10 நாட்களில் கட்டிமுடித்த மருத்துவ மனை
05 நவம்பர் 2020   11:25 AM



மருத்துவத் துறையில் மட்டுமல்ல, 2020-ல் அனைத்து தொழில்துறைகளையுமே பாதிக்கக்கூடிய விஷயமாகிவிட்டது கொரோனா வைரஸ். உலகையே அச்சுறுத்தி வரும் இந்த வைரஸ் சீனாவில் மட்டும் 2500 பேரை பலிகொண்டுள்ளது. இந்த வைரஸின் தாயகம் என குற்றச்சாட்டப்படும் சீனா உலக நாடுகளின் முன் தலைகுனிந்து இருந்தாலும் இந்த கொடூரமான வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மேற் கொண்ட நடவடிக்கைகளும்,  கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக 10 நாளில் கட்டிமுடித்த மருத்துவமனைக் கட்டுமானத்தாலும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து இருக்கிறது.

11 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட வுஹான் நகரில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பொது மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இது எளிதில் தொற்றக்கூடிய தன்மை கொண்ட நோய் என்பதால் இதற்கென தனிப்பட்ட மருத்துவனை இருத்தல் என்பது பாதுகாப்பானது என சீன அரசு கருதியது. 

எனவே வுஹான் நகரில் 1000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய புதிய மருத்துவமனை ஒன்றை 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிமுடித்திருக்கிறது. இந்த முழுக் கட்டுமானத்தையும் கட்டி முடிக்க வெறும் பத்தே நாட்கள் தான் சீனாவுக்கு தேவைப்பட்டன.
இரும்பு, பிரிகேஸ்ட் பேனல்கள், பியூஎஃப் பேனல்கள், (சான்ட்விச் பேனல்கள்), யு.பி.வி.சி. மெட்டல் கூரைகள், ரெடிமேட் கான்கிரீட் பில்லர்கள், ரெடிமேட் ரூப் லாப்கள் போன்ற தொழிலக உற்பத்திக் கட்டுமானப் பொருட்கள் கொண்டு இந்த மருத்துவமனை கட்டடத்தை 1000 க்கும் மேற்பட்ட கட்டுமானப் பொறியாளர்கள் 10 நாட்கள் இரவு பகலாக கட்டி முடித்திருக்கின்றனர். மின்னியல் & மின் பொறி யாளர்களின் பங்களிப்பும் இதில் உண்டு.

2003 ல் இதே போன்று சீனாவில் பரவிய சார்ஸ் நோய்க்காக ஒரு அவசரகால மருத்துவமனையை ஏழே நாட்களில் சீன அரசு கட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 2012-ல்  15 நாள்களில் 30 அடுக்கு மாடிக் கட்டிடத்தை கட்டிய சாதனையை சீன அரசு செய்து இருந்தது. 

இந்த கொரோனா மருத்துவமனைக்  கட்டுமானப் பணிக்காக 180 எக்ஸ்கவேட்டர்கள், 260 டிரக்குகள், 35 கிரேன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுமானத்திற்குத் தேவையான அனைத்து பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை வெறும் 14 மணி நேரத்தில் பணியிடத்தில் ஒன்று சேர்த்திருக்கிறார்கள். இது தான் சீனாவின் ஒருங்கிணைப்புக் கட்டமைப்பின் மகத்துவமாகும். 

சாதனைக்காக மட்டுமல்லாமல் இது போன்ற அவசரகால தேவை மற்றும் இயற்கை பேரிடர்களுக்கான விரைவு கட்டுமானங்களை படைப்பதில் சீன அரசு எப்போதுமே உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. 

அந்த நிலையை அடைவதற்கு சீனா தனது ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இது போன்ற அவசர கால இன்ஸ்டன்ட் கட்டுமானங்களுக்காக ரிசர்வ் செய்து வைத்திருப்பதும், அதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள்,  கருவிகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதும் காரணம்.
அதுமட்டுமல்ல இது போன்ற சிறப்புக் கட்டுமானங்களுக்கு தேவையான பிளான்கள், தேவையான அனுமதியுடன் அவர்களிடம் தயாராகவே இருக்கும். 
China Faster than Corana !

 

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087329