சிவில் சைட் எஞ்ஜினியர் :
கட்டுமானப் பணியிடங்களில் சைட் பொறியாளராக, சைட் மேற்பார்வையாளராக பணியாற்ற கூடிய பொறியியல் பட்டய, பட்டதாரிகளுக்கு இந்த சிவில் சைட் எஞ்ஜினியர் ஆப் மிகவும் பயனுள்ளதாகும். பணியாளர்கள் வருகை, மெட்டிரியல் ஸ்டாக், மெட்டிரியல் கணக்கீடு, மெட்டிரியல் பர்சேஸ்,பணிக் கண்காணிப்பு என பல வழிகாட்டி அம்சங்கள் மற்றும் உள்ளீடுகள் இதில் உள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி வெளியான இந்த செயலி வெறும் 4.8 எம்பி அளவுடையது.இதுவரை ஒரு லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் அறிமுக வெர்சன் முற்ஷீலும் இலவசம்.
கன்ஸ்ட்ரக்ஷன் எஸ்டிமேட்டர்:
கட்டுமானப் பணிகளுக்கான பலவித மெட்டிரியல் எஸ்டிமேட்டர் ஆப்கள் ஏற்கெனவே பல வந்திருந்தாலும், இந்த செயலி மிகவும் அட்வான்ஸானது. பள்ளி, வீடு,மால் என அனைத்து வகைக் கட்டடங்களுக்கும் ஏற்ற அஸ்திவாரம், தளம், சுவர் என எந்த வகைப் பணியாக இருந்தாலும் அதற்கேற்ற மெட்டிரியல் கொள்ளளவு கணக்கீடுகளை இந்த ஆப் கன கச்சிதமாக செய்கிறது.
சிமெண்ட்,ஸ்டீல், மணல், ஜல்லி, தண்ணீர், டைல்ஸ்,மார்பிள்,பெயிண்ட்,டிம்பர், பைப் என எல்லாப் பொருட்களுக்கும் இதில் கணக்கீடுகள் உண்டு. சந்தை நிலவரத்தைப் பொறுத்து காஸ்ட் அக்கவுண்டிங்கும் செய்து கொள்ளலாம்.
சிவில் மெட்டிரியல் டெஸ்டர்:
ராஜ்கோட்டைச் சேர்ந்த தர்சன் பொறியியல் தொழிற்நுட்பக் கல்லூரியின் கணிப்பொறி துறைமாணவர்கள் & ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த ஆப் 2018ல் வெளியாகி இருந்தாலும் இப்போதுதான் பரவலாக அறியப்படுகிறது.அறிமுகப் பொறியாளர்களுக்கு பயனுள்ள இந்த செயலியில் பலவித கட்டடப் பொருட்கள் மற்றும் கட்டடப் பணிகள் ஆகியவற்றைப் பொறுத்து சோதனை அளவீடுகளின் தர நிர்ணயப் பட்டியல் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. இதைக்கொண்டு பொறியாளர்கள் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணிகளுக்கு ஏற்ற மிக்ஸ், டிசைன் போன்றவற்றின் பலதரப்பட்ட தர நிர்ணயங்களை உறுதி செய்யக் கொள்ள வேண்டும்.
பில்டர் கால்குலேட்டர்:
வீடு கட்டுவோர் சிவில் பொறியாளர்களிடம் செல்வதற்கு முன், புதிய வீட்டின் அளவுகள் குறித்து பட்ஜெட் போட இந்த, ஆப் பேருதவியாக இருக்கும். அனிக் ஸ்டூடியோ நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம்.
புதிய கட்டடத்தின் அஸ்திவாரம் எப்படி இருக்க வேண்டும், அதன் அளவுகள் அடிப்படையில் கான்கிரீட் தேவையை மதிப்பீடு செய்யலாம். ரெடிமிக்ஸ் கான்கிரீட் வாங்குவோர். அதற்கான அளவுகளை கணக்கீடு செய்யலாம்.
சுவர்களின் அளவுகளை கணக்கிட்டு, அதற்கு எவ்வளவு செங்கல் தேவைப்படும் என்பதையும் தூண்கள் பீம்கள், தளம் ஆகியவற்றுக்கு எவ்வளவு டன் கம்பிகள் தேவை என்பதையும் கணக்கீடு செய்ய இந்த ஆப் உதவுகிறது.
3டி ஹோம் டிசைன்:
உங்கள் எண்ணத்தில் உள்ள கனவு இல்லத்தை கட்டுவதற்கான வடிவமைப்புகளை பரிந்துரைக்கும், ஆப் இது. தமிழக சூழலுக்கு ஏற்ற தனி வீடுகள், சிறிய அளவிலான அபார்ட்மென்ட்கள், பங்களாக்களின் மாதிரி வடிவங்கள் இதில் கிடைக்கும்.
இந்த ஆப் பயன்படுத்தி, உங்களுக்கு ஏற்ற அறைகளின் மாதிரிகளையும், வீட்டின் வெளிப்புற தோற்றத்தையும் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் வரைய வேண்டிய அவசியம் இதில் இல்லை.
வடிவ அளவுகளை உள்ளீடு செய்தால் அதற்கு ஏற்ற வகையிலான மாதிரிகள், முப்பரிமாண வரைபடங்கள் கிடைக்கும். புதிய வீட்டின் அறைகள் குறித்த உங்கள் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் தளமாக இது உள்ளது.
மை கேட்:
அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாவல் பணிக்கு உதவும் ஆப். உங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளுக்கு, வெளியாட்கள் வரும் போது அவர்கள் குறித்த விபரத்தை கேட்டில் இருக்கும் பாதுகாவலர் இதில் உள்ளீடு செய்தால், அது உடனடியாக வீட்டு உரிமையாளருக்கு சென்றுவிடும். வந்திருப்பவர் யார்? என்பதை அறிந்து, உரிமையாளர் அனுமதித்தால் மட்டுமே வெளியாட்கள் உள்ளே வர முடியும். உரிமையாளர்
அழைத்ததன் பேரில் வெளியாட்கள் உள்ளே வர முடியும். அவ்வாறு அனுமதியுடன் வெளியாள் வரும்போது, அவர் குறித்த விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்து ஒப்புதல் அளிக்கலாம். எப்போது, யார் எந்த வீட்டுக்காக வந்தார்கள், என்ன வாகனத்தில் வந்தார்கள் என்பது போன்ற விபரங்களை
துல்லியமாக பதிவு செய்ய இந்த ஆப் பேருதவியாக இருக்கும்.
பில்ட் சப்ளை!
கட்டுமானப் பணியின் போது செலவு கணக்குகளை பதிவு செய்ய உதவும், ஆப் இது. இந்திய சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மணல் செங்கல் கம்பி போன்ற பொருட்களை வாங்கும் போது அது குறித்த விபரங்களை மொபைல் போனிலேயே பதிவு செய்வதால் எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்க முடியும். இதற்கு முன் என்னென்ன பொருட்கள் வாங்கினோம், புதிதாக எவ்வளவு வாங்குகிறோம் என்பதை பட்ஜெட் போட்டு இது கொடுத்துவிடும். மேலும், பணியாளர்களை பயன்படுத்துவதற்கு இதில் எளிதான பட்ஜெட் போட முடியும். ஒரு வேலைக்கு எவ்வளவு பொருட்கள் தேவை? எத்தனை பணியாளர்கள் தேவை ? என்பதை ஒருங்கிணைந்த முறையில் கணக்கிட இது பயன்படும்.
பைப்பிங் ரெபரன்ஸ் ப்ரோ:
கட்டடங்களில் மேற்கொள்ளப்படும் பிளம்பிங் பணிக்கான வடிவமைப்பு களுக்கு வழிகாட்டும் ஆப் இது. பிளம்பிங் குறித்த பொதுவான அறிமுகத்தை அளிக்கிறது. இதனால் கட்டுமானத்துறை நுட்பங் களை எளிமையாக அனைவரும் புரிந்துக் கொள்ள முடியும். உங்கள் வீட்டு பிளம்பிங் பணிக்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று பிளம்பர் கூறுவதை சரி பார்க்க இது உதவியாக இருக்கும்.
சிக்கலான இடங்களில் பிளம்பிங் பணிகளை மேற்கொள்ள குழாய் இணைப்புகள் எப்படி இருக்க வேண்டும். அதற்கு தேவையான பொருட்கள் குறித்த வழிகாட்டுதலை இது அளிக்கிறது.
கட்டுமான துறையில் பணிபுரியும் நபர்களுக்கும் பல்வேறு நுட்பங்களை சுட்டிக்காட்டும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டு நிலையில் உள்ள கட்டடத்தில் ஏதாவது பிளம்பிங் பிரச்சனை என்றாலும், அதை சரியாக தெரிந்துக்கொள்ள இந்த ஆப் உதவிகரமாக இருக்கும்.
மேஜிக் பிளான்!
புதிய கட்டடங்களுக்கு வடிவமைப்புகளை உருவாக்க உதவும், ஆப் இது. வழக்கமாக காலியான பகுதிகளில் அடிப்படை அளவுகளை உள்ளீடு செய்து அதற்கு ஏற்ப வடிவமைப்புகள் உருவாக்கப்படும். ஆனால், இந்த மேஜிக் பிளான் ஆப் பில் கட்டி முடிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் கட்டடத்தின் புகைப்படத்தை உள்ளீடு செய்து அதன் வடிவமைப்புகளை உருவாக்க முடியும். இதனால் கட்டட வடிவமைப்பாளர் உதவியின்றி அடிப்படை வடிவமைப்புகளை உரிமையாளர்களே உருவாக்கலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087320
|