21 ஆம் ஆண்டில் உங்கள் பில்டர்ஸ் லைன்
10 நவம்பர் 2020   11:58 AM



21 ஆம் ஆண்டில் உங்கள் பில்டர்ஸ் லைன்
அன்பு வாசகர்களே!
மற்றுமொரு மகிழ்வான தருணத்தில் பில்டர்ஸ்லைன்  ஆசிரியர் பக்கம் வாயிலாக உங்களைச் சந்திக்கிறேன்.

இந்த இதழோடு உங்கள் பில்டர்ஸ்லைன் மாத இதழ் துவங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்து, 21 ஆம் ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு, கட்டுமானத்துறைக்கென தமிழில் பத்திரிகை எதுவும் இல்லையே என்பதற்காகவும், ஊர்ப்புற, கிராமப் புறங்களிலிருந்து சிவில் படித்து பணியிடத்திற்கு வரக்கூடிய மாணவர் களுக்கு அவர்கள் தாய்மொழியில் கட்டுமானப் பொறியியலை விளக்குவதற்காகவும், மிகவும் சிக்கலான கட்டுமானத் தொழிற்நுட்பங்களைக் கூட எளிய தமிழில் புரிய வைப்பதற்காகவும், நவீனகால கட்டுமான முறைகள், தொழிற்நுட்பங்கள், புதிய கட்டடப்பொருள்கள்ஆகியவற்றை உடனுக்குடன் நமது பொறியாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும் தெரிவிப்பதற்காகவும் துவங்கப்பட்டது தான் நமது  பில்டர்ஸ்லைன் என்பதை நீங்கள் நன்கு அறீவீர்கள்.

அது மட்டுமா?  நமது கட்டுமானத்துறைக்கு இடர்கள் வரும் போதெல்லாம் உரத்தக் குரலில் அரசு நிர்வாகத்தின் செவிகளுக்கு கொண்டுச்செல்வதும், கட்டுமானம் தொடர்பான சங்கங்களின்  கோரிக்கைகள், போராட்டங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதும், சமயத்தில் அரசுக்கே ஆலோசனைகள் சொல்லி வழி நடத்துவதும் நமது தலையாயத் தொண்டாகவே கருதி செயலாற்றி வருகிறது பில்டர்ஸ்லைன்.

இதுவரை 2000 க்கும் மேற்பட்ட தொழிற்நுட்பக் கட்டுரைகளையும், 1200க்கும் மேற்பட்ட கட்டுமானத்துறையினரின் நேர்காணல்களையும் வெளியிட்ட ஒரே மாத இதழ் என்னும் பெருமையை உங்கள் மூலமாக பில்டர்ஸ் லைன்  பெறுகிறது.

நமது பில்டர்ஸ் லைன் தமிழ்  அச்சு வடிவம், மின்னூல் வடிவம் என இரு வடிவங்களில் வெளியாகிறது என்பதும் கடந்த 5 ஆண்டுகளாக  பில்டர்ஸ் லைன் ஆங்கிலத்திலும் மின்னிதழாக வெளியாகி  அனைத்து தரப்பினரிடையேயும் பாராட்டைப் பெற்றிருக்கிறது என்பதும் எங்கள் நீண்ட பயணத்தில் குறிப்பிட வேண்டிய மைல் கற்கள் நிகழ்வுகளாகும்.

கட்டடத்துறையின் உயிர்நாடியாக தமிழகக் கட்டுமானத் துறை யினரால் நன்கு அறிமுகமாகி இருக்கும் உங்கள் பில்டர்ஸ்லைனுக்கு மூன்று லட்சம் வாசகர்களின் ஆதரவுக்கரம் இருக்கிறது என்னும் போது நமது பயணத்தின் இலக்கு நன்கு விளங்குகிறது.

பில்டர்ஸ்லைனின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும் வாசகர்கள், கட்டுநர்கள், பொறியாளர்கள், இதழ் தவறாது விளம்பரம் அளிக்கும் நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் என்றும் சிரம் தாழ்ந்து நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மேலும், தங்கள் அனுபவ முத்துக்களையும் ஆலோசனைகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் அத்தனை பொறியியல் படைப்பாளிகளுக்கும் உளம் கனிந்த நன்றி கூறுகிறோம். 

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087332