கொரானா நினைவுச்சின்னம், உருகுவே, கான்கிரீட் சர்க்கிள்
17 அக்டோபர் 2020   12:53 PM



இந்த ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்றியிருக்கிறது கொரானா பெருந்தொற்று. காலம் தந்த இந்த சோகத்தை  எதிர்காலத்தில் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும், இந்த நோயை மனிதகுலம் எப்படி இணைந்து எதிர்கொண்டு போராடியது என்பதை நாம் பெருமையுடன் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காவும் உலகில் முதன்முதலாக கொரானா நினைவுச்  சின்னக் கட்டடம் ஒன்று, கட்டப்பட இருக்கிறது.

உருகுவேயில் தான் இது நிர்மாணிக்கப்படுகிறது. இந்த நினைவுச்சின்ன கட்டுமானத்தினை வடிவமைத்த மார்டின் கோமஸ் பிளாட்டரா கூறும்போது, “”உலகில் போருக்காக, துப்பாக்கி சூடு போன்ற அழியாத துன்ப வடுக்களாகத்தான் நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டுள்ளன். ஆனால் இந்த கட்டுமானம் கோவிட் 19 ஏற்படுத்திய தாக்கத்தினை நினைவுகூர்வதற்காக மட்டுமல்ல, எப்போதெல்லாம் மனித இனத்திற்கு தாக்கங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவை முறியடிப்பதற்கு பெரும் காரணமாய் விளங்குவது மனிதஇனைத்தின் ஒற்றுமை மட்டுமே. சொல்லப்போனால் இது மனித 
ஒற்றுமையின் சின்னமாய் கொண்டாடப்படும்’’ என்கிறார்.


வழக்கமாக நினைவு சின்னம் என்றால், உயர்ந்த டவர் கோபுரம், தூண்கள், சதுரங்களாகத்தான்  கட்டுமானம்  உருவாகும். ஆனால், இது மிகப்பெரிய விண்வெளி தட்டாக, அதாவது 40 மீ விட்டமுடைய தட்டு வடிவமாக அமைய இருக்கிறது. உருகுவேயின் கடற்கரையோரத்தில் நிறுவப்படவுள்ள இந்த கோவிட் 19 நினைவுச்சின்னம் 1,256.6  சதுர மீட்டர் பரப்பில், அதாவது 12,500 சதுர அடி பரப்பில் அமைய இருக்கிறது. எனவே, ஒரே சமயத்தில் 5 ஆயிரம் பேர் இந்த தட்டு தளப்பரப்பில் நின்று பார்வையிடலாம் என்றாலும் சமூக இடைவெளி காரணமாக  1000 பேர் இதில் நின்று  கடலை பார்வையிடலாம்.


இந்த பிரம்மாண்ட தட்டு வடிவக் கட்டுமானத்தில் நடுவே, 10 மீட்டர் விட்டத்தில் சிறிய வட்ட வடிவில்,  இடைவெளி இருக்கிறது. இது கடற்பரப்பை இன்னும் நெருக்கமாக பார்த்து ரசிக்க உதவும். கரையிலிருந்து இந்த கட்டுமானத்திற்கு போக 3 மீ அகலத்தில் சரிவுப்பாதையும் உண்டு. கடலைப் பார்வையிடும் ஒரு பிரம்மாண்ட பால்கனியாக இருக்கும் இந்த கட்டுமானத்தில் எங்குமே பாதுகாப்பு தடுப்புகள் இல்லை. இது ரிஸ்க்கான விஷயம் இல்லையா? எனக்கேட்டால், 


யயஸ் ரிஸ்க் தான்.. இந்த மனித வாழ்க்கை அடுத்த நொடி ஆச்சரியங்களால் மட்டுமல்ல, அடுத்த நொடி துயரங்களாலும் நிறைந்தது. நோய்களின் ரிஸ்கைச் சொல்லும் கட்டுமானம் இது.  என்றாலும் விளிம்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் ஸ்லோப் பார்வையாளர்களுக்கு பாதுக்காப்பாக இருக்கும்’’ என்கிறார் மார்ட்டின்.
கட்டுமானம் என்பது ஒரு கட்டடக் கலைஞனின் படைப்பாளியின் மொழியைப் பேசும் இந்த உருகுவே கொரானா நினைவுச்சின்னம் இன்னும் 6 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087311