செங்கல் சுவர்கள் ஒரு பக்கமாகச் சாய்வதேன்? கூரைப் பலகத்தில் விரிசல் விழுவதேன்? பொறிஞர்.அ.வீரப்பன்
16 அக்டோபர் 2020   11:14 AM



சென்ற வாரம் மிகவும் தெரிந்த பொதுப் பணித்துறைப் பொறியாளர் - (ஓய்வு பெற்றவர்) நண்பர் ஒருவர் எம் அலுவலகம் வந்து கட்டுமானம் தொடர்பாகச் சில அய்யங்களை எழுப்பினார்.
அவருடைய வீடு 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாரந்தாங்கும் சுவரமைப்புடையது. சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ளது. தரைத்தளம் + முதற்தளமுடையது. Madras Terrace எனப்படும் கூரை வகைப்பட்டது. 6 மாதங்களுக்கு முன் அவர் வீட்டுச் சுவரை ஒட்டி பக்கத்து வீட்டுக்காரர் கார் நிறுத்தக் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளார். 


கொட்டகையின் தென்பகுதிக் கூரை இவர் வீட்டுப் பொதுச்சுவரில் (1’1 1/2 = 340 மிமீ அகலம் கொண்டது) 4” (100மிமீ) அளவுக்கு உள்நுழைத்து கூரை போடப்பட்டுள்ளது. இது தவிர இவர் வீட்டு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு G+2 தள வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் அடித்தள ஆழம் 10’0” (3.00 மீ) வரை மண்
ணைத் தோண்டிப் போடப் பட்டுள்ளன. ஆனால் இவருடைய வீட்டு அடித்தளம் 7’0” அடியில் அமைக்கப்பட்டது.


கடந்த 2015 கன மழைக்குப் பின் (சென்னை மாநகர் ஒரு வாரத்திற்கு வெள்ளத்தில் மிதந்தது), இவருடைய Madras Terrace கூரைத்தளத்தில் சுவர்களுக்கு இணையாக நேர்க்கோடு போட்டது போல - விரிசல் விழுந்துள்ளது. சிறிய நுண்ணிய விரிசல்தான். அதன் வழி நீர்க்கசிவு ஏற்பட்டுச் சுவர்களிலும் படர்ந்துள்ளது.


இந்தக் கூரைத் தள விரிசல் ஏன் ஏற்பட்டுள்ளது? இதை எப்படிச் சரி செய்வது என்று கருத்துரை கேட்டார்.


இந்த வீட்டுக் கட்டடம் முழுமையான முறையில் பார்வையிடப் பட்டது. பக்கவாட்டுச் சுவர்களில் எந்த விரிசலும் விழவில்லை. அடித்தள மட்டத்திலும் (சன்னல் கீழ் மட்டம் & மேல் மட்டம்) தரைத்தள மட்டத்திலும் எந்த இறக்கமும் இல்லை. அடித்தள மண்ணும் களிமண்ணாக இல்லை. வண்டல் கலந்த மணலாகவே உள்ளது. 


இவ்வீட்டின் இடப்பக்கக் கட்டமும் வலப்பக்கக் கட்டடமும் இந்த வீட்டு அடித்தளத்திற்குக் கீழே 10’1” அடி ஆழம் எடுத்து அடித்தளம் அமைத்தமையால் - இவருடைய இருபக்கச் சுவர்களும் (7’0” அடி ஆழத்தில் அடித்தள முடையவை) மிக மிக மிக நுண்ணிய அளவில் இருபக்கங்களும் மிக மிகக் குறைவாய் எதிர் எதிர்த் திசையில் சாய்ந்திருக்கலாம். 


இதனால் கூரைத்தளம் விரிவடைந்து (Under tension due to minute elongation) கூரைத் தளத்தில் மேற்புறத்தில் நுண்ணிய விரிசல் - நேர்க்கோடு போட்டது போல் ஏற்பட்டிருக்கிறது. 2015க்குப் பின்னர் இந்த விரிசல் மேலும் விரிவடையாமல் (Dormant )  அதே அளவில் உள்ளது.


விரிசலை மறைக்கும் விரிசல் நிரப்பு (Crack Filler)  கொண்டு விரிசலில் v பள்ளமெடுத்து அழுத்தத்துடன் நிரப்பச் சொன்னோம். கூரைத்தளத்தின் மீது விரிசலுக்கு இருபக்கங்களிலும் நீர்த்தடுப்பு வேதியியல் திரவத்தில் இருபூச்சுகள் பூசி - அத்தளத்தில் ஏழு நாட்கள் தண்ணீர் நிறுத்திப் பார்த்தில் ஈரக் கசிவு ஏற்படவில்லை. விரிசலும் முற்ஷீலுமாக அடைக்கப்பட்டது. எனவே பக்கவாட்டுச் சுவர்கள் நுண்ணிய அளவில் சாய்ந்தாலும் இத்தகைய விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087306