எதற்குஇந்த மஞ்சள் நிறம்? ஜேசிபி நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரசியமான தகவல்கள்..
16 அக்டோபர் 2020   12:56 PM



ஒரு இடத்தில் ஜேசிபி இயந்திரம் வேலை செய்து கொண்டிருக்கிறது என்றால், அதனை வேடிக்கை பார்க்க இன்றளவும் இந்தியாவில் பெரும் கூட்டமே இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

அதன் வேலை அப்படி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு #JCBKiKhudayi  என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. #JCBKiKhudayi  என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? ஜேசிபி இயந்திரம் மீது மக்கள் கொண்டுள்ள அன்பால், இந்தியாவில் #JCBKiKhudayi  ஹேஷ்டேக் பயங்கரமாக டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, ஜேசிபி இயந்திரம் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது? என் நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? ஆரம்பத்தில் ஜேசிபி இயந்திரங்கள் வெள்ளை மற்றும் சிகப்பு நிறத்தில்தான் இருந்தன. ஆனால் பின் நாட்களில் அவர்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிட்டனர். இந்த நிறம் காரணமாக பகல் அல்லது இரவு என எந்நேரம் என்றாலும் ஜேசிபி இயந்திரம் பார்வைக்கு எளிதாக புலப்படும். இதுவே இந்த நிறத்திற்கான காரணம். இதன் மூலமாக கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை ஒருவரால் எளிதாக அறிந்து கொள்ள முடியும். அதற்குத்தான் இந்த மஞ்சள் கலரு ஜிங்குச்சா...

சரி, இனி ஜேசிபி இயந்திரம் பற்றிய மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஜே.சி.பாம்ஃபோர்டு எக்ஸ்காவேட்டர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் (J.C. Bamford Excavators Ltd)  சர்வதேச அளவில் சுருக்கமான ஜேசிபி என அறியப்படுகிறது. இது இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஆகும். கட்டுமானம், விவசாயம் மற்றும் கழிவு 
மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை ஜேசிபி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. ஜேசிபி நிறுவனத்தின் தயாரிப்புகள் 
இந்தியா உள்பட 150 க்கும் அதிகமான நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் 
அமெரிக்கா என உலகின் 4 கண்டங்களில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த 4 கண்டங்களில் இந்நிறுவனத்
திற்குச் சொந்தமான 22 தொழிற்சாலைகள் உள்ளன.

உலகில் கட்டுமானத்திற்கான முதல் ராட்சச இயந்திரம் ஜேசிபி தான். 
பெயர் எதுவும் சூட்டப்படாமல் தான், கடந்த 1945ம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் நிறுவனர் நீண்ட காலமாக இதற்கு பெயரை யோசித்து கொண்டே இருந்தார். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. இறுதியாக இந்நிறுவனத்தின் நிறுவனரின் பெயரே சூட்டப்பட்டது. அவரது பெயர் ஜோசப் சிரில் பாம்ஃபோர்டு.
உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்த முதல் தனியார் பிரிட்டீஷ் கம்பெனி ஜேசிபி தான்.  1945-ல்  ஜோசப் சிரில் பாம்ஃபோர்டு முதல் இயந்திரத்தை வடிவமைத்தார். டிப்பிங் டிரெய்லரான (லக்கேஜ் டிரெய்லர்) இது போர் உபரி பாகங்களில் இருந்து கட்டமைக்கப்பட்டது.
இது அந்த சமயத்தில் மார்க்கெட்டில் 45 பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்டது அதாவது தற்போதைய நிலையில் பார்த்தால் 4 ஆயிரம் ரூபாய் தான்.  அப்போது இந்தியாவில் சவரன் தங்கம் ரூ.195 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில்  ரோடு ரோலர் போல மெதுவாகத் தான் ஜேசிபி இயந்திரங்கள் சாலைகளில் பயணித்தன. ஆனால் அந்த நிலையும் பின்னாளில் மாறியது. 
உலகின் முதல் மற்றும் வேகமான ஸ்பீடு டிராக்டரான ஃபாஸ்ட்ரேக்கை கடந்த 1991ம் ஆண்டு ஜேசிபி நிறுவனம் உருவாக்கியது. இது 65 கிமீ வேகமுடையதாக இருந்தது. ஆனால் சென்ற ஆன்டில் நவம்பர் 16 ஆம் தேதி உலகின் அதிவேக டிராக்டரை ஜேசிபி நிறுவனம் 153 கிமி வேகத்தில் செல்லக்கூடிய ஃபாஸ்ட்ரேக் மாடலை அறிமுகம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.
ஜேசிபி பற்றி பெருமையாகச் சொல்லும் போது இப்படி சொல்வர்கள். மண் அள்ளும் இயந்திரம் என்றாலே ஜேசிபி என்று தான் பெயராகி விட்டதால் அதே போல் இயந்திரத்தை தயாரித்து விற்கும் இன்னொரு பிரபல நிறுவனமும் கூட ஜேசிபி இயந்திரம் என சொல்லி தான் விற்பார்களாம்.

இது மட்டுமல்ல, ஜேசிபி  பற்றிய  இந்த விசயம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஜேசிபி நிறுவனம், தொடங்கப்பட்ட போது 1948ம் ஆண்டில், ஜேசிபி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் ஆறுதான். ஆனால் இன்று அந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 11 ஆயிரத்திற்கும் 
அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த கொரானா சீசனில் கூட ஒரு தொழிலாளியைக் கூட வீட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்த அந்நிறுவனம் உற்பத்தி  மற்றும் விற்பனை பிரிவுகளில் பணியாற்றும் அத்தனை ஊழியர்களுக்கும் மாதா மாதம் முழுச் சம்பளத்தையும் ஊழியர்கள் கணக்கில் தவறாமல் செலுத்தி விட்டதாம்.. இத்தனைக்கும் உற்பத்தி ஜீரோ வாக இருந்த சமயம் அது.. ஜேசிபி யில் வேலை கிடைக்க வேண்டுமென்றாலும் சரி ஏஜென்சி எடுக்க வேண்டுமெண்றாலும் சரி, நீங்கள் குறைந்த பட்சம் பி.இ படித்திருக்க வேண்டும் என்பது கொசுறு தகவல்.
எல்லாம் சரி பள்ளம் தோண்டுதல், இடித்தல் , பாரம் சுமத்தல் ஆகிய வேலைகளை செய்யும் ஜேசிபி என்கிற இயந்திரம் வராமலிருந்தால்  கட்டு
மானத் துறையில் நிலவரம் என்ன ஆகி இருக்கும்.?
எத்தனை மனித உழைப்பு தேவைப்படும், வேலை நேரம்? நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. அதே சமயம் ஜேசிபி, கிரேன்கள் இல்லாமல்  நம் பாட்டன்மார்கள் கட்டிய கல்லணையும், பெரிய கோயிலும் நமக்கு இன்னும் பெரும் பிரமிப்பைத் தருகிறது.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087253