலாண்மையில் 100க்கு மேற்பட்ட (எனது சொந்த வீடு உட்பட) வீடுகளில் பயன்படுத்தி 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாக அவை பழுதில்லாமல் உள்ளன.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087266