இந்தியாவில் முதன்முறையாக கண்ணாடியால் ஆன சஸ்பென்ஷன் நடைப்பாலம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. வழக்கமாக இது போன்ற மிராக்கிள் பாலங்களை சீனாவில் அமைப்பார்கள். இம்முறை இந்தியாவில் அமைய இருப்பதே தித்திப்பான செய்தி. உத்தர்காண்டில் புகழ்பெற்ற லக்ஷ்மன் ஜுலா என்னும் மலைஉச்சிக் கோயிலுக்குச் செல்லும் பாதையில் கங்கை நதிக்கு மேலாக இரு மலைக்குன்றுகளையும் இணைக்கும் ஒரு இரும்புப்பாலம் ஏற்கனவே அமைந்துள்ளது. ஆனால், இது கட்டிமுடித்து 94 ஆண்டுகள் ஆனதால், பாதுகாப்பு காரணம் கருதி இதற்கு மாற்றுப் பாலம் அமைக்க உத்தரகாண்ட அரசு தீர்மானித்திருக்கிறது.
புகழ்பெற்ற ஆன்மீக தளமான ரிஷிகேஷ் பகுதியில், கங்கை ஆற்றின் மீது அமையவுள்ள இந்த பாலத்தை சுற்றுலாப் பயணிகளையும் ஆன்மீக பக்தர்களையும் கவரும் வகையில் கண்ணாடிப்பாலமாக அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
132 மீட்டர் நீளத்திற்கு அமையவுள்ள இந்த சஸ்பென்ஷன் பாலம், 1.5 மீட்டர் அகலமுடையதாக இருக்கும்.
ஒரே சமயத்தில் 400 க்கும் மேற்பட்ட பக்தர்களை இதில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். வீல்கள் பொருத்தப்பட்ட எந்த ஒரு உபகரணமும், உடமையும் இந்த கண்ணாடி பாலத்தில் உருட்டி செல்ல அனுமதியில்லை. ஒரு தைவான் கட்டுமான நிறுவனம் இதைக் கட்டிதர முன்வந்துள்ளது.
3.5 அங்குலம் தடிமனுடைய டஃபன்ட் கண்ணாடி (Toughened Glass) பேனல்கள் பொருத்தப்படும் இந்த பாலத்தின் வடிவமைப்பு நகராட்சியால் இறுதி செய்யப்பட்டு மும்பை ஐஐடி க்கு அனுப்பப் பட்டிருக்கிறது. அவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் 2021-ல் உத்தர்காண்ட் ரிஷிகேஷ் புதிய கண்ணாடி பாலத்தின் கட்டுமானப்பணிகள் துவங்கப்படும்.
நாட்டின் முதல் கண்ணாடிப் பாலத்தில் நடப்பதற்கு யாத்ரீகர்கள் தயாராக இருக்கலாம். Glass on the Ganges..
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087319
|