100 வருடங்கள் நன்றாக இயங்கவல்ல கான்கிரீட் வீடுகள் 20 அல்லது 25 வருடங்களில் பழுதடைவது ஏன்? கான்கிரீட் கட்டடங்கள் பழுதடைய ஒரு முக்கிய காரணம் வலுவூட்டும் இரும்பு கம்பி துருபிடிப்பது தான். கம்பி துரு பிடிப்பது ஏனென்றால் கட்டுமானம் அமைக்கும்போது ஏற்படும் பிழைகளே! இந்த பிழைகளை தவிர்க்காவிட்டால் 100 வருடங்கள் நன்றாக இயங்கக்கூடிய கட்டுமானம் 15 அல்லது 20 வருடங்களில் பழுதடைந்து விடுகிறது. கட்டடம் அமைக்கும் போது ஏற்படும் பிழைகளை முதலில் பட்டியலிடுவோம்.
கட்டுமானம் அமைக்கும் போது ஏற்படும் பிழைகள்:-
1. கட்டடத்தின் பளுதாங்கும் அளவை நிர்ணயிக்காமல் கட்டடத்தின் பாகங்களை வடிவமைக்காமல் கட்டுமானத்தை அமைத்தல்.
2. புயல், பூகம்பம் போல் இயற்கை சீற்றத்தின் போது ஏற்படும் லோடை கணக்கிடாமல் கட்டுமானத்தைத் அமைத்தல்.
3. கட்டுமான பொருள்களின் தரத்தை சரியாக கடைபிடிக்காமல் கட்டுமானத்தை அமைத்தல்.
4. கட்டடத்தின் மேல் அதிகப்படியான லோடு ஏற்றுதல், அதாவது வடிவமைக்கும்போது 200 kg/sqm என்ற அளவுக்கு வடிவமைத்து கட்டடத்தை உபயோக படுத்தும்போது
கோடவுனாக 1000 kg/sqm லோடு ஏற்றுதல்.
5. கட்டுமானம் அமைக்கும் போது கவனம் செலுத்தாமை.
6. இரும்பு கம்பி அமைக்கும்போது டீ டெய்லிங் சரிவர செய்யாமை,
7. கட்டடங்கள் சரிவர பராமரிக்காமை.
8. மேலே கூறிய காரணங்களால் வலுவூட்டும் இரும்புதுரு பிடித்தல்.
இரும்புத் துருபிடித்தல் :-
கட்டுமானத்தில் இரும்பு துருபிடித்து கட்டடம் பழுதடைவதை படம் 2 ல்
காணலாம். கட்டடம் பழுதடைவதற்கு இரும்பு துருபிடித்தல் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. ஆகவே இந்த பிழையை தவிர்க்க நாம் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளை சுருக்கமாக பார்ப்போம்.
இரும்ப துருபிடிக்காமல் இருக்க கவனிக்க வேண்டிய விதிமுறைகள்:-
1. இரும்பு கம்பி கட்டி கட்டடம் அமைக்கும்போது கான்கிரீட் செய்வதற்கு இரும்பு கம்பி இடையே குறைந்தது 50 mm இடைவெளியாவது இருக்க வேண்டும். இரும்பு மிக அடர்த்தியாக இருக்க கூடாது.
2. வலுவூட்டும் இரும்பு மண், தண்ணீர் அல்லது மணல் தரை போன்ற இடங்களில் தரக்குறைவாக சேமிக்க கூடாது. இவ்வாறு சேமித்தால் இரும்பு கான்கிரீட் அமைப்பதற்கு முன்பே துரு ஏற வாய்ப்பு உள்ளது.
3. கான்கிரீட் அமைப்பதற்கு சேர்க்கப்படும் பொருள்களில் உப்பு தன்மை இருக்க கூடாது. முக்கியமாக மணல் மற்றும் ஜல்லி, தண்ணீர் இவைகள் சுத்தமாக உப்பு தன்மை இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
4. இரும்பு கம்பியை நன்றாக ஒயர் பிரஷ் கொண்டு சுத்தம் செய்த பின்னரே கான்கிரீட்டின் உள் அமைக்க வேண்டும்.
5. கான்கிரீட் அமைக்கும் போது தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதாவது சரியான தண்ணீர் சிமெண்ட் விகிதம் மற்றும் நல்ல பாரம் ஒர்க், மேலும் சரியான நீர் ஆற்றல் ஆகியவை மிக முக்கியம்.
6. கான்கிரீட் அமைக்கும் போது கவர் மிக முக்கியம். சரியான கவர் அமைய கவர் பிளாக் அமைக்க வேண்டும்.
7. கிரேட் 30 n/mm2 மேல் கான்கிரீட் இருக்க வேண்டும். கான்கிரீட் அமைத்த பிறகு அதன்மேல் பரப்பில் சரியான கோடிங் கொடுத்து கான்கிரீட்டை பாதுகாக்க வேண்டும்.
இரும்பு துரு பிடித்தலை தவிர்த்தால் கட்டடம் பழுதடையாமல் நீடித்து உழைக்கும்