பொறியியல் பாடத்திட்டத்திலும், சிவில் படிப்பு முடித்து வெளியே வரும் மாணவர்களிடையேயும் கற்றல் மற்றும் செயலாற்றலில் உள்ள குறைபாடுகள்...
11 நவம்பர் 2020   12:24 PM



அய்யா.
ஏற்கெனவே நமது பொறியியல் பாடத்திட்டத்திலும்,சிவில் படிப்பு முடித்து வெளியே வரும் மாணவர்களிடையேயும் கற்றல் மற்றும் செயலாற்றலில்  பல குறைபாடுகள் உள்ளன. அதில் இந்த ஆண்டு கொரானோ காரணமாக இறுதி ஆண்டு  மாணவர்கள் தங்கள் படிப்பினையும்  தேர்வினையும் சரிவர  முடிக்காமல் பட்டம் பெற்று துறையில் நுழையக் கூடிய வாய்ப்பு இருக்கிறதே. இதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும். இவர்களை முறையாக எவ்வாறு கட்டமைப்பது?

பொதுவாகவே நமது பொறியியல் பாடத்திட்டம் (Civil) வெறும் ஏட்டுப்படிப்பாகவே உள்ளது. சொல்லித்தரக்கூடிய பேராசிரியர்களும் கட்டட தள அனுபவம் இல்லாமல் சொல்லித் தருகின்றனர். எனவே மாணவர்களிடையே கற்றல் மற்றும் செயலாற்றலில் போதாமை உள்ளது. எனினும் இந்தாண்டு கொரானோ காரணமாக இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் படிப்பினையும் தேர்வினையும் சரிவர முடிக்காமல் பட்டம் பெற்று வெளிவருவதில் பெரிய தாக்கம் ஏதும் இருக்காது. எப்போதும் போல கட்டட வேலைகளில் ஈடுபடும் போது அனுபவத்தாலும், பொறியியல் பற்றிய மேம்பாட்டுக் கட்டுரைகளைப் படிப்பதனாலும் கருத்தரங்குள், பயிற்சி பட்டறைகள் மூலமாக தங்கள் பொறியியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. பொறியியல் பாடத்திட்டத்தில் ஓராண்டு கட்டுமான செயல்முறையில் மாணவர்களை ஈடுபடுத்தினால் மட்டுமே இன்றைய குறைபாட்டைப் போக்க முடியும்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087326