மேல் தரையே கற்தரையாக இருந்தால் அடித்தளம் அமைப்பது எப்படி? பொறி. ஆ . பிரகதீஸ்வரன்,
கட்டடங்கள் கட்டும் போது சில நிகழ்வுகளில் மேல் தரையிலேயே கற்தரைகளும் கடினப் பாறைகளும் இருக்கின்றன. குறிப்பாக உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, இந்தமலைகளில் மேல் தரையே கற்களால் ஆன பாறையாக அமைந்துள்ளது. அங்கெல்லாம் கட்டடம் கட்டும் போது எத்தகைய வடிவமைப்பை மேற்கொள்கிறார்கள்.
1. இந்த அடிமனைகளில் மேலே இருக்கும் தரை மண்ணை (300mm) எடுத்து மட்டம் செய்து 500மி.மீ X 500மி.மீ இடைவெளிகளில் கற்பாறையிலுள்ள 200மி.மீ ஆழத்திற்கு துளைகள் இடுகிறார்கள்.
2. அந்த துளைகளிலுள்ள பிணைப்புக் கம்பிகளை (Dowel Bar) மட்டத்திற்கு மேலே நீட்டிக் கொண்டிருக்குமாறு நிறுத்தித் துளையை சிமெண்ட் கலவையைக் கொண்டு அழுத்தமாக மூடுகிறார்கள்.
3. அதற்கு மேலே போடப்படும் அடித்தளத்தைப் பிடித்துக் கொள்ளுமாறு பிணைப்புக் கம்பிகளை மூடி கான்கிரீட் போடுகிறார்கள். இதனால் அடித்தளங்கள் நன்றாக பாறையோடு பிணைக்கப்பட்டு நகர்வதோ அசைவதோ இல்லை. மலைப்பாங்கான இடங்களில் இப்படித்தான் அடித்தளம் அமைக்கப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரம் என்ற ஒன்று இருக்கிறதா? - ஜீ.முருகன்
நான் சந்திக்கும் 90 சதவீதமான பேர் தங்களை ஒரு கட்டிடப் பொறியாளர்கள் போலவோ, வாஸ்து சாஸ்திரிகள் போலவோதான் எண்ணிக்கொண்டு ஆலோசனை வழங்குவார்கள். இப்படியானவர்களிடம். 1894 ஆம் வருrம் வெளிவந்த செஞ்சி ஏகாம்பர முதலியார் எழுதிய நூதன மனைஅடி சஸ்திரம் படிச்சிருக்கீங்களா? என்று கேட்பேன். அவர்கள் இல்லை.... எனத் தயக்கத்துடன் தலையாட்டுவார்கள். நீங்க சொல்ற எதுவும் அதில் இல்லே. “அவுங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’ன்னு எதுக்கு மத்தவங்கள குழப்புறீங்க?’ என்பேன். அவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.
நம் பாரம்பரிய வீடுகள் அவை கிழக்கே பார்த்திருந்தாலும் மேற்கே பார்த்திருந்தாலும் சமையல் அறைத்தோட்டத்துப் பக்கம் தான் இருக்கும்.அக்னி மூலை ,வாயு மூலை எல்லாம் அப்போது இல்லையா என்ன?
100 சதவீதம் வாஸ்து சாஸ்திர விதிகளை (அப்படி ஒன்று இருக்குமானால்) பின்பற்றிதான் நான் வீடு கட்டுவேன் என நீங்கள் அடம்பிடித்தால் (நீங்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு) உங்கள் வசதிக்குத் தேவைப்படும் உங்களுக்கு விருப்பமான ஒரு வீட்டைக் கட்டி முடிக்க முடியாது என்பதே 101 சதவீத உண்மை. உங்கள் விருப்பத்துக்குக் கட்டிய வீட்டில் நுழையும் ஒருவர் அந்த அறை இங்கே இருக்கக் கூடாதே எனச் சொல்வர் என்றால் அவர் இங்கிதம் இல்லாத, உங்கள் வாழ்க்கைப் போக்குக்கு விரோதமான ஒருவராகவே இருப்பார். அவரைப் பற்ஷீ நீங்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும். அவர் பேச்சைக் கேட்டு நீங்கள் ஏன் பதற்றம் அடைய வேண்டும், ஏதாவது கெட்டது நடந்தால் இதனால்தான் அது நடந்ததோ என ஏன் கலக்கமுற வேண்டும்? வீடு என்றால் நல்லதும் கெட்டதும் நடந்தே தீரும். இப்படி வீடு கட்டினால் அதில் வசிக்கும் யாரும் நோய்வாய் படமாட்டார்கள் சாக மாட்டார்கள் என்று எந்த வாஸ்து சாஸ்திரியாவது உறுதி தருவார்களா?
ஒரு தெளிவான திட்டத்தோடு வீடு கட்டத் தொடங்கிவிட்டால் இந்த அதி மேதாவிகளின் இலவச ஆலோசனைகளை (நம் மூளைக்கு எந்தச் சேதமும் இல்லாமல்) ஒரு காதில் வாங்கி மறு காதில் வெளியேற்றிவிட்டு நம் வேலையைப் பார்ப்பதே உத்தமம்.
கிணறுகள் இருந்தால் என்ன செய்வது? பொறிஞர். அ.வீரப்பன்
எங்களுக்குத் தெரிந்த கட்டுநர் ஒருவர்-இதில் பதிப்பித்துள்ள ஒளிப்படத்தை அனுப்பி-ஒரு கட்டட அடித்தளத்திற்கு வேண்டிய தனித்தனி குழிகள் (For Isolated Footing Foundation) எடுக்கும்போது ஒரு குழியில் கிணறு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் எப்படி அடித்தளம் அமைப்பது? என்று கேட்டார். அதற்கு எங்களின் பதில்
1. அந்த பழைய உறை கிணறு (3’0”அடி விட்டமுடையது) பகுதியை கல்லுடைத்தூள் : செஞ்சரளை மண் 1:3 ( Stone Crsuher Dust : Gravel Mix 1:3 / கிராவல் கிடைக்காதபோது Stone Crushed Dust Mix 1:10- semi dry ) கலந்து கொஞ்சமாகப் போட்டு திமிசு கொண்டு கெட்டிப்படுத்த வேண்டும்.
2. மேல் பகுதியில் 1’0”ஆழத்திற்கு மட்டும் lain Cement Concrete 1:5:10 கலந்து போட்டு மூடிட வேண்டும்.
3. இதற்குமேல் எப்பொழுதும் போல Isolated Footing அடித்தளத்திற்குரிய Pளீளீ மற்றும் யூளீ ணூவிலியிழிமிed ய்லிலிமிஷ்ஐஆ போட்டு அடித்தளத்தை அமைத்திட வேண்டும்.
4. பெரிய திறந்த வெளிக்கிணறாக இருந்தால் (10’ X 12’ அளவில்) இருந்தால், 5 அடி ஆழத்தில் 5’0” x 15’0” x 1’6” அளவில் RCC Concrete Pedestal slab கொண்டு மூடி அதன்மீது அடித்தளம் அமைக்கலாம்.
5. இல்லாவிடில் கிணற்றிற்கு முன்பாக திசைகளிலும் தொலைவிலேயே Eccentric Footing போட்டு Cantilever Beam (Designed) நீட்டி மேற்கொண்டு கட்டுமானத்தைத் தொடரலாம்.
நீர் பரிசோதனை பெட்டி : பொறி. முருகவேல்
கட்டுமானப் பணியிடங்களில் தண்ணீரை மாசுபடாமலும், வீணாக்காமலும் முறையாக கையாளவேண்டியது இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. இப்போது சாதாரண, பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தண்ணீர் சோதனைப் பெட்டி (Water Testing Kit) தற்போது தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் முறையாக பழக்கத்
திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லவும் மற்றும் தண்ணீரின் தரத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் எளிதாக உள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் உருவாக்கப்பட்ட இந்த சோதனைப் பெட்டி, சோதனை செய்யப்பட்டு அதற்காக A Grade தரச் சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளது. இந்த பெட்டியை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் இலவசமாக வழங்கப்பட்டு தரத்தை தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பூர், காங்கேயத்தில் உள்ள பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் (Builders Engineering
College) கட்டுமான பொறியியல்துறை (Department of Civil Engineering) சிறப்பு முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.. இதில் கீழ்க்கண்ட அளவுருக்கள் (Pழிrழிதுeமிerவி) குறைந்த நேரத்தில் சோதனை செய்யப்பட்டு மக்களுக்கு முடிவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
1.பி.ஹெச் (pH), 2.காரத்தன்மை (Alkalinty), 3.குளோரடு (chloride), 4.மொத்த கரைசல் உப்புகள் (TDS), 5.புளூரைடு (Fluoride),6.இரும்பு (iron), 7.நைட்ரெட் (Nitrate), 8.நைட்ரைட் (Nitrite), 9.மொத்தக் கடினத்தன்மை (Total Hardness), 10.அம்மோனியா (Ammonia), 11.பாஸ்பேட் (Phosphete), 12.மீதமுள்ள குளோரின் (Residual Chlorine). சோதனை தண்ணீரை, சோதனைப் பெட்டியில் உள்ள தேவையான standard solution உடன் கலக்கும்போது ஏற்படும் நிற மாறுதல்களை அதற்கான வண்ண விளக்கப்படத்துடன் (colour chat) ஒப்பிட்டு அளவுருக்களின் (parameters) தர அளவுகளை உடனே தெரிந்து கொள்ளலாம்.
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் குடிநீரின் தரம், கழிவுநீரின் அசுத்தத் தன்மை ஆகியவற்றை விரிவாக அறியும் சோதனைக் கூடம் உள்ளது. இங்கு, தண்ணீர் , கழிவுநீர் ஆகியவற்றின் தரம் பரிசோத்திக்கப்பட்டடு , தர அளவுகோல்களுக்கு சான்றிதழ் (certificate) வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு
முனைவர் : இரா. லோகநாதன்,
பேராசிரியர், பில்டர்ஸ் பொறியியல்
கல்லூரி, அலைபேசி: 99655 63386.
திரு.ந.உச்சிமுத்து, உதவி பேராசிரியர்,
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, 94886 60136.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087258
|