மிதக்கும் டூம் மிரட்டல் டிசைன்
உலகின் முதன்மையான ஐ போன் நிறுவனமான ‘ஆப்பிள்’ அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் தனது புதிய விற்பனையகம் ஒன்றை துவங்கியிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தான் வாரம் ஒரு ஷேரூமினை உலகம் முழுக்க துவக்குகிறதே என நினைக்கலாம். ஆனால், இது ‘ஒளிரும் டூம்’ போன்ற முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட கட்டுமானமாகும்.
மேலும் புகழ்பெற்ற மெரினா பே ஹோட்டல் ஹார்பாருக்கு அருகே ஏரி ஒன்றில் அமைந்திருக்கிறது. உலகெங்கும் 511 ஷோ ரூம்கள் கொண்ட ஆப்பிள் - ஐ போன் நிறுவனத்திற்கு இது 512 ஆவது ஷோரூம் ஆகும். ஃபாஸ்டர்ஸ் + பார்ட்னர் என்னும் பிரபல ஆர்க்கிடெக்ட் நிறுவனம் இதை வடிவமைத்திருக்கிறது.
30 மீ விட்டமுடைய இந்த மெகா டூம் 25 மீ உயரமுடையது.10 வலுவான செங்குத்து ஸ்டீல் தூண்கள் நீருக்கடியில் ஆழத்தில் பொருத்தப்பட்டு சுற்றிலும் ஃபைபர் பேனல்களால் மூடப் பட்டிருக்கும்
இந்த ஆப்பிள் ஸ்டோர் 706 ச,மீ (ஏறத்தாழ 700 ச.அடி) பரப்பு கொண்டதாகும்.
இதன் தரை தளபரப்பு ஸ்டீல் & மரத்தினால் ஆனதாகும். சாலையிலிருந்து இந்த ஸ்டோருக்கு மரத்தால் ஆன நடை பாலம் மூலம் உள்ளே வரலாம்.
இதில் இன்னொரு வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், இது கூடுதல் கீழ் தளம் உடையது. ஆம் தரைப் பரப்பிலிருந்து தாழ் தளத்திற்குச் செல்ல தனியே எஸ்கலேட்டர் உண்டு.
விற்பனைக்கூடம், காட்சியகம் கூடவே, சந்திப்புக்கூடங்களும் உண்டு. பெரும்பாலும் மரத்தாலான பொருட்கள் கொண்டே இன்டிரியர் ஒர்க் செய்யப் பட்டிருக்கிறது.
பாப்பதற்கு தண்னீரில் மிதக்கும் தோற்றத்தை இது தந்தாலும் இதற்கான தனி அஸ்திவாரம் இந்த நீர்நிலையின் கேஸ் ட்ரில்லிங் தொழில்நுட்பம் மூலம் (Case Drilling Technology) மூலம் ஸ்டீல்& கான்கிரீட் கொண்டு போடப்பட்டிருக்கிறது.
குறிப்பு: சிங்கப்பூரில் ஆப்பிள் ஐ போன்கள் இந்தியாவை விட விலை அதிகம். போன் வாங்குவதற்காக இல்லையென்றாலும், சும்மா சுற்றிப்பார்ப்பதற்காகவாவது ஸ்டோர் உள்ளே போய் வரலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087257
|