நவீன கட்டடக் கலையின் நாயகன் ஃப்ராங்க் கேரி
05 நவம்பர் 2020   06:10 PM



வாசகர்கள் பலபேர் அயல் நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்சர்களைப் பற்றி நிறைய சொல்கிறீர்கள் .
அது போலவே அயல் நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்டுகளைப் பற்றியும் விரிவாகச் சொல்லுங்களேன்’’ என்கிறார்கள்.

அதற்காக இந்தப்பகுதி.
அயல்நாட்டில் ஆர்க்கிடெக்டுகளுக்கு தனி இடம் உண்டு. பெருமையும் உண்டு. சில ஆர்க்கிடெக்டுளுக்கு சிலை கூட வைத்திருக்கிறார்கள். தங்கள் நாட்டின் நாகரீகத்தையும், கட்டடக் கலை மேம்பாட்டையும் உச்சமடையச் செய்வது ஆர்க்கிடெகள் தான் என்பதில் அம்மக்கள் தீவிரமாக இருக்கிறார்கள்

அமெரிக்காவைச்  சேர்ந்த ஓவென் கெரி (Frank Owen Gehry) யும் அப்படிப்பட்ட ஓர் ஆர்க்கிடெக்ட்தான்.

தனக்கென தனி பாணி கொண்ட  ஒரு அற்புத கட்டட கலைஞர் இவர். சிற்பங்களைப் போன்ற வடிவமைப்புக் கொண்ட இவரது கட்டிடங்கள் மூலம் இவர் பரவலாக மக்களுக்கு அறிமுகமானவர். உலோகங்களினால் மூடப்பட்ட வளைவுகள் நெளிவுகளோடு கூடிய தோற்றம் கொண்ட கட்டிடங்களை வடிவமைத்ததன் மூலம் இவர் மக்களைக் கவர்ந்தார். 
இவரது பாணியைச் சிறப்பாக விளக்கும், ஸ்பெயின் நாட்டின் பில்பாவோ என்னுமிடத்தில் அமைந்துள்ள குகென்ஹெய்ம் அரும் பொருட்காட்சியகம் (Guggenheim Museum). டைட்டானியம் உலோகத்தால் மூடப்பட்டதாகும்.

கனடா நாட்டிலுள்ள டொராண்டோவில், யூதக் குடும்பமொன்றில் பிப்ரவரி 28, 1928ல் பிறந்த இவர், தனது 17 ஆவது வயதில் கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரக் கல்லூரியில் பயின்ற பின்னர், தென் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின், கட்டிடக்கலைக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். இதன் பின் ஹார்வாட் வடிவமைப்புக்கான பட்டப் படிப்புக் கல்லூரியில் சேர்ந்த நகரத் திட்டமிடல் கல்வி கற்றார். இன்று இவர் ஒரு அமெரிக்கக் குடிமகனாகக் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்.

கெரியின் பாணி பிந்திய நவீனத்துவத்தில் (late modernism) இருந்து உருவானதாகும். இவருடைய கட்டிட அமைப்புக்களில் காணும் முறுகிய உருவ அமைப்பு (Forms), நவீன கட்டிடக்கலையின், கட்டமைப்பு கோட்பாடுகளை வெளிப்படுத்தி நிற்பதாகக் கருதப் படுகிறது. 

அத்துடன் நவீனத்துவவாதிகள் மத்தியில் பிரபலமாக இருந்த செயற்பாட்டைப் பின்பற்றியே இவரது கட்டட வடிவம் அமைகின்றது.

கெரியின் வசிக்கும் வீடு உட்பட இவர் வடிவமைத்த கட்டிடங்கள் பல இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக உள்ளன. இதனால் பல அரும்பொருட்காட்சியகங்களும், நிறுவனங்களும், நகரங்களும் இவரது வடிவமைப்பின் முத்திரையைப் பொறிப்பதற்காகவே இவரது  சேவைகளை நாடி நிற்கின்றன.

ஆனாலும், கெரி தனது வடிவமைப்புகளில் திரும்பத் திரும்ப ஒரே அம்சங்களையே பயன்படுத்துவதாக, அண்மையில், ஒரு சில விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டார். இதற்கு முன் இவரே  குகென்ஹெய்ம் என்னும் அருங்காட்சியகத்தில் பயன்படுத்திய உலோக போர்வையையே எல்லாக் கட்டிடங்களிலும் பயன் படுத்தியதை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

ஆனாலும், அது தன் பாணி என்பதையும், மாடர்ன் ஆர்ட் என்பதெல்லாம் பார்ப்பதற்கு ஒரே மாதியானவை தான். நுட்பமாக பார்த்தால் தான் உங்களுக்கு வேறுபாடு புரியும் என்றும் சொன்னார் கெரி.

இவர் வடிவமைத்த நூற்றுக்கணக்கான கட்டடத் தொகுப்புகளை ஆர்க்கிடெக்ட் மற்றும் கட்டப் பொறியாளர்கள் இணைய தளத்தில் பார்வையிட்டு சர்வதேச கட்ட இயல் அறிவு பெறவேண்டும். 
ஏனென்றால் Gehry is a Legend of a Creater of Modern Building Architecture.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087310