கட்டுமானத்தின் போது சாரத்தாங்கமைப்புகள் பலகம் விட்டம் தாங்கும் சவுக்குக் கொம்புகள், மூங்கில் கழிகள் ஆபத்தா?
11 நவம்பர் 2020   01:11 PM



கட்டுமானத்தின்போது சாரத் தாங்கமைப்புகள், பலகம்/ விட்டம் இவற்றைத் தாங்கும் முட்டுகள் முதலியவற்றைச் சவுக்குக் கொம்புகள்/ மூங்கில் கழிகள் பயன்படுத்துவதால் தான் விபத்துகள் ஏற்படுகின்றன என்று பலரும் தெரிவிக்கின்றனர். (For safe & effective centering props and for scaffolding). இதைப்பற்றிய Site Manual  இருந்தால் அதையும் தெரிவியுங்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் பெரிய கட்டுமானங்களில் காங்கிரீட் போடும் போதும் அல்லது போட்ட உடனேயும் (குறிப்பாக உயரம் கூடிய கோயில் மண்டபங்கள், 
மாதாகோயில்கள், வணிக நிறுவனங்கள் (High ceiling கொண்டவை ) தாங்குசாரம் வளைந்தும் முறிந்தும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதுவும் அப்போது பலத்த மழையும் வேக
மான காற்றும் வீசினால் மூங்கில்/சவுக்குக் கொம்புகள் முறிந்தும் (அடி மண்ணில் வைத்த செங்கல் அடித்தட்டு நகர்ந்தும் நொறுங்கியும்) விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளன.
இத்துடன் அன்றி போடப்படும் காங்கிரீட் உயரத்திற்கேற்ப 2.10மீ முதல் 2.40மீ உயரத்திற்கொன்றாக இருதிசைகளிலும் பக்கவாட்டுக் கிடைக்கொம்புகள் கட்டாமையும் அத்துடன் நெடுக்குயரக் குறுக்குத் (Cross diagonals) தடுப்புகள் அமைக்காமையும் கூட முக்கியமான காரணம் என்பதை அறிந்துள்ளோம். 
இதுபற்றி மூன்று/நான்கு கட்டுரைகளும் தள ஆய்விற்குப்பின் கோவை ஈச்சநாரி கோயில், தாம்பரம் சர்ச், தஞ்சாவூர் மத்திய பல்கலைக்கழ விருந்தினர் விடுதி... கட்டுமானப் பொறியாளரில் எழுதப்பட்டுள்ளன.
எனவே மூங்கில் / சவுக்கு கம்புகளை முட்டுக்கொடுக்கப் பயன்படுத்தக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மாற்றாக... இப்போது பேரூர்களிலும் சிறு நகரங்களிலும் கூட எஃகுக் குழாய்களும் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றை வடிவமைக்கும் முறை, வைத்துக் கட்டும் முறை, முதலியன Dr.Kumar Neeraj jha என்பவர் எழுதிய Formwork for Concrete Structures என்ற நூலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. இதுவன்றியும்  L&T ECC Construction Group  மற்றும் Casa Grande Ö[ Construction Manual  இலும் விளக்கப்பட்டுள்ளன.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087280